…
அடிகளாரின் இல்லத்திற்கு முதல்வர் இன்று காலை சென்றார்….
அடிகளார் அமர்ந்திருக்க, முதல்வர் நின்று கொண்டு
புகைப்படம் எடுத்துக் கொண்டார்…
தமிழ் நாட்டின் முதலமைச்சர் நின்றிருக்க – தாம் அமர்ந்தபடி இருக்க அடிகளாருக்கு எப்படி மனம் வந்தது….?
தமிழக முதல்வருக்கு – அடிகளாருடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது….?
காரணம்…..?
அவர்கள் இருவருக்கும் தெரியும்….!!!
ஆனால் நமக்கு ….?
இப்போதைக்கு – தெரியாது….!!!
ஒருவேளை – பின்னர் தெரிய வரலாம்….!!!
இப்போதே தெரியும் என்பவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்…!!!
……………..

.
…………………………………………………………………………………………………………………………………………………..
இடுகைக்கு சம்பந்தமில்லாத விஷயம் ஒன்று.
எனக்கு ஒருவனிடத்தில் காரியம் ஆகணும். நான் அவனைவிட பணக்காரன், பெரிய இடத்தில் இருக்கிறேன். ஆனால் அவரிடத்தில் எனக்குக் காரியம் ஆகணும். இதற்கு முன்பு அவரை நான் அவமதித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவரின் உறவினனும் என்னிடம் நட்பு பாராட்டுவதுபோல் தெரிகிறது. அது எனக்கு பெரும் லாபத்தைச் சம்பாதித்துத்தரும். எனக்கு லாபம் வரும். அதனால் நான் போய் அவரைப் பார்க்கணும். போனால், அவர் எனக்குப் பெரிய மரியாதை தரமாட்டார், நான் காரியத்துக்காக வருகிறேன் என்று அவருக்குத் தெரியும். அதனால அவர் என்ன சொன்னாலும், எப்படி இருந்தாலும், நான் பொறுத்துத்தான் போகணும்.
நாம் பெரிய ஆளாக நினைக்கும் டாடா, அம்பானி பிர்லாக்கள், அமெரிக்க அதிபரைக் காண்பதற்காக அவரது அறைக்கு வெளியில் வரிசையில் நின்று காத்துக்கிடந்தது புகைப்படமாக வந்ததே..நினைவுக்கு வருகிறதா?
புதியவன்,
உங்கள் பின்னூட்டத்தை – இந்த இடுகைக்கு தொடர்புள்ளதாகவே
நான் எடுத்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அதிபர் என்பவர் – நிச்சயம் மிக உயரமான
இடத்தில் இருப்பவர் தான்… அவரைக் காண வரிசையில்
நிற்பவர்கள், பெரும் பணக்காரர்களாக -தொழிலதிபர்களாக –
இருந்தாலும் கூட, அமெரிக்க அதிபரிடம் அவர்களுக்கு
தங்கள் தொழில் வளர்ச்சி நிமித்தமாக வேலை இருக்கிறது.
எனவே அவரைக்காண காத்திருக்கிறார்கள்…. இது மிகவும்
வெளிப்படையான, அனைவருக்கும் தெரிந்த உண்மை..
ஆனால் இங்கே ….?
உயரமான இடத்தில் இருப்பவர் யார்….?
அதிகாரத்தில் இருப்பவர் யார்….?
அவர் ஏன் மற்றவரிடம்,
அதுவும் தங்கள் கொள்கைகளுக்கு, நம்பிக்கைகளுக்கு –
முற்றிலும் எதிரானவரிடம்
தாழ்ந்து நிற்கிறார்….?????
அது தான் கேள்வி இங்கே….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஜனநாயகத்தில் உயரமான இடத்தில் இருப்பவர் – வாக்குகளைத் தன் கையில் வைத்திருப்பவர். வன்னியர் சமூகம், அவர்களின் சமூகம் சார்ந்தவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதையோ இழிவு படுத்துவதையோ ஜாதிக்கு எதிராக எடுத்துக்கொள்வர். அதிலும் பக்தி உடைய வன்னியர்கள்/வன்னிய இளைஞர்கள், திமுக நிச்சயம் இந்து எதிர்ப்பு கட்சி என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே பங்காரு அடிகளாரின் எதிர்ப்பைப் பார்ப்பார்கள்.
அதிகாரத்தில் யார் இருந்தாலும், அவர்கள் வாக்குகளுக்காக மக்களைச் சந்தித்தே ஆகவேண்டும். அதிகாரம் என்பது அதிகபட்சம் ஐந்து வருடங்கள்தான்.
//தங்கள் கொள்கைகளுக்கு, நம்பிக்கைகளுக்கு – முற்றிலும் எதிரானவரிடம்// – என்ன கொள்கை, என்ன நம்பிக்கை என்று நீங்கள்தான் விளக்கணும். இவங்களுக்கு நம்பிக்கையாவது கொள்கையாவது. இந்து மத எதிர்ப்பு தவிர, வேறு நம்பிக்கை/கொள்கைகளை எழுதி எனக்குப் புரிய வையுங்கள்.
புதியவன் சொல்வது ஏற்புடையதாகவே தெரிகிறது.
திமுக எனும் தொழில் நிறுவனம் வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக இந்த உத்தியைக் கையாண்டு தாக நாம் கொள்வது எந்த வகையிலும் தவறாகாது.
நாளை இவர்கள் ஜக்கிவாசுதேவ் ஐயும் இவ்வாறு சந்தித்து பேசுவார்கள்