வேலிக்கு ஓணான் சாட்சியா ….!!! ஈஷா விவகாரத்தில் முரணான பதில்கள் ஏன்….?

ஈஷா யோகா குறித்து தமிழ்நாடு அரசின் ஆர்.டி.ஐ விளக்கம்
முரணாக இருப்பது ஏன்…? வனத்துறை மாறுபட்ட தகவலை
கொடுத்ததன் பின்னணி என்ன….?

“யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம்
ஆக்கிரமிக்கவில்லை” என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ்
கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு வனத்துறை பதில்
அளித்துள்ளது. `

ஆனால், அப்பகுதி யானைகளின் வாழ்விடங்கள்தான் என
மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அது யானைகளின்
பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது’ என்கின்றனர்
சூழல் ஆர்வலர்கள்….

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்
ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் அமைந்திருக்கிறது.

போலுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட
இந்தப் பகுதியில் அனுமதியின்றி ஈஷா யோக மையம்
கட்டடங்களை எழுப்பியுள்ளதாக சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து
குற்றம் சுமத்தி வந்தனர்.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும்
வழக்குகள் தொடரப்பட்டன.

வனநிலத்தை ஈஷா ஆக்ரமித்ததா…? இல்லையா….?

ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா
மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். .
இந்த நிகழ்ச்சிக்காக வரும் பொதுமக்களால் வனவிலங்குகளுக்கு
பாதிப்பு ஏற்படுகிறது எனவும் சூழல் ஆர்வலர்கள் பேசி வந்தனர்.
வனப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும்
தண்ணீர் தேடி வனவிலங்குகள் வெளியில் வருவதால் இந்த மோதல்நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

வனத்துறையின் நிலங்களுக்கு அருகிலேயே ஈஷாவின் கட்டடங்கள்
இருப்பதால், மனித – விலங்கு மோதல்கள் நடப்பதாகவும் தகவல்
வெளியானது. இதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம்
ஈஷா நிர்வாகம் உரிய அனுமதியைப் பெறவில்லை எனவும்
சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில்,

லேட்டஸ்டாக – `ஈஷா யோகா மையத்தால்
வனப்பகுதியில் எந்தவித ஆக்ரமிப்பும் செய்யப்படவில்லை’ என
ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு, தமிழக அரசின் –
கோவை மாவட்ட வனத்துறை எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா
என்பவர், கோவை வனக்கோட்ட பொது தகவல் அலுவலருக்கு சிலகேள்விகளை அனுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில்,


`ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால்
வனப்பகுதியில் எந்தவித ஆக்ரமிப்பும் செய்யப்படவில்லை. மேலும்,
ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில்
இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மையம் அருகே யானைகளின் வழித்தடம் உள்ளதா?' என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள வனத்துறை,வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என எதுவும் இல்லை’ எனவும் பதில் அளித்துள்ளது.

ஈஷா யோகா மையத்திற்கு மிகவும் ஆதரவான,
இந்த விளக்கம், ஈஷா யோகா மையம் நிர்வாகிகளுக்கு பெருத்த
உற்சாகத்தையும் – குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தவர்க்கு
பெருத்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி
உள்ளது.

“கோவை மண்டலத்தில் யானைகளின் வழித்தடங்கள் எவை
என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை வைத்து ஈஷாவுக்கு ஆதரவாக – ஆர்.டி.ஐ கேள்விக்குப் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது யானைகளின் வாழ்விடங்கள் – என்று மத்திய அரசும், மாநில அரசும் – ஏற்கெனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பாக தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளன.

அந்தப் பகுதியானது, அதிகாரபூர்வமாக யானைகளின் வழித்தடமாக
அறிவிக்கப்படவில்லை என்பதால், அது யானைகளின் பாதை அல்ல
என்ற முடிவுக்கு வருவது தவறானது …

வனத்துறையின் புகாருக்கு எதிராக, வனத்துறையே
மாறுபட்ட பதிலை இப்போது தந்திருப்பது எந்த அழுத்தம்
காரணமாக….?

