கட்சித் தலைவராக யார் வந்தாலும் – காங்கிரஸ் leader …ராகுல் காந்திதான் – ப.சிதம்பரம் வெளிப்படையான பேட்டி –

………………………….

ராகுல் காந்தி அவர்கள் நடைப்பயணம் துவங்கிய
3-ஆம் நாள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட பேட்டி இது.

பேட்டி எடுப்பவர், முக்கியமானதொரு நேரத்தில்
கேள்விகளை கேட்கிறார்… இந்த கால கட்டத்திற்கு
பொருத்தமான,

நாமே கேட்க விரும்பும் – அவசியமான கேள்விகளை –
எந்தவித தயக்கமுமின்றி – நேரடியாகக் கேட்கிறார்.

பதில் சொல்லும் ப.சிதம்பரம் அவர்கள், நழுவாமல்,
வழுக்காமல் – வெளிப்படையாக எல்லா கேள்விகளுக்கும்
யதார்த்த நிலையில் நின்று பதில் அளிக்கிறார்.

ப.சி.அவர்களை நமக்குப் பிடிக்குமா, பிடிக்காதா…?
அவர் சொல்லும் கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா
இல்லையா என்பதை எல்லாம் தாண்டி,


பல முக்கியமான கேள்விகளுக்கு நேரடியான பதில்கள்
கிடைக்கின்றன என்கிற முறையில் வரவேற்கப்பட
வேண்டிய ஒரு பேட்டி இது.

………

.
………………………………………………………………………………………………………………….…………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கட்சித் தலைவராக யார் வந்தாலும் – காங்கிரஸ் leader …ராகுல் காந்திதான் – ப.சிதம்பரம் வெளிப்படையான பேட்டி –

  1. ராம் சொல்கிறார்:

    shashi throor catches it ——

  2. புதியவன் சொல்கிறார்:

    ஜாதிகளுக்குள்ளேயே வேறுபாடு, வெறுப்புணர்வு, பார்ப்பனீயம் என்று சொல்லி ‘கடவுள் இல்லை’ என்றெல்லாம் சொல்பவர்களை வளர்த்து, கோவிலுக்கு எதிரேயே ‘கடவுள் இல்லை’ என்ற கேப்ஷனோடு சிலை வைத்தபோதும், பிராமணர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு, மக்களிடையே பிளவு ஏற்படுத்தியபோதும், ப சிதம்பரமோ இல்லை இப்போது சிறுபான்மையினர் அச்சத்தில் இருக்கிறார்களே என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்களோ, எதிர்க்குரல் எழுப்பிப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது பெரும்பான்மையினரின் வாக்கு வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாடுதானே கட்சிகளிடம் இருந்தன.

    பாஜக பெரும்பான்மையினரின் மத உணர்வைத் தட்டி எழுப்பியிருக்கிறார்கள். வாக்குகளுக்காக மட்டுமே மற்ற கட்சிகள் சிறுபான்மையினர் சார்பாக நடந்துகொள்கின்றன என்பதை இந்துக்களுக்குப் புரியும்படிச் செய்திருக்கிறார்கள். இப்படிச் செய்தது ‘தவறு’ என்று சிதம்பரம் கூறுவாரேயானால், பிராமணர்களுக்கு எதிராக கட்சிகள் நடந்துகொண்டதும் அப்படித்தானே. கோவிலுக்கு எதிராக ஆட்சியாளர்கள் நடந்துகொள்வதும், தமிழகத்தில் இந்து எதிர்ப்பு என்ற ஒரே ஆயுதத்தை திமுக பயன்படுத்துவதும் தவறுதானே. அதற்கு ப.சி என்ன பதில் வைத்திருக்கிறார், ராஜ்ஜிய சபா சீட்டைப் பிச்சை எடுப்பதைத் தவிர? (இவ்வாறு எழுதியதற்கும் காரணம் இருக்கிறது. பேட்டியில், இன்றைக்கு பாஜகவைத் தீவிரமாக எதிர்க்கும் கட்சிகள் ஒரு மாநிலத்தில் உள்ள கட்சிகள் என்று சொல்லி லிஸ்ட் போடும் ப.சி, திமுகவைக் குறிப்பிடவே இல்லை. மம்தா, அகிலேஷ் என்று லிஸ்ட் போடுபவர், ஸ்டாலினைக் குறிப்பிட பயப்படுகிறார். அவர்கள் மாத்திரம் அகில இந்தியக் கட்சியா? திமுகவைப் பற்றிப் பேசினால் அப்புறம் யாரிடம் போய் சீட்டுக்குக் கை ஏந்துவது?)

