அந்த 3 பேருக்கு மட்டும் தெரியவில்லை….!!!


அந்த டவரி’ன் மீது நின்றுகொண்டு பார்ப்பவர்கள் யார்..?
எல்லாருக்கும் தெரிந்தவர்கள் தான் –
நட்சத்திரப் (வெறிப்)பேச்சாளர்கள்,
முக்கிய பொறுப்பாளர்கள் –
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை
பாஜக-வின் சார்பாக முன்னின்று, முனைந்து நடத்திய
3 பேர்கள் இவர்கள் தான் –

ஆனால், இந்த தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு
என்ன காரணம் என்பது அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையாம்.
3 மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே ஆட்சியில் இருந்ததால்,
ஒரு வேளை மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டளித்திருக்கலாம்
என்பது அவர்களுக்குத் தெரியும் ஒரே காரணம்….

கொஞ்சம் குனிந்து கீழே பார்த்தால் –
நமக்குத் தெரிகின்ற அத்தனை காரணங்களும் வரிசை கட்டிக்கொண்டு
நிற்பது- அவர்களுக்கும் புரியும்…!

நல்லது….
அவர்களுக்குத் தெரியாமல், புரியாமல் இருப்பதே நல்லது.
அவர்கள் இதே நிலையை தொடர்வது தான்
மே 2019 தேர்தல்களுக்கு நல்லது.

கீழே சுரேந்திராவின் கார்ட்டூன் –
(நன்றி -ஹிந்து ஆங்கில நாளிதழ்…)

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அந்த 3 பேருக்கு மட்டும் தெரியவில்லை….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    // நல்லது….
    அவர்களுக்குத் தெரியாமல், புரியாமல் இருப்பதே நல்லது.
    அவர்கள் இதே நிலையை தொடர்வது தான்
    மே 2019 தேர்தல்களுக்கு நல்லது.//

    இதையே நாம் எல்லாரும் வேண்டுவோமாக.

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இன்னும் நான்கே மாதம். அவர்களின் அடிப்படை அரக்க குணம் மாறப்போவதில்லை.

    ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருந்த நேரத்தில் இங்கு தமிழகத்தில் வாகனங்களை சேதப்படுத்தியவர்களை அவர்களை சார்ந்த எந்த தலைவர்களாவது கண்டித்தார்களா…? அது தான் அவர்கள்.

    தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை பொய், அராஜகம், மதவெறியை தூண்டிவிட்டு கலவரங்களை உண்டாக்குவது இது தானே அவர்களின் அடிப்படை வழிமுறைகள். இவைகளில் இருந்து அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள போகிறார்களா என்ன…?

    இப்படியே இருக்கட்டும்.

    நிச்சயம் தெய்வம் நின்று கொல்லும்.

  3. Jayakumar's avatar Jayakumar சொல்கிறார்:

    டவருக்கு பதிலாக பட்டேல் சிலையின் மீது நின்று பார்ப்பது போன்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  4. Karthik's avatar Karthik சொல்கிறார்:

    Shah, Modi – who is that third person?
    Nanbar Jayakumar statement is very opt, they should be standing beside Patel statue.

  5. Mani's avatar Mani சொல்கிறார்:

    Mr.Karthik,

    He is the Great YOGI Adityanath !

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த முறை பயணத்தில் