முன்பெல்லாம் இப்படித்தானிருந்தோம் நாமும்… (பகுதி-12) -இன்றைய சுவாரஸ்யம் …


இந்த வீடியோவில் வருகின்ற காட்சி – மலேசியாவில் தமிழர்கள்
வாழும் பகுதி ஒன்றில் எடுக்கப்பட்டது… ஒரு நண்பர் மூலமாக
கிடைத்தது.

முதலில் காணொளியை கண்டு விடுங்கள் –

புரிந்திருக்கும். இந்து மதத்தினர் ரத ஊர்வலம் வருகின்றனர்..
எதிர் பக்கத்திலிருந்து – கிறிஸ்தவர்கள் வேறொரு ரத ஊர்வலம்..

இரண்டு மத ஊர்வலங்கள் எதிரெதிரே வந்து சந்தித்தால் –
திருவாளர்கள் ஹெச்.ராஜா, ஒவைசி போன்றவர்கள் செல்வாக்குடன்
இருக்கும் நம்ம நாடாக/ஊராக இருந்தால் என்ன நடக்கும்…?

நேர் மாறாக அங்கே என்ன நடக்கிறது….? ஒருவரை ஒருவர் எவ்வளவு
அன்புடன், மரியாதையுடன் நடத்துகிறார்கள் பாருங்கள்….

ஒரு காலத்தில் நாமும் இப்படித்தான் இருந்தோம்.
நானே இளைய வயதில் அனுபவித்திருக்கிறேன்..
ஹெச்.ராஜா -க்கள், ஒவைசி -கள்
தலையெடுக்காத காலமது…!!!

மீண்டும் அந்த நிலை இங்கு ஏன் வரக்கூடாது…?

தீவிரவாதிகளை, வெறியர்களை
(எந்த மதத்தினராக இருந்தாலும் சரி)
தூக்கி எறிவோம்…துரத்தியடிப்போம்…..
அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ –

– எங்கும் மதநல்லிணக்கம் வளர உழைப்போம்.

.
—————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முன்பெல்லாம் இப்படித்தானிருந்தோம் நாமும்… (பகுதி-12) -இன்றைய சுவாரஸ்யம் …

  1. Sivakumar - Brickfield, Malaysia's avatar Sivakumar - Brickfield, Malaysia சொல்கிறார்:

    இப்போ எல்லாம் அந்தக்காலம் போல் இல்லை

    மலேசியாவில் கூட இந்து கோயில்களில் மலாய் இனத்தவர்கள் புகுந்து உடைக்கின்றார்கள்

    இன்னொரு மத நம்பிக்கைகளை மதிக்கும் நாடு சிங்கப்பூர் மட்டுமே

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Sivakumar – Brickfield, Malaysia,

      வருக நண்பரே. முதல் தடவையாக இங்கே உங்கள் பின்னூட்டத்தை பார்க்கிறேன்.

      எனக்கு 2 விதங்களில் சந்தோஷம்.
      ஒன்று – இந்த விமரிசனம் தளம், உலகெங்கும் உள்ள தமிழர்களை சுலபமாக சென்றடைகிறது…

      இரண்டு – மலேசியாவில் இருக்கும் உங்களைப்போன்ற தமிழர்களால், உடனுக்குடன் படிக்கப்பட்டு, அதில் தேவைப்படும் கருத்துகளும் பின்னூட்டங்களின் மூலம் கூறப்படுகின்றன.

      கருத்துப் பரிமாற்றம் – இதைத்தான் நான் இந்த தளத்தின் மூலம் வேண்டுகிறேன்…. !

      உங்கள் மனக்குறையை புரிந்து கொள்கிறேன்.
      நீங்கள் கூறியுள்ள சூழ்நிலை இந்தியாவிலும் வந்து விடக்கூடாது என்பது தான்
      நமது விருப்பம். அதனால் தான் மத தீவிரவாதிகளை ஒதுக்குங்கள் என்று
      வேண்டுகோள்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Sivakumar – Brickfield, Malaysia's avatar Sivakumar – Brickfield, Malaysia சொல்கிறார்:

        இப்போதுள்ள மதவெறுப்பு மலேஷியாவுக்கு 1980க்கு பின் வந்ததுதான்
        முன்பு மிக நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் வெறுப்பு இருக்கவில்லை

        மலேசியாவின் தந்தை Tunku Abdul Rahman மலேசியாவை இஸ்லாமிய நாடாக அறிவிக்கவில்லை.இஸ்லாம் முதன்மை மதம் மட்டுமே .. இஸ்லாமிய நாடு அல்ல

        அடிப்படையில் மலாய் இனத்தவர்கள் மிக நல்லவர்கள் ஆனால் பிரச்சாரங்கள் 30 வருடங்களுக்கு மேலாக நடந்து வருவதால் எல்லாம் கசப்புகள்

        அவ்வாறுதான் ஆரம்ப காலங்கள் இருந்தது

        ஆனால் மத்திய கிழக்கில் எண்ணெய் பணம் பெருக தொடங்கிய பின் அவர்கள் மலேசியாவில் கூட தலையீடுகள் செய்ய தொடங்கினார்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.