ஆஸ்திரேலியாவில் படிப்படியாக நிலக்கரி
அனல் மின் நிலையங்களை
மூட தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன….
புதிதாக இனி ஆஸ்திரேலியாவில்
நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கப்பட
வாய்ப்பே இல்லை….
2-3 நாட்களுக்கு முன்னால் தான் -இப்போதிருக்கும் – நிலக்கரியில் இயங்கும்
ஒரு அனல் மின் நிலையம் நொறுக்கப்படும் காட்சியை
கீழேயுள்ள காணொலியில் காணலாம்…
……………..
……………..
ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுபடும்
என்பதைக் காரணம் காட்டி, உள்ளூர்மக்கள்
புதிய நிலக்கரிச் சுரங்கத்தை கடுமையாக
எதிர்த்து வருகின்றனர்.

இதையும் தாண்டி, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து
மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் முயற்சியில்
மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ள அடானி –
உலக அளவில் நிலக்கரிக்கான தேவை
குறைந்து கொண்டே வரும் நிலையில்,
எந்த நம்பிக்கையில் இதைச் செய்கிறார்….?
அங்கே வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியா
கொண்டு வந்து விற்கவா…?
நடக்குமா….?
நீங்கள் சொல்வது சரி.
1)
அதானி பவர் இந்தியாவில் பத்தாயிரம் மெகாவாட்டும் அதிகமான மூலம் இயங்கும் நிலக்கரி மூலம் இயங்கும் மின்சார உற்பத்தி மையங்களை வைத்துள்ளது.
அவற்றுக்கு தேவையான நிலக்கரியை கோல் இந்தியா மூலம் பெற்று வருகிறது அதனுடைய விலையும் அதிகரித்து வரும் காரணத்தினால் ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து லாபம் பெரும் பணியில் அதானி குழுமம் முயன்று வருகிறது.
2)
இந்தியாவில் 150 GWக்கும் அதிகமான கோல் மூலம் இயங்கும் மின்சார ஆலைகள் உள்ளன அவற்றுக்கும் இவற்றை விற்பனை செய்வது அதனுடைய நோக்கம்