ஜனாதிபதியாக இருந்தவர் – இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்தை பாருங்கள்….!!!

…..

…….

2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11-வது
ஜனாதிபதியாக பதவி வகித்தவர்,
இந்த காணொலியில் உட்கார்ந்திருக்கும் இடத்தைப்
பாருங்கள்… பேசும் விதத்தைப் பாருங்கள்….
சொல்லும் கருத்தைக் கேளுங்கள்…

நமது துரதிருஷ்டம் – இவர் அடுத்த தடவையும்
ஜனாதிபதியாகத் தொடராதது…

கூடுதலாக – அதற்கு முக்கிய
காரணமாக இருந்தது தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த
கட்சி என்பது நமது துர்பாக்கியம் …

நான் ஒருமுறை யோசித்தேன்…
ஒருவேளை கலாம் சார், இந்த நாட்டின் பிரதமராக
பொறுப்பேற்றிருந்தால் – நாம் எதிர்பார்த்த
லீ குவான் யூ கிடைத்திருப்பாரோ என்று….

ஊஹூம் – கலாம் சார் ரொம்ப SOFT – வெளுத்த மனம்….


அவரால் இந்த குள்ளநரி அரசியல்வாதிகளை தாக்குப்பிடித்து,
நினைப்பதை நிறைவேற்றி இருக்க முடியவே முடிந்திருக்காது..

கீழே காணொலியில் பாருங்களேன் –

-அந்த வாய்ப்பேச்சு வீரர் “ராம்” மற்றும் சக பத்திரிகையாளர்கள், ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரே மேடையில் எப்படி அமர்ந்திருக்கிறார்களென்று –

-அஜெண்டா என்ன – அணுகுணடு பரிசோதனையா அல்லது ராமர் கோவிலா என்று கேட்கும் ராம்-க்கு மிகச்சரியான பதிலை,

-அழைக்காமலே வந்து கீழேயே அமர்ந்து தருகிறார் கலாம் சார்….. ” எந்த வித சந்தேகமும் இன்றி – நமது முக்கிய அஜெண்டா மிகவும் ஏழ்மைநிலையில் இருக்கும் 2.2 கோடி இந்தியர்களின் நிலையை உயர்த்துவதாகத் தான் இருக்க வேண்டும்” என்று…. !!!

கலாம் – கலாம் தான் ….

எப்போது வருவாரோ – மீண்டும் ஒரு கலாம் – நாம் எதிர்பார்க்கும்

  • லீ க்வான் யூ – வாக …!!!

….

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

12 Responses to ஜனாதிபதியாக இருந்தவர் – இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்தை பாருங்கள்….!!!

  1. bandhu சொல்கிறார்:

    அவர் இரண்டாவது முறை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தும் அவரை தேர்ந்தெடுக்க விடாமல் பண்ணியவர்களை நினைத்தால் வயறு எரிகிறது! ஒரு உத்தம தமிழரை தேர்ந்தெடுக்க விடாமல் பண்ணியவர்கள் இப்போது வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் என்று அளக்கிரார்கள்! பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சமாதியில் விபூதியை அழித்தவர்கள் அவர் பெயருக்கு மதிப்பு தரவில்லை என்று வருந்துகிறார்கள்! கொடுமை!

    • புதியவன் சொல்கிறார்:

      //வேலு நாச்சியார், மருது சகோதரர்கள்// – சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அவர்கள் முன்னிறுத்தியவர்களைவிட, அவர்களுக்கு கருணாநிதி பெரியார் என்று குடும்ப மனிதர்களை வண்டியில் முன்னிறுத்துவதில்தான் ஆர்வம். கேட்டால், பெரிய காங்கிரஸ் தலைவராக சுதந்திரப்போராட்டத்திற்கு பெரியார் போராடினார் என்று கலர் கலராக ரீல் விடுகிறார்கள்.

      எனக்குத்தான் தெரியவில்லை. இதுவரை ஒரு அரசு திட்டத்திற்காவது வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், திருப்பூர் குமரன், வ.உ.சி, பாரதியார் போன்றோரின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதா? வ.உ.சி யின் குடும்பம் கஷ்டப்பட்டபோது அவர்களுக்கு எள்ளளவு உதவியாவது இவர்கள் செய்திருக்கிறார்களா?

      கேட்டால், மத்திய அரசு, வேலு நாச்சியாரையும் வ.உ.சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கதை அளக்கிறார்கள்.

  2. புதியவன் சொல்கிறார்:

    //இந்த குள்ளநரி அரசியல்வாதிகளை தாக்குப்பிடித்து// – அரசியல்வாதிகள் மட்டும்தானா இல்லை கலாம் அவர்கள் ‘You have an agenda’ என்று சுட்டிக்காண்பிப்பவர்களையுமா? இந்த so called பத்திரிகையாளர்கள், தாங்கள் என்னவோ நாட்டை உய்விக்க வந்தவர்கள் மாதிரி போலி வேடம் போட்டுக்கொண்டு கலாம் அவர்களிடம் பேசும் த்வனி…. கேட்கவே எரிச்சலாக இருக்கிறது. உள்ளூர் பவிசுகளுக்கு உலக அரசியலைப் பற்றிப் பேசும் தைரியம்.

  3. Tamil சொல்கிறார்:

    ஐயோ ஒரு சிறு திருத்தம் 220 மில்லியன் என்பது 22 கோடி.

    அவரைச் சுற்றி இருந்தவர்கள் தங்களைத் தவிர வேறு யாரும் கலாம் அவர்களை நெருங்காமல் பார்த்துக் கொண்டது நமது துரதிருஷ்டம்.

  4. R.Gopalakrishnan சொல்கிறார்:

    R U not well Sir?

    • புதியவன் சொல்கிறார்:

      எனக்கும் மனசுல தோன்றிக்கொண்டே இருந்தது கோபாலகிருஷ்ணன் சார்.. விரைவில் புதிய பதிவுகளோடு கா.மை. சார் வரணும்.

    • Tamil சொல்கிறார்:

      yes, wondering why no new posts, hope all is well

  5. Tamil சொல்கிறார்:

    ஐயா நலமா, பதில் தெரிவியுங்கள்

  6. Bandhu சொல்கிறார்:

    I hope you are doing fine sir. Take care!

  7. Peace சொல்கிறார்:

    How are you? Would love to see you post again!!!
    Prayers for your health.

  8. வணக்கம் தமிழா சொல்கிறார்:

    2002-2007 இல் பாரதிய ஜனதா கட்சி டாக்டர் கலாம் என்ற இஸ்லாமிய தமிழரை ஜனாதிபதியாக நியமித்த போது பாஜக மீது (வாஜ்பாய் அத்வானி தாண்டி) ஒரு softcorner (டாக்டர் கலாம் கக்காக ) தமிழக மக்களிடம் இருந்தது.

    தற்போது உள்ள திரு ராம்nath கோவிந் (பட்டியல் சமுகம்) பதவி வரும் ஜூன் மாததில் நிறைவு பெறுவதால் மீண்டும் ஒரு தமிழருக்கு(பட்டியல்/மிக/பிற்படுதபட்ட வகுபீல் இருந்து) வாய்ப்பு கொடுத்து அமிடக்ஷ காய்நகர்த்த போகிறார். இதன் மூலம் திமுக வருங்காலங்களில் நெருக்கடிகக்கு உள்ளாகலாம்.

    தமிழகதில் இருந்து பாஜக அல்லாத ஒருவர் ஜனாதிபதி தேர்ந்தெடுப்பில் பரிசலிக்க வாய்ப்பு உள்ளதா ??????????????????

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.