மம்தா தீதி போராட்டம் – யாருக்கு வெற்றி ….?



உச்சநீதிமன்றம் இன்று காலையில் வழங்கிய தீர்ப்பை, டெல்லியில் உள்ள ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் அநேகமாக அனைத்தும், மம்தாவுக்கு சம்மட்டி அடி என்கிற தோரணையில் தலைப்பிட்டு (headlines) செய்தியை ஒளிபரப்புகின்றன….

உண்மையில் இது யாருக்கு வெற்றி …..?

சிபிஐ / மத்திய அரசு தான் – இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது

ஆனால், தீர்ப்பில் சொல்லப்பட்டது –
அவர்கள் கேட்டவையா…?
அவர்கள் எதிர்பார்த்தவையா…?

சுருக்கமாகச் சொல்வதானால் – தீர்ப்பில் 4 விஷயங்கள் சொல்லப்பட்டன –

1) கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சிபிஐ-யுடன் விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..

2) சிபிஐ – கமிஷனர் ராஜீவ் குமாரை மேகாலயா மாநிலத்தில் உள்ள
ஷில்லாங்கில் ( நடுநிலையான இடத்தில் ) வரவழைத்து விசாரிக்க வேண்டும். ( அதாவது டெல்லியில் அல்ல…)

3) அவரிடம் கட்டாயப்படுத்தி எந்த வாக்குமூலமும் வாங்க கூடாது..

4) கமிஷனர் ராஜீவ் குமாரை, கைது செய்யக் கூடாது…

– விசாரணை என்கிற பெயரில், சிபிஐ – அவரை டெல்லிக்கு அழைத்துச்சென்று, அங்கேயே வைத்து கைது செய்ய திட்டமிட்டிருந்தது என்பது தான் மம்தாஜியின் போராட்டத்திற்கான அடிப்படை…
இது தான் சிபிஐ-யின் வழக்கமான நடைமுறை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இப்போது உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு யாருக்கு சாதகமானது…?

டெல்லி செய்தி சானல்கள் போடும் தலைப்புச் செய்திகள் நியாயமானவையா…?

.
————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to மம்தா தீதி போராட்டம் – யாருக்கு வெற்றி ….?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    மேடையிலேயே வாக்கிங் – கலக்குகிறார் தீதி –

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! // Mamata Vs CBI Live: கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை.. மக்களுக்கு வெற்றி.. மமதா //
    Read more at: https://tamil.oneindia.com/news/india/mamata-vs-cbi-live-updates-340380.html ….இந்த செய்தியில் இதன் வரலாறே இருக்கிறது …!

    // டெல்லி மகிழ்ச்சியில் மமதா.. சந்தோசத்தில் சிபிஐ.. இரண்டு தரப்பும் கொண்டாடும் தீர்ப்பு.. யாருக்கு வெற்றி? //
    Read more at: https://tamil.oneindia.com/news/delhi/cbi-vs-mamata-banerjee-cbi-mamata-both-claims-victory-who-actullay-won-it-340504.html மாறி — மாறி இரு தரப்பும் சமாதானமடையும் படியான ஒரு தீர்ப்பு …?

  3. sirappu's avatar sirappu சொல்கிறார்:

    அய்யா,
    இந்த் பிரச்சினைக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் என்றே புரிய வில்லை.இந்த பிரச்சினை ஆரம்பிக்க பட்டது காங்கிரஸ் காலத்தில்.இப்பொழுது நீதிமன்றத்தின் முன், சம்பத்தை பட்ட நபர் விசாரணைக்கு உட்படுத்த பட வேண்டும். அவ்வளவுதான். இதில் மம்தா அம்மாவிற்கு என்ன பிரச்சினை.சம்பத்தை பட்ட நபரை ஏன் காக்க துடித்து கொண்டு இருக்கிறார்.
    எங்கேயோ இடிக்கிறதே..
    ஒருவேளை பிஜேபி பெயரை வைத்து நாடகம் ஆடி கொண்டு இருக்கிறாரோ?
    கடைசியில் பி.ஜெ.பி க்கு சாதகமாக அல்லவா செய்திகள் மாறியுள்ளன

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      2014-ல் சிபிஐ யால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் இன்று வரை ஒரு FIR கூட பதிவு செய்யப்படவில்லை. ஏன் இந்த நீண்ட தூக்கம் ? இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் தனது எஜமானரிடமிருந்து கிடைத்த உத்திரவின்படி கொல்கத்தா கமிஷனரை கைது செய்து சிறையில் அடைத்து, மம்தாஜியின் உத்திரவில் பேரில் தான் அவர் ஆவணங்களை அழித்தார் என்று FIR போட்டு…… என்று எத்தனையோ நாடகங்களை தேர்தலுக்கு முன் அரங்கேற்ற நினைத்திருந்தனர் இரட்டையர். அவர்கள் ஆசையில் மண்ணை வாரிப்போட்டார் மம்தா.
      சிபிஐ இன்று யார் உத்திரவில் செயல்படுகிறது என்று நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும். ஆனால் குருட்டு பாஜக வெறியர்களுக்கு மட்டும் தெரியாது. அல்லது தெரியாதது போல் நடிப்பார்கள்.

      • sirappu's avatar sirappu சொல்கிறார்:

        அய்யா,
        இந்த நிகழ்ச்சியை பிஜேபி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு உள்ளதை போலவே உணருகிறேன். உங்களை போன்ற தேர்ந்த அறிவாளிகள் இருந்தால் மட்டுமே, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

        • sirappu's avatar sirappu சொல்கிறார்:

          ஏன் பலமுறை சம்மன் அனுப்பியும், அந்த காவல் துறை அதிகாரி, நேரில் விசாரணைக்கு வரவில்லை.

    • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

      // கடைசியில் பி.ஜெ.பி க்கு சாதகமாக அல்லவா செய்திகள் மாறியுள்ளன//

      அப்படியென்று யார் சொல்வார்கள் ?
      பாஜகவினர் தமக்குத்தாமே சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

      டெல்லியில் விசாரணை கிடையாது.
      கொல்கத்தாவிற்கும் சிபிஐ சென்று விசாரிக்க முடியாது.
      போ மேகாலயாவிற்கு – கொல்கத்தா கமிஷனர் தன் துணை காவலர்களுடன் வரலாம். மிரட்டி கையெழுத்தோ, ஒப்புதல் வாக்குமூலமோ வாங்கக்கூடாது.
      கைது செய்யக்கூடாது – என்றெல்லாம் உச்சநீதிமன்றம் கண்டிஷன் போட்டது எதை வெளிப்படுத்துகிறது ?

      இதெல்லாம் எதைக்காட்டுகிறது ? சிபிஐ மீது ( உங்கள் தலைவரின் அரசு மீது) நீதிமன்றத்திற்கே நம்பிக்கை இல்லை என்பதைத் தானே ?

      குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது தானே உங்கள் கட்சியின் பழக்கம் ?

      • sirappu's avatar sirappu சொல்கிறார்:

        மேகலையா எந்த வெளிநாட்டை சார்ந்தது. ஒருவேளை அந்த காவல் துறை அதிகாரிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தால், கைது செய்ய பட்டாள் உங்கள் அம்மையார் என்ன செய்து விடுவார்.
        பரிதாப படுவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.

        • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

          சிரப்பு,

          உம்ம பார்த்தா சிரிப்பு தான்யா வருது.

          நீதிமன்றம் கைது செய்ய கூடாது என்று தான் முக்கிய நிபந்தனையே வித்தித்து இருக்கு. கைது செய்துட்டா…என்று கேள்வி கேட்கிறீர்.

          ஏனையா! பாஜக/மோடி பக்தர்களுக்கு கூமுட்டையா இருப்பது தான் ஒரே தகுதியா…?

