
………………..
அதிமுக-வின் அதிகாரபூர்வ ஏடாக இருந்த
நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்து,
அண்மையில் ராஜினாமா செய்து விட்டு
வெளியே வந்த அழகுராஜ் – செய்தியாளர்
சந்திப்பில் பேசுகிறார்….
பல சந்தேகங்களையும், கேள்விகளையும்
எழுப்புகிறார்…..
…….
.
……………………………………………..
ஐந்து வருடங்கள் கழித்து இப்போதாவது இவருக்கு இந்த கேஸ் பற்றி நினைவு வந்ததே. பாராட்டுகள். பதவி போனால்தான், உண்மை வெளில வரும் போலிருக்கு. அதுவரை அரசியலில் எல்லோரும் உடந்தையாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.
நீங்கள் வேலை செய்து வந்த கம்பெனியைப்பற்றி,
உள்ளே இருக்கும்போது பேசினீர்களா …?
வெளியே வந்த பிறகு தானே பேச துணிந்தீர்கள் ..?
உங்களுக்கு ஒரு நியாயம் -அழகுராஜுக்கு
வேறோர் நியாயம் இருக்க முடியுமா … ?
நான் அப்படி இல்லை கா.மை.சார். ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தவேண்டுமென்றால் உள்ளே இருக்கும்போதுதான் செய்யமுடியும், செய்திருக்கிறேன் (நல்லதுக்காக கலகக் குரல்). ஒரு கம்பெனியை விட்டு வெளியே வந்துவிட்டால் அந்தக் கம்பெனி பற்றி குறையாக எங்குமே பேசியதில்ல்லை. விமர்சித்தாலும், வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதும் அதே விமர்சனம் வைத்திருப்பேன்.
ஐந்து வருடம் கழித்து வெளியே வந்த (தள்ளப்பட்ட) பிறகு, பேசுவதால் என்ன பயன்? அவரும் இதற்கு உடந்தைதானே
நீங்க அந்தச் சம்பவத்தையும் broadஆக இங்கு விவரித்திருக்கலாம். என் நினைவுக்கு எட்டியவரை, அங்கு ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா, இருந்தால் எடுத்துவிடலாம் என்று எண்ணியதற்காகச் செயல்பட்டு, அந்தக் குற்றச் செயல் நடந்தபோது நடந்த கொலையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் என்று பல் முனைகள் இருந்த நேரம்.
நான்கரை ஆண்டுகள், தானே போலீஸ் அமைச்சராக
இருந்தும், இந்த வழக்கை உரிய முறையில்
கொண்டு செல்லாததன் பின்னணி என்னவாக
இருக்கும் – நீங்கள் தான் சொல்லுங்களேன்….
அரசியல் அனுபவக் குறைவுதான். வேறு என்ன சொல்வது?