    நாட்டின் நலனுக்காகவா குற்றம் செய்த இத்தாலியர்களை அவர்கள் நாட்டிற்கு அனுப்பிவைத்தார் சோனியாவும் காங்கிரஸ் கட்சியும்? ‘மதச்சார்பற்ற நிலை’ என்பதுதான் தமிழகத்தில் கிறிஸ்துவர்களை மாத்திரம் யாத்திரையில் சேர்த்து, அவர்களது இடங்களில் மாத்திரம் தங்கி, இந்திய எதிர்ப்பாளர்களுடன், தேச விரோதிகளுடன் ராகுல் காந்தியை பயணம் செய்யவைத்தது? இதுதான் ‘மதச்சார்பின்மையா?’

    //பிரதமருக்குக் கைப்பாவையா அமைச்சர்கள்// – மன்மோகன் சிங் பொம்மை என்பதால், அவரையே மீறி காங்கிரஸ் அமைச்சர்கள் கொள்ளையடித்தார்கள் என்றுதானே பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதனால் காங்கிரஸின் 10 ஆண்டுகளில் அமைச்சர்கள் பிரதமரின் கைப்பாவையாகச் செயல்படவில்லை என்பது உண்மைதான். ‘Shut up. You don’t know anything in politics’ என்று மன்மோகன் சிங்கையே மிரட்டி சுருட்டியதால்தானே அடுத்த அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற முடியாமல் போயிற்று. இதெல்லாம் தெரிந்ததனால்தான் தைரியமாக பசி இதனைச் சொல்கிறார்.

    கட்சியில் சமீபத்தில் சேர்ந்துவிட்டு, அவரால் தன் காலத்தில் ஒரு உதாரணத்தையும் சொல்லமுடியவில்லை. அவரால் சொல்ல முடிந்தது காந்தி, தண்டி யாத்திரை, நேரு அவ்வளவுதான். ‘தொண்டர்களோடு நெருக்கம் வேண்டும், தொகுதி மக்களைச் சந்திக்கவேண்டும் அது இது என்று இவர் சொல்கிறார்’. இவர் அமைச்சராக இருந்தபோது சிவகங்கை பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறாரா? ‘இலவசம்’ பற்றி இவர் சொல்வது மாத்திரம் லாஜிக்கலாக இருக்கிறதா? 50 திவாலான கம்பெனிகளுக்கு யார் ஒப்புதலுடன் வங்கிகள் கடன் கொடுத்தன? காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள்தானே அதற்குக் காரணம்?

    ‘சொல்வது யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பதற்கு பசி ஒரு எடுத்துக்காட்டு. இது ஒரு வீண் பேட்டி.

  3. ஆதிரையன் சொல்கிறார்:

    ஒன்று மட்டும் புரிகிறது . பிஜேபி எல்லா கட்சிகளையும் மிக பெரிய குழப்பத்தில் ஆட்படுத்தியுள்ளது என்று மட்டும் புலப்படுகிறது.
    சிறுபான்மையினருக்கு என்றென்றும் முட்டு கொடுப்பது (அதாவது அவர்கள் செய்யும் மதமாற்ற முயற்சிகள்,மதத்தின் பெயரால் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகள்,கொலைகள்,தலையை சீவுதல் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது) என்ற புலிவாலை பிடித்து கொண்டு , இன்று இந்த கட்சிகள் தங்களது பெரும்பான்மை வாக்கு வங்கியை பிஜேபி யிடம் இழந்துள்ளன .மேலும் சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்த , அவர்கள் இந்து மதத்தையும் , இந்து தெய்வங்களையும் தொடர்ந்து கொச்சை படுத்தி கொண்டே வருகின்றனர் . மீடியாக்களின் வளர்ச்சியில்லாத காலத்தில் , இவையெல்லாம் பகுத்தறிவு செயல்கள் என சில கூட்டங்களால் புகழப்பட்டிருக்கலாம் .ஆனால் இப்பொழுதோ நிலைமை தலைகீழாக உள்ளது .இது போன்ற இந்து தெய்வங்களையும்,கோவில்களையும் ,அவர்களது மத சடங்குகளையும் கொச்சைப்படுத்துவதை இந்துக்கள் ரசிப்பதில்லை என தெளிவாக வெளியே தெரிகிறது .சில இடங்களில் தைரியமாக எதிர்ப்பு தெரிவிப்பதையும் காண்கிறோம். ஒரு இந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து தெரிவிக்க கூட தயாரில்லை என வெளிப்படையாக கூறும் தைரியம், என இவைகளை மக்கள் ரசிப்பதில்லை .
    இதே கொள்கை நீடித்தால், நமது மதசார்பற்ற கட்சிகள் என்று கூறி கொண்டு ஏம்மாற்றும் கட்சிகள் தோல்விகளையே பரிசாக என்றென்றும் பெறுவார்கள். அது தமிழகத்திலும் நிகழும் நாள் வெகுதூரத்தில் இல்லை.இந்து மத துவேஷம் என்ற ஒரு நிலையே,அவர்களை அடுத்த தேர்தலில் நிச்சயம் காவு வாங்கும்.
    அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.