          கமிஷனர் ராஜீவ் குமார், டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்கு போகாததே இந்த மாதிரி ஏடாகூடமா எதுவும் நடந்துட கூடாது என்று தான்.

          கைது செய்து இல்லாத ஆதாரத்தை உருவாக்கி அதில் கையெழுத்து வாங்கி விடலாம் என்று மம்தா அவர்களும் கமிஷனரும் சந்தேகபட்டு இருக்கலாம் அல்லவா?

          அந்த சதி இப்போது முறியடிக்கப்பட்டிருக்கு.

          இப்போது சொல்லும், யார் வெற்றி பெற்று இருக்கா என்று?

          • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

            சிரிப்பு,

            சாரதா ஊழலின் முக்கிய குற்றவாளி முகுல் ராய் மம்தா கட்சியிலிருந்து மோடி கட்சிக்குச் சென்றுள்ளார். உம்ம Mr.Clean அவரை என்ன செய்வதாக உத்தேசித்துள்ளார்.

            அதாவது மற்ற கட்சியிலிருந்து தான் ஊழல் செய்ய கூடாது, தன் கட்சிகாரர்களோ மற்ற ஊழல்வாதிகள் தன் கட்சிக்கு வந்தாலோ பிரச்சனை இல்லை. அப்படித்தானே?

            என்னையா பொழப்பு இது?

  4. sirappu's avatar sirappu சொல்கிறார்:

    பாவம் நமது மல்லையா அவர்கள் வீணாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமுறை ஆவதற்கு பதில், கல்கத்தா விற்கு சென்று தலைமறைவாகியிருந்தால் இந்த அம்மா நிச்சயம் அவரை சிபிஐ பிடியில் இருந்து காப்பாத்தி இருப்பார்.
    பாவம் அவர்.

  5. Mani's avatar Mani சொல்கிறார்:

    இன்னும் இரண்டு மோடிகள் ( லலித் & நீரவ் )ஓடி விட்டனரே. அவர்கள் பெயரை ஏன் விட்டு விட்டீர்கள் ? அவர்களை உங்கள் பாஜக வே காப்பாற்றி விட்டது என்றா ?

    • sirappu's avatar sirappu சொல்கிறார்:

      அய்யா, உங்கள் பதிலை படித்து மிகவும் பரிதாப படுகிறேன். நான் குறிப்பிட்டது வெளிநாட்டு தப்பி ஓடிய எல்லா குற்ற வாளிகளையும் தான் (including Bofors, quattrochi)

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் sirappu,

    நீங்கள் இங்கே எழுதியுள்ள பின்னூட்டங்களையெல்லாம் ஒரு முறை தொடர்ந்து படித்துப் பாருங்கள்…

    எதையோ சொல்ல முன்வந்து, அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல்,
    வெறும் விதண்டாவாதமாக எதையெதையோ எழுதிக்கொண்டிருப்பது உங்களுக்கே புரியும்…

    ஆதரிப்பதாக இருந்தாலும் சரி – மறுப்பதாக இருந்தாலும் சரி –
    சொல்ல வரும் கருத்தை தெளிவாக, ஒரு தொடர்ச்சியுடன் சொல்ல முயலுங்களேன்…

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  7. Vishnu's avatar Vishnu சொல்கிறார்:

    It reminds me of 3 hours fast by our leader at Marina.

    Does it make any sense to sit on the street to prevent a legal

    authority from discharging his duties, that too for a CM .

    The authority may have come on his own or orchestrated

    by the master, but legal.

    I feel it as nauseating third rate politics.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      What’s wrong, who has shown their agitation, against dictatorial action, on the base of constitutional right who is a common man or authoritative.

      If this kind of agitation is third rate politics then please give right explanation your leader misusing govern body against opposite leaders to get polical gain.

    • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

      Vishnu,

      The authority may have come on his own or orchestrated
      by the master, // but legal //

      யார் சொன்னது லீகல் என்று ?
      உங்களைப் போன்ற ஜால்ரா சொன்னால் போதுமா ?
      சுப்ரீம் கோர்ட் சொல்லாமல் சொல்லிவிட்டதே ‘ இல்-லீகல்” என்று.
      அதனால் தானே கோர்ட், சிபிஐ யை மேகாலயாவுக்குப் போகச் சொன்னது.

  8. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Dear BJP Bhakts,

    I have here gave an open challenge for testing your knowledge, the following quotes are who has given?

    1. “நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளைத் தேர்தலில் அரசியல்வாதிகள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள்”.

    2. “தேர்தலில் தோல்வியை சந்தித்ததற்கு கட்சித் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும்”.

    3. “குடும்பத்தை நன்றாகக் கவனிக்க முடியாதவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாது”.

    I could give a clue for your help. He is a BJP national leader.

    If no one accept this then I’ll give the result later.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      சரி! யாருக்கும் ஆர்வம் இல்ல போலிருக்கு.

      நாமளே சொல்லிடுவோம்.

      அது வேறு யாரும் இல்ல, நம்ம வருங்கால பிரதமர் இன்னாள் மாண்புமிகு நிதின் கட்கரி தான்.

  9. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …. ! இந்த கட்டுரை நம்மைப்போன்ற — நம்மைவிட அதிக நம்பிக்கை வைத்து இருந்த ஒருவரின் மனதின் குரல் —
    2014 – ல் நமது தளத்தில் கூட தாங்கள் இதே எண்ண ஓட்டத்தில் ஒரு சில இடுகை பதிவுகளையும் வெளிட்டு இருந்திர்கள் — ஆனால் மோடிஜி பதவிக்கு வந்து சில மாதங்களில் — சில வருடங்களில் பலமுறை — பல பதிவுகள் தளத்தில் அவர் மீது இருந்த நம்பிக்கை தளர்வுகளைப் பற்றியும் எழுதியுள்ளீர்கள் அதே போன்ற ஒன்று தான் — திரு . அடனு தே அவர்களின் இந்த கூற்று … ! // Modi Has Become Who He Despised and I Am No Longer His Supporter //
    ATANU DEY29.01.19 — சரிதானே — ? நண்பர்களும் எந்த விருப்பு — வெறுப்பு இல்லாமல் இதை வாசிப்பார்களா … ?

  10. sirappu's avatar sirappu சொல்கிறார்:

    பாவம் மம்தா அம்மையார், பரிதாப படுவதை தவிர வேறு வைலயில்லை.அப்பட்டமாக அவர் ஒரு ஊழல் பேர்வழியை காப்பாற்ற முயலுகிறார் . முடிவில் தோல்வி நிச்சயம்.
    இதில் மக்களின் அனுதாபத்திற்காக பிஜேபி பெயரையும் உள்ளிழுக்க முயலுகிறார். தேவையே இல்லாமல் அவர்களுக்கு விளம்பரத்தை பெற்று தந்து கொண்டிருக்கிறார். இதில் சில அறிவு ஜீவிகளும் இணைந்து கொண்டு அலறுகிறார்கள். கேட்டால் திடீரென்று வழக்கு நடத்துகிறார்கள் என்று.வழக்கின் பின்னணியை பற்றி ஏதாவது தெரியுமா? ஏன் 2g வழக்கும் இது போல் தான் உள்ளது. அதே நிதானத்துடன் தான் நடந்து கொண்டு உள்ளது.வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் வரும் பொழுது, அப்போதைய நீதிமன்ற ஆணைக்கேற்ற வாறு வழக்கு சூடு பிடிக்கும்.ஆனால் அறிவு ஜீவிகள் இது பாலி வாங்கும் நடவடிக்கை என்று கூவுவார்கள்.
    பரிதாபம் மற்றும் சிரிப்புடன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.