
“அரபிக்கடலிண்டே சிம்ஹம் -மரிக்கார்” – என்கிற பெயரில்
2 நாட்களில் வெளிவரப்போகும் மலையாள நடிகர் மோகன்லால்
அவர்களின் விளம்பரத்தைப் பார்த்தவுடன்,
நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த பிஜு நினைவிற்கு
வந்தார்…..
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால்
செல்லமாக ” இந்தியாவின் கடற்கொள்ளையர் “என்று
அழைக்கப்பட்டவர் பிஜூ என்றழைக்கப்பட்ட பிஜயானந்த்
பட்நாயக்.
இன்றைய தலைமுறைக்கு பிஜு பட்நாயக் குறித்து
ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை
சரித்திரப் புத்தகங்களும் சரி – இந்திய அரசாங்கமும் சரி –
பிற்காலத்தில் அவரை சுத்தமாக மறந்து விட்டன….
பிஜு பட்நாயக் ( 5 March 1916 – 17 April 1997 ) இறந்தபோது அவருக்கு கிடைத்த மரியாதை, கௌரவம் –
- வேறு எந்த இந்தியருக்கும் கிடைக்காத ஒன்று.
அவரது உடலின் மீது இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் இந்தியா
ஆகிய 3 நாடுகளின் தேசிய கொடிகளும் போர்த்தப்பட்டன…
உலக சரித்திரத்தில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும்
கிடைக்காத அபூர்வ மரியாதை இது…அந்தளவுக்கு பிஜு பட்நாயக் இந்த நாடுகளுக்கு என்ன செய்தார் ….?
பிஜு பட்நாயக்கின் வாழ்க்கைச் சரித்திரம் அற்புதமான
சாதனைகளை கொண்டது அவருக்கு ஈடு இணையாக வேறு எந்த
இந்திய தலைவரையும் உதாரணம் காட்ட முடியாது. பிஜுவின்
சரித்திரம் மிகவும் சுவாரஸ்யமானது . சரித்திர புத்தகங்களாலும்,
பிற்கால இந்திய அரசுகளாலும் மறக்கப்பட்டுவிட்ட அவரது சாகச
வரலாற்றை சுருக்கமாக கீழே தருகிறேன்…. இன்றைய இளைஞர்கள்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..
இன்றைய ஒடிஷாவை – முன்னாள் கலிங்கம் – சேர்ந்தவர்
பிஜு பட்நாயக் என்கிற பிஜயானந்த் பட்நாயக்.
இளம் வயதிலேயே விண்ணில் பறக்கும் ஆர்வம் மிகுந்திருந்த பிஜு –
40களில் – ஏரோநாட்டிகல் டிரைய்னிங் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவில்
வானூர்தியியல் பாடத்தில் பயின்றார். இந்திய தேசிய ஏர்வேஸில்
சேர்ந்தவர், 1940 முதல் 1942 வரை 2-ஆம் உலகப் போரிலும் கலந்து
கொண்டார். 1940-42 ஆண்டுகளில் நடந்த போரின் போது
வான் வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகவும்
பணியாற்றினார்.
2-ஆம் உலகப்போரில் பங்கு கொண்டு ஃபைட்டர் விமானியாக செயல்பட்டபோது, ஒரு நேரத்தில – ரஷ்யா – ஹிட்லரின் படைகளால் சூழப்பட்டபோது,
பிஜூ ஒரு டகோடா ஃபைட்டர் விமானத்தில் சென்று ஹிட்லரின் படைகள் மீது குண்டுமாரி பொழிந்தார். இதை மிகுந்த அன்புடன் நினைவு கொண்டு, ரஷ்யா அவருக்கு ரஷ்யாவின் ‘ கௌரவ குடிமகன் ‘ அந்தஸ்தை கொடுத்தது.

ஆனால் இயல்பிலேயே சுதந்திர போராட்டத்தில் தீவிர ஆர்வம் கொண்ட பிஜு – அதற்குப்பின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு,
அதன் காரணமாக 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார்.
மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட பட்நாயக் இந்திய சுதந்திர
இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
………………………
1947 ஆம் ஆண்டில் டச்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக
இந்தோனேசியா நடத்திய தீவிரமான போராட்டத்தில்
அவர்களுக்கு உதவும் கருவியாகவும் செயல்பட்டார்.
இந்தோனேசியா அதன் உயர்ந்த குடிமுறை சார்ந்த விருதான
“பூமி புத்ரா”வை (நாட்டின் குடிமகன் விருது) பட்நாயக்கிற்கு
வழங்கியது. ஒரு இந்தியர் இறந்ததிற்காக மற்றொரு நாட்டின்
தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
இவர் ஒருவருக்காக மட்டுமே.
……………………….
நேருவுக்கு மிகவும் பிடித்தமானவர் பட்நாயக்….
