…
…

…
அதிமுக பாராளுமன்ற கட்சித்தலைவரும், பாராளுமன்ற
துணை சபாநாயகர் பொறுப்பு வகிப்பவருமான, மூத்த அரசியல்வாதி – திரு.தம்பித்துரை தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இவரைப்போன்றே, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
அமைப்புச் செயலாளருமான திரு.பொன்னையனும்
வெளிப்படையாக பாஜக தமிழகத்திற்கு இழைத்துள்ள துரோகங்களை பட்டியலிட்டு, ஒரு தொலைக்காட்சியில் கடந்த வாரம் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதே சமயம், அதிமுகவில், பாஜகவுடன் கூட்டணியை
ஆதரித்து இதுவரை ஒருத்தர் கூட
வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவிலை…
தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் தான் கூட்டு வைப்போம். யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு தான் வெளியிடுவோம் என்று எடப்பாடி அவர்களும் சொல்லி விட்டார்…
அமைச்சர் ஜெயக்குமாரும் ஒவ்வொரு பேட்டியிலும் இதையே தொடர்ந்து சொல்லி வருகிறார்.
பாஜக தொடர்ந்து அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதிமுக, பாஜக கூட்டணியை விரைவாக உறுதிசெய்து
வெளிப்படையாக அறிவிக்குமாறு, பாஜக தேசிய தலைவர்களே
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்…
தமிழகத்தில் திரு.குருமூர்த்தி, துக்ளக் ஆண்டு விழாவில் பேசும்போது இதைப்பற்றி வலியுறுத்தி பேசி இருக்கிறார். பிரதமரிடமிருந்தே இது குறித்து அழுத்தம் வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் தேர்தல் முடிவுகளில் தாங்கள் எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்படுவோம் என்பதை அதிமுக தலைமை உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது….
எனவே, பாஜகவுடன் கூட்டு வைக்க மனதளவில் கட்சி விரும்புவதாக
தெரியவில்லை….. அதிமுக, பாமக, தேமுதிக, சரத்குமாரின் கட்சி,
இன்னும் சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து – பாஜக இல்லாத –
ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க விரும்புவதாகவே தெரிகிறது.
ஆனாலும், பாஜக தொடர்ந்து தரும் அழுத்தங்களை
சமாளிக்க முடியாமல் திணறுகிறது…
கூட்டணி இல்லையென்று சொன்னால், மூத்த அமைச்சர்கள்,
தலைவர்கள் மீது – வருமான வரி, அமலாக்கப்பிரிவு ஆகியவை
எடுக்கக்கூடிய படையெடுப்புகளுக்கு அஞ்சுவதாகத் தெரிகிறது.
எனவே, இயன்ற வரை கூட்டணி பற்றிய முடிவை தள்ளிப்போடுவதற்கு,
அதிமுகவிலேயே சில எதிர்ப்புக்குரல்களை, தம்பிதுரை, பொன்னையன்
போன்றவர்களின் மூலமாக கிளப்பி வெளிப்படையாக பேச வைப்பது
கட்சியின் ஒரு யுக்தியாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது.
கட்சித்தலைமையின் ஒப்புதலுடனேயே
இந்த எதிர்ப்புக்குரல்கள் வெளிப்படுத்தப்படுகின்றனவோ என்கிற சந்தேகம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு நிறைய இருக்கிறது…
இந்த எதிர்ப்புக்குரல்களை காரணம் காட்டி,
இதை சரி செய்ய இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை என்று பாஜக
தலைமையிடம் சொல்ல இந்த ஃபார்முலா உதவலாம்.
இப்படியே தேர்தல் நெருங்கும் வரையில் தாக்குப் பிடித்து விட்டு –
கடைசி நேரத்தில் கூட்டணி இல்லையென்று சொன்னால்,
வருமான வரி, ED படையெடுப்பு போன்ற பயமுறுத்தல்களை
தவிர்க்க இயலும் என்பதும்
கட்சித் தலைமையின் கூட்டு யோசனையாக இருக்கலாம்…!!!
பாஜக இதை உணராமலா இருக்கும்…?
அவர்கள் தரப்பிலிருந்து இன்னும் அழுத்தங்கள் அதிகரிக்கலாம்…
சில சாம்பிள் ரெய்டுகளும் நடக்கலாம்…
அடுத்த 2-3 வாரங்கள் முக்கியமானவை…
பிரதமர் அதற்குள் 2 முறை தமிழகத்திற்கு வரப்போகிறார்…!!!
அதிமுக தலைமை இதை எந்த அளவிற்கு புத்திசாலித்தனமாக
கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழக அரசியலில் இது ஒரு சுவாரஸ்யமான கட்டம்…
.
——————————————————————————————————————–



அய்யா … // பட்ஜெட் உரையையே புறக்கணித்த தம்பிதுரை.. தெரியாது என்கிறார் எடப்பாடி.. முற்றுகிறதா மோதல்? //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/aiadmk-leader-thambidurai-were-not-the-house-while-budget-presentation-340211.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article …..என்றும்
// சென்னை “பேக்கேஜ்” அரசியலில் இதுவும் சாத்தியமே.. தம்பிதுரை அதிமுகவிலிருந்து தாவுவாரா?? //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-talks-about-m-thambidurai-340392.html … என்றும்
// ஆபரேஷன் சன்.. அதிரும் அதிமுக.. தம்பிதுரை மட்டுமில்லை, மற்றொரு எம்.பியும் திமுக பக்கம்? //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-is-wooing-aiadmk-mp-anwar-raja-their-party-340403.html … என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன — பெய்டு நியூஸாக இருந்தாலும் கூட …
அதிமுகவில் யார் யார் பாஜக அரசுக்கு எதிரான நிலை எடுக்கின்றார்களோ அவர்களையெல்லாம் வளைத்து போட திமுக தயாராகி வருவதாக செய்திகள் கசிவதும் — அமித்ஷா அவர்கள் தமிழகத்தில் தாமரை மலர்ந்த ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பதும் போன்றவை — தங்களின் கூற்றுப்படி .. தமிழக அரசியலில் இது ஒரு சுவாரஸ்யமான கட்டம்…தானே …?
திமுகவுக்கு தகாத ஆசை – தன் பலத்தில் நம்பிக்கை இல்லை. தன்னம்பிக்கை இல்லை. தேர்தல் சமயத்தில், ஒவ்வொருத்தராக மற்ற கட்சிகளிலிருந்து இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
தம்பிதுரை திமுகவின் வலையில் விழ மாட்டார். அவர் தனக்கென கூட்டம் எதையும் சேர்க்கவில்லை. எனவே கே.எம்.சார் சொன்னது போல், இது கட்சியின்
திட்டமாகத் தான் இருக்கும்.
கேவலமாக இல்லை…!?
இப்படியும் ஒரு பொழப்பு…!
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”.
இந்நாட்டில் ஒரு காலத்தில் அறம் கொண்ட மேன் மக்கள் எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான்.