“ ஈஷா நிர்வாகத்துக்கு எதிராக முதலில் வனத்துறை தான்
2012-ஆம் ஆண்டில் புகார் எழுப்பியது. அப்போது கோவை மாவட்ட
வன அலுவலராக திருநாவுக்கரசர் இருந்தார். அவர் 17.8.2012 அன்று
அரசின் முதன்மை வனப்பாதுகாவலருக்குக் கடிதம் ஒன்றை
எழுதினார். அதில் –

” இது யானைகளின் வழித்தடம், இங்கு ஈஷா யோகா மையம்
கட்டடங்களை எழுப்பி வருகிறது. இதனால் யானை-மனித
மோதல்கள் நடக்கின்றன’ எனக் குறிப்பிட்டு எந்தெந்த சர்வே எண்கள்
எல்லாம் வனத்துறையின் நிலத்துக்கு அருகில் உள்ளன,
எவையெல்லாம் யானைகளின் வழித்தடம் – எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `அப்பகுதியில் எந்தக் கட்டடம் எழுப்புவதாக இருந்தாலும்
மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையமான
(Hill Area Conservation Authority) (HACA)
ஹாகாவிடம் அனுமதி பெற வேண்டும்’ … ஆனால்,
ஈஷா இந்த அனுமதியைப் பெறவே இல்லை என்றும்
சுட்டிக்காட்டி இருக்கிறார்.

முதன்மை வனப்பாதுகாவலர் இந்தக் கடிதத்தை உள்ளூர் திட்டக்
குழுமத்துக்கு அனுப்பி வைத்தார். உள்ளூர் திட்டக் குழுமமும்,
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஈஷாவுக்கு கடிதம் அனுப்பியது.
அதற்கு ஈஷா தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை”

( பதில் வரவில்லையென்றால். அதன் மீது தொடர் நடவடிக்கைகள்
ஏன் எடுக்கப்படவில்லை; அதற்கு யார் பொறுப்பு ….? தமிழக அரசு விசாரணை நடத்துமா….? )

ஈஷா மையத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து
அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவே உள்ளூர்
திட்டக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 1,44,000 சதுர மீட்டர்
பரப்பளவில் ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ளது. இங்குள்ள
60 கட்டடங்களை இடிப்பதற்காக கடந்த 2013 டிசம்பரில் நோட்டீஸ்கொடுக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

(ஏன்….. ஏன்…. ஏனோ…??? )

அரசு நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழி –

சுற்றுப்புர ஆர்வலர்கள் சொல்வது – இதையடுத்து, அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என 2014- ஆம் ஆண்டு

நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடர்ந்தோம். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில்,
`அனைத்துமே அனுமதி பெறப்படாத கட்டடங்கள். இதன்பேரில்
நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளது” என்கிறது
இது குறித்த செய்தி….

தற்போது வரையில் ஈஷாவின் கட்டடங்கள் என்பது அதிகார
பூர்வமற்றவைதான். அதை உறுதி செய்யும் ஆதாரமாக
அரசின் ஆணைகள் உள்ளன.

வன எல்லையில் இருந்து 100 மீட்டர் இடைவெளிவிட்டுத்தான்
கட்டடம் கட்ட வேண்டும். இவர்கள் மிக நெருக்கமாக
கட்டியுள்ளனர்.

முன்னதாக, தங்களால் எழுத்து பூர்வமாக எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளுக்கும், நீதிமன்றத்தில் சொன்னவற்றிற்கும்
மாறாக – முரணாக – தற்போது வனத்துறை ஆர்.டி.ஐ. -க்கு
பதில் சொல்லி இருப்பது எந்த அழுத்தம் காரணமாக….?

இப்போது இன்னொரு ஆர்.டி.ஆர். மூலமாக –

1) ஈஷாவின் சர்ச்சைக்குரிய கட்டிடங்கள் கட்டப்பட்டது
எப்போது……..?( அதாவது தேதி குறிப்பிட்டு…)

2) ஈஷா – (Hill Area Conservation Authority)
(HACA) ஹாகாவிடம் கட்டிடத்திற்கு அனுமதி கோரி
எப்போதாவது விண்ணப்பம் கொடுத்ததா…?

3) ஆம் – என்றால் எப்போது….?

4) ஹாகா, அனுமதி கொடுத்ததா…?
ஆம் – என்றால் எப்போது….?

5) 60 கட்டடங்களை இடிப்பதற்காக – 2013 டிசம்பரில்
தமிழக அரசு/வனத்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா…?

6) ஆம் – என்றால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
என்னென்ன….? எடுக்கப்படவில்லை என்றால் – ஏன்…?

-என்று கேட்டு விளக்கம் கோரினால், தமிழக அரசின் நிலை
என்னவாக இருக்கும்…? பதில் என்னவாக இருக்கும்….?

பகுத்தறிவுவாத அரசு என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசும்,
ஈஷாவின் மாயையில் சிக்கிக் கொண்டதா….?