“இந்தியாவின் கடற்கொள்ளையர்” என பட்நாயக்கை நேரு பாசமாக
அழைப்பார். இந்தியப் நாடாளுமன்றத்தில் அவரது காலத்தின் போது,
“தைரியம், இயக்கத்தன்மை மற்றும் பணிக்குரிய சுறுசுறுப்பு
ஆகியவை பிஜு பட்நாயக்குடன் கூடவே பிறந்தவை “
என்று நேரு கூறினார்.
ஒரிசாவின் முதலமைச்சராக இருமுறை
இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் முதன் முறையும்,
1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையும்
முதலமைச்சராக இருந்தார்.
1962 ஆம் ஆண்டில் சீனர்களின் படையெடுப்பின் போதும் அதைத் தொடர்ந்து வந்த நெருக்கடி நிலையின் போதும், நேரு அடிக்கடி ஒரியத் தலைவரின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டார். சிலசமயங்களில் நேருவின் அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பு ஆலோசகராகவும் பட்நாயக் செயல்பட்டார். ‘இராணுவ விவகாரங்களில் பட்நாயக்கின் பரிச்சயம் மூலமாக பிரதமர் ஈர்க்கப்பட்டிருந்தார்,’ என்று அந்நேரத்தில் ஒரு அரசியல் விமர்சகர் எழுதினார்.
பிஜு பட்நாயக் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற போது
நேருவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நேருவின் நம்பகமான
நண்பர்களில் இவரும் ஒருவரானார். பண்டைய காலங்களில்
இருந்து இந்தியத் துணைக் கண்டத்துடன் பாரம்பரியத் தொடர்புகள்
வைத்திருந்த இந்தோனேசிய மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு
நேரு பரிவு காட்டினார். ஜப்பானியர்கள் மூலமாக இந்தோனேசியா
கைப்பற்றப்பட்ட போது, 1816 முதல் 1941 ஆம் ஆண்டு வரை டச்
ஆளுமையின் கீழ் இருந்தது.
2-ஆம் உலகப்போரில் ஜப்பானியர்கள் வீழ்ச்சியடைந்த இரண்டு
நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17, 1945 அன்று இந்தோனேசிய
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூலமாக இந்தோனேசியாவின்
சுதந்திரம் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நாடுகளின் மீது மீண்டும் ஆளுமையைக் கொண்டு வர
டச்சு முயற்சித்தது, மேலும் புதிய அரசாங்கத்தை அமைப்பதில்
சிக்கல்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. ஜனாதிபதியாக
டாக்டர் சுகர்னோவின் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவைப்
பெறுவதற்காக வலிமை மிக்க கொள்கைப் பிரச்சாரத்தைத்
தொடங்கினார்.
டாக்டர் சுகர்னோவின் நம்பிக்கைக்கு பாத்திரமான
துணைநிலைப் படை அதிகாரியான டாக்டர் ஜாஹ்ரிர்
14 நவம்பர் 1945 – அன்று இந்தோனேசியாவின் பிரதமராகப்
பொறுப்பேற்றார். அச்சமயத்தில் வெளியுறவுத்துறை
அமைச்சராகவும், இந்திய அரசாங்கத்தின் இடைக்கால
தலைவராகவும் இருந்த நேருவுடன், சுகர்னோ மிகுந்த
நட்புறவுடன் இருந்தார்.
டச்சு பொய்யான காரணங்களைக் கூறி சிறியதாய் இந்தோனேசியாவுக்கு சிக்கல்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தது.
இறுதியாக 21 ஜூலை 1947 அன்று இந்தோனேசியாவின் மேல்
பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்தனர். உடனடியாக
ஜனாதிபதி சுகர்னோ, ஜாஹ்ரீருடன் கலந்தாலோசித்து,
டச்சுக்கு எதிராக சர்வதேச பொது கருத்தை உருவாக்கும்படி கூறி
அவரை நாட்டை விட்டுச் செல்லும் படி கூறினார்.
மேலும் UNO முன்பாக இந்த விவகாரத்தை ஏற்கும்படி
நட்பு நாடுகளை வேண்டினார். இந்தோனேசியக் கடல் மற்றும்
வான்வழி மார்க்கங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்த டச்சிடம் இருந்து அதிகாரத்தைப் பெற அவர்
முயற்சித்தார், ஆனால் அதில் அவர் வெற்றிபெற முடியவில்லை.
மேலும் டச்’சால் அவர் கடும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த இக்கட்டான நிலைமையில் அவருக்கு உதவ நேரு முன்வந்தார்.
இந்தப் பொறுப்பை அவர் – சிறந்த விமான ஓட்டியும்,
சாகசங்கள் புரிவதில் அதிக விருப்பம் கொண்டவருமான பிஜு
பட்நாயக்கிடம் ஒப்படைத்தார். பிஜு பட்நாயக் இந்த விவகாரத்தில்
உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.
