மோடிஜியை …………. பாராட்டாமல் இருக்க முடியவில்லை ….

…….

………..

தமிழ் நாட்டில் பேசி இருந்தால் இதை வேறு வகையில்
புரிந்து கொண்டிருப்போம்.

ஆனால் – இது குஜராத்தில் நடக்கிற ஒரு பொதுக்கூட்டம்;

உலகிலேயே பழைய மொழி என்று பெருமையோடு
தமிழை பாராட்டி –

பாரதியின் பாடலொன்றை –
முழுவதுமாக (மனப்பாடம் செய்து) மேடையில் கூறுகிறார்…

( மொழி உச்சரிப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஒரு குஜராத்திக்காரர், அதுவும் இத்தனை பெரிய பொறுப்பில் இருப்பவர், இந்த அளவிற்கு தமிழை உச்சரிப்பதே பெரிய விஷயம் தான்….)
(கையில் எந்த குறிப்பும் இல்லை …)

…………………………………..

“மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!

மாரத வீரர் மலிந்த நன் நாடு;
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!

நாரத கான நலம் திகழ் நாடு;
நல்லன யாவையும் நாடுறு நாடு!

பூரண ஞானம் பொலிந்த நன் நாடு;
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடே;
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே! “

……………………….

அத்துடன் நிற்காமல், அந்த முழுப் பாடலையும்
அழகாக ஹிந்தியில் – கவிதை வடிவில் – மொழிபெயர்த்து –
கூட்டத்தினருக்கு அக்கறையோடு விளக்குகிறார்.

…….

……..

அரசியலை தனியே தள்ளி வைத்து விட்டு
ஓரு தமிழன் என்கிற உணர்வில் –

மோடிஜியை – அவரது தமிழ் ஆர்வத்திற்காக, முயற்சிக்காக,
உழைப்பிற்காக –

  • உளமாற பாராட்டுகிறேன்.

.
…………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.