…
…
பூஜா ஷகுன் பாண்டே என்கிற பெயரில் ஒரு ராட்சசி…. அலிகார் ஹிந்து மஹா சபாவின் முக்கிய தலைவர்…. எளிதில் மறைக்கக்கூடியதல்ல அவரது உருவம் – என்பதை கீழ்க்காணும் அவரது புகைப்படத்தை பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
…

…

…
அவர், அவரது அமைப்பைச் சேர்ந்த இன்னும் 13 பேரையும் உடன் சேர்த்துக்கொண்டு காந்திஜியின் நினைவு தினத்தன்று, அவரது உருவ பொம்மையை ஒருவித விசேஷ துப்பாக்கியால் சுட்டு மகிழ்கிறார்.
இவர் சுட்டவுடன், காந்திஜியின் உருவத்திலிருந்து ரத்தம் போன்ற
திரவம் வெளிப்படுகிறது…. இறுதியில் அந்த உருவ பொம்மையை
தீயிட்டு கொளுத்தி மகிழ்கின்றனர்.
அதே இடத்தில் – காந்திஜியை சுட்டுக் கொன்ற
கோட்சேயை கொண்டாடி மகிழ்கின்றனர்….
இது நடந்தது பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில், அலிகாரில்….!
இது புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்கப்பட்டு, அவர்களது
மீடியா மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, கொண்டாடப்படுகிறது.
…
…
நடந்தது 30/01/2019 அன்று…. ஐந்து நாட்கள் கடந்து விட்டன…
சும்மா …சடங்குக்காக, ஒரு வழக்கை யோகி சர்க்கார் பதிவு செய்தாலும்,
இன்று வரை இந்த ராட்சசியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்படவில்லை…
தலைமறைவாகி விட்டாராம்…
அப்படி என்ன – கண்டுபிடிக்கப்பட முடியாத உருவமா இது…?
இந்த நிமிடம் வரை, இந்த சம்பவத்தையோ, அதில் ஈடுபட்டவர்களையோ –
உ.பி.முதலமைச்சர் யோகியோ,
பிரதமர் மோடிஜியோ கண்டித்து ஒரு வார்த்தை கூட
சொல்லவில்லை… எப்படிச் சொல்வார்கள்…?
சம்பந்தப்பட்டவர்கள்… “ஹிந்து மஹா சபா…”வை சேர்ந்தவர்கள் ஆயிற்றே…
இதில் எல்லாம் நமக்கு ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை….
ஆனால் – காந்திஜியை மீண்டும் சுட்டு மகிழ்ந்தவர்களுக்கும் சரி –
மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் சரி –
“காந்திஜியும் ஒரு குஜராத்திக்காரர்” என்கிற
அடிப்படை உண்மை இவர்களுக்கு மறந்து விட்டதே…!!!
3000 கோடி ரூபாய் செலவழித்து, படேலை கொண்டாடுபவருக்கு
காந்திஜியும் ஒரு குஜராத்திக்காரர் தானே…
அவரைப் போய் இவர்கள் அவமதிப்பதா…? என்கிற உணர்வு
தோன்றாதது ஏன்…?
.
—————————————————————————————————————-



மனமிருந்தால் மார்க்கமா இல்லை ? இந்த காட்டுப்பன்றிகளை பிடிப்பது என்ன பெரிய காரியமா ? இவர்களுக்கெல்லாம் பொது மக்களே பாடம் புகட்டுவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அய்யா … ! மஹாத்மாவும் குஜராத்திக்காரர் என்பதால் தான் — உயிரோடு இருக்கும் போது — அவரது உயிரை பறிக்க பலமுறை சுட்டு .. சுட்டு விளையாட்டு காட்டினார்கள் – அதே போல இப்பவும் அவரது உருவப் படத்தை வைத்து ” சுட்டு — சுட்டு விளையாடுகிறார்கள் — இது போன்றவர்களை தண்டிப்பது — கண்டிப்பது என்பதெல்லாம் இவர்கள் ஆட்சி செய்யும் இடங்களில் செய்யமாட்டார்கள் –என்பது தெரிந்த ஒன்று தான் — ! ஆனால் இங்கே நம் தமிழகத்தில் இந்த காமெடி பீசு எஸ். வீ . சேகர்
நீதிமன்றத்திற்கே காட்டினாரே காட்டு அது எதில் சேர்த்தி …? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் …!!!