கலிங்க வரலாற்றை வாசிப்பதில் பேரார்வமிக்கவராக இருந்ததன்
காரணமாக, முற்காலத்தில் கலிங்காவும் இந்தோனேசியாவும்
எவ்வாறு கலச்சார ரீதியாக நீடித்திருந்த நட்புறவைக்
கொண்டிருந்தன என்பதை பிஜு அறிந்திருந்தார், மேலும்
இந்தோனேசிய மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள்
இழந்திருந்த பகுதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பு
அமைந்ததையும் அவர் அறிந்திருந்தார்.
அனைத்து இடர்களையும் துணிவுடன் கடந்து, அவர் ஜாவாவுக்கு
பறந்து சென்று, 22 ஜூலை 1947 அன்று ஜாவா தீவுகளில் இருந்து
சூல்தான் ஜாஹ்ரீரை அவரது சொந்த டகோட்டாவைக் கொண்டு
சிங்கப்பூர் வழியாக 24 ஜூலை அன்று இந்தியாவுக்கு கூட்டி வந்தார்.
இறுதியில் அவரது இந்தத் திட்டத்தில் ஜாஹ்ரீர் வெற்றியடைந்தார்.
பிஜு பட்நாயக்கின் உன்னதமான மற்றும் வீரம் செறிந்த செயல்கள்
இந்தோனேசிய அரசாங்கத்தால் – மிகச்சரியாக
அங்கீகரிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரது
வீரஞ்செறிந்த செயல்பாட்டிற்கு, இந்தோனேசியாவின் மிக உயரிய
விருதான ‘பூமி புத்ரா’ விருது அளிக்கப்பட்டது; வெளிநாட்டவர்களுக்கு
இவ்விருதை அவர்கள் தருவது மிகவும் அரிது…
…………………….
உள்நாட்டில், 1947 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையிலும் பிஜு பட்நாயக் முக்கியப்
பங்காற்றினார்.
ஆக்ஸ்ட் 1947 -ல், இந்தியாவில் சுதந்திர ஆட்சிஅமைந்தது.
இதன் விளைவாக முன்பு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த
ராஜ்ஜியங்கள் சுதந்திரமடைந்தன. இந்தியா அல்லது
பாகிஸ்தானுடன் இணைய பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு வாய்ப்பு
கொடுத்தது….
காஷ்மீர் மஹாராஜா காஷ்மீரை சுதந்திரமாக ஆட்சி புரிய விரும்பினார்.
ஆனால் காஷ்மீரை 22 அக்டோபர் அன்று பாகிஸ்தானின்
கூலிப்படையினர் பாகிஸ்தான் அரசின் ஆதரவோடு தாக்கி, கைப்பற்ற
முயன்றபோது பெரிய அளவில் பிரச்சினை மூண்டது.
அவர் விரைவாக அமைச்சர் குழுவை அழைத்து காஷ்மீர் –
இந்தியாவுடன் சேர்வதை ஏற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட
முடிவெடுத்தார். 26 அக்டோபர் அன்று, காஷ்மீர் மஹாராஜா
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அதற்குள்ளாகவே,
பாகிஸ்தான் காஷ்மீர் பிரதேசத்தின் பெரும்பகுதியைப்
பிடித்திருந்தது, மேலும் ஸ்ரீநகரைப் பிடிப்பதற்கு, அதை நோக்கி
வேகமாக விரைந்தது கொண்டிருந்தது.
மிகவும் குறைவான நேரத்தில் எதிரிப் படையினரை தடுத்து
நிறுத்துவதற்கு போர்ப் படையைத் திரட்ட வேண்டி இருந்தது.
ஒருமணிநேர தாமதம் கூட நமது தேசத்திற்கு தீங்கு விளைவிப்பதாக
அமையும்.
நேரமின்மை காரணமாகவும், தகவல் தொடர்பில் சிக்கல்கள்
இருந்ததாலும் படைகளை தரைவழியாக அனுப்புவதில்
சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தன. வான்மார்க்கமாக
படைகளை அனுப்புவது மட்டுமே சாத்தியக்கூறாக இருந்தது.
ஆனால்அது அவ்வளவு எளிய பணியாக இல்லை. பள்ளத்தாக்குகள்
மிகவும் அதிகமான முகப்புகளைக் கொண்டிருந்தன; மேலும்,
பறப்பதற்கு மிகவும் கடினமாகவும் இருந்தது.
இந்திய விமானங்களுக்கு பனியில் உறைவதில் இருந்து தடுக்கும்
கருவிகளும், அதிக உயர்த்தில் பறப்பதற்கு கண்டிப்பாக
தேவையான ஆக்ஸிஜன் அமைப்பும் தேவைப்பட்டன….அப்போது,
ஸ்ரீநகரின் விமான தளம் நமக்கு சொந்தமாக உள்ளதா அல்லது
பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு விட்டதா என்பதும் சரியாகத்
தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தப் போர் மிகவும் அச்சம் விளைவிக்ககூடியதாக இருந்தது. கட்டுக்கு அடங்காத – எதிரிக்கு
மிகவும் சாதகமான சூழ்நிலையை எதிர்கொண்டு செயல்பட தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட சிறப்பான, துணிச்சலான
விமான ஓட்டிகள் தேவைப்பட்டனர்.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், பிஜு பட்நாயக்
பங்கேற்று சீற்றமுடன் தேசத்திற்கு பணியாற்றத் தயாரானார்.
மற்ற எதைக் காட்டிலும் அவரது தாய்நாடு அவருக்கு
முக்கியமானதாக இருந்தது. அவர் இந்தப் பணியை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டார். அவரது முயற்சிகள் வெற்றியடைந்தன.
27 அக்டோபர் 1947 – காலை 10.00 மணி அளவில், ஸ்ரீநகர் விமான
நிலையத்தில் – இந்திய ராணுவத்தின் முதல் காலாட்படையினர்
அணியை அவரால் இறக்கி விட முடிந்தது.

1961 தேர்தலில் ஒரிஸ்ஸாவில் பெரும் வெற்றியை பெற்றதோடு, 23 ஜூன், 1961 அன்று ஒரிசாவின் முதலமைச்சராக பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் – குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் காமராஜர் திட்டத்தின் கீழ் பட்நாயக் அக்டோபர் 1963-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்திரா காந்திக்கு நெருங்கிய நண்பராக பட்நாயக் இருந்தார். எனினும், 1969 ஆம் ஆண்டு தலைவர் தேர்தலின் போது அவர்கள் இருவரும் மோதிக்கொண்டனர். அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி உட்கல் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சியை ஆரம்பித்தார். 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் போதுமான வெற்றியைப் பெற்றனர். பட்நாயக் அவரது பழைய நண்பரான ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் மீண்டும் நட்புறவைப் புதுப்பித்துக் கொண்டார், மேலும் ஜெ.நா இயக்கத்தில் இணைந்தார் 1974 ஆம் ஆண்டு இந்த இயக்கம் வேகம் பெற்றது. 1975 ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவராக பிஜு பட்நாயக்கும் இருந்தார்.
1977 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்ட அவர் லோக் சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக ஜனதா கட்சியின் சார்பாக, எஃகு மற்றும் தாதுப் பொருள்களுக்கான மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். 1979 ஆம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் மற்றும் சரன் சிங் ஆகியயோரின் இரு அரசாங்கங்களிலும் பதவியில் நீடித்திருந்தார்.
வி.பி. சிங் பிரதமர் பதவி ஏற்ற பிறகு, பிஜு பட்நாயக் மீண்டும் ஒரிசாவிற்கு சென்று சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்தார். 1990 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் அதிக வாக்குகளைப் பெற்றதுடன் (சட்டமன்ற இருக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கு), 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஒரிசாவில் பிஜு பட்நாயக் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1996 ஆம் ஆண்டு லோக் சபாவிற்கு பட்நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 17, 1997 அன்று இதயக்கோளாறு காரணமாக இறக்கும் வரை அப்பதவியில் அவர் நீடித்திருந்தார்.
இந்திய மக்கள் அனைவரும் அவசியம் நினைவில் கொள்ளவேண்டிய அபூர்வமான தேசபக்தர் பிஜு பட்நாயக்… இந்திய சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய ஒரு ஆற்றல் மிக்க மனிதர்.
.
………………………………………………………………………………………………………………………………………………..
Thank you Sir for sharing about great leader
நன்றி ஐயா. இந்தியாவுக்கு கிடைத்த தன்னலமற்ற தலைவர்களின் இவரும் ஒருவர்.
இப்போதைய ஒரிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக் இவரது மகன்.
திரு நவீன் அவர்கள் நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்ததால்
அவருக்கு ஒரியா மொழி அவ்வளவாக வராது .பேசும் போது
நடுவில் கொஞ்சம் தப்பு தப்பாக வரும் .
ஒரியா மக்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை .
Hello KM Sir,
Hope you are doing well….. These were entirely new info to me. Superb!
Thanks.
Sanmath AK
Dear Sanmath AK,
Welcome.
I am Happy to see you here – after a LONG interval.
By God’s Grace and Good wishes of Friends like you,
Physically – I am 75 % OK …!!!
Mentally – I am fine and fit – 100 % …!!!
Though I wish to write more – my interest in reading
takes most of my time.
I wish to keep on reading & writing – till my last day…!!!
Who knows – what HE has got for me…!!!
Wishing you all the best,
Kavirimainthan