அல்லது ஈஷா, தமிழக அரசையும் வளைத்துப் போட்டு விட்டதா…?

பந்தப்படுத்தியது பணமா அல்லது செல்வாக்கா…..?

.
………………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வேலிக்கு ஓணான் சாட்சியா ….!!! ஈஷா விவகாரத்தில் முரணான பதில்கள் ஏன்….?

 1. புதியவன் சொல்கிறார்:

  நீங்க எழுதியிருப்பதில் reasons இருந்தாலும், அவை எதுவும் practical கிடையாது.

  சத்யமங்கலம்-தாளவாடி பகுதிகளில் யானைகள் நிறைய உண்டு. அவைகளின் வலசைகளில் பல்வேறு ஏக்கர் (ஹெக்டேர்) கணக்கில் விளைநிலங்கள் பட்டா போட்டுக்கொடுத்து, அதில் வீடுகள் கட்டி பலப் பல வருடங்கள் ஆகின்றன. இதே லாஜிக், காடு இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும்.

  நீங்க, யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்தன என்று நிறைய செய்திகள் படிச்சிருப்பீங்க. அவை எல்லாமே யானைகளின் வலசையாக இருந்தவை. ஏன் கொடைக்கானலில் பெரும்பகுதி காட்டுப் பகுதிதான். அவைகள் எல்லாமே பட்டா போடப்பட்டு பங்களாக்கள், ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நான் கொடைக்கானலில் தங்கியிருந்த இடத்திற்கு பத்தடில, பைசன் மேய்ந்துகொண்டிருந்தது.

  வளர்ச்சியில் காட்டுப்பகுதிகளில் நிலங்கள் பட்டா போடப்பட்டு விற்கப்படுவதோ இல்லை பட்டா போட்டுக்கொடுப்பதோ தவிர்க்கமுடியாத விஷயம். அதனால ஒரு ரெகார்டில் காட்டுப்பகுதி, இன்னொரு ரெகார்டில் பட்டா நிலம் என்று இருக்கும்.

  பெங்களூர் 3/4 க்குமேல் காட்டுப்பகுதியாகவும், முழுவதுமே மரங்களால் சூழப்பட்டு இருந்தது. இப்போது நிறைய கட்டிடங்கள், மரங்கள் வெகு வேகமாக காணாமல் போகிறது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு
  உங்கள் பதிலில் எதாவது விளக்கம் இருக்கிறதா….?

  இது தான் – “மாயை”யில் சிக்கியவர்களின் நிலை ….!!!

  மீண்டும் கீழே தருகிறேன் –
  ——————————————————————————————-
  இப்போது இன்னொரு ஆர்.டி.ஆர். மூலமாக –

  1) ஈஷாவின் சர்ச்சைக்குரிய கட்டிடங்கள் கட்டப்பட்டது
  எப்போது……..?( அதாவது தேதி குறிப்பிட்டு…)

  2) ஈஷா – (Hill Area Conservation Authority)
  (HACA) ஹாகாவிடம் கட்டிடத்திற்கு அனுமதி கோரி
  எப்போதாவது விண்ணப்பம் கொடுத்ததா…?

  3) ஆம் – என்றால் எப்போது….?

  4) ஹாகா, அனுமதி கொடுத்ததா…?
  ஆம் – என்றால் எப்போது….?

  5) 60 கட்டடங்களை இடிப்பதற்காக – 2013 டிசம்பரில்
  தமிழக அரசு/வனத்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா…?

  6) ஆம் – என்றால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
  என்னென்ன….? எடுக்கப்படவில்லை என்றால் – ஏன்…?

  -என்று கேட்டு விளக்கம் கோரினால், தமிழக அரசின் நிலை
  என்னவாக இருக்கும்…? பதில் என்னவாக இருக்கும்….?

  —————————————————————————-

  – முடிந்தால் இதற்கு விளக்கம் அளிக்கவும்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Manivannan Kamaraj சொல்கிறார்:

   ஜெயலலிதாவுக்காக ஒரு தொண்டர் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார் அதுபோல நான் எனது நாக்கை அறுத்துக் கொள்வேன் இதற்கு புதியவர் பதில் கொடுத்தால் என்று நான் சொல்லலாமா

 3. Tamil சொல்கிறார்:

  யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதற்கிணங்க இப்படிப்பட்ட நிலைப்பாட்டை நமது அரசாங்கம் எடுத்தால் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காக நமது அரசாங்கள் செய்கின்றன தந்திரம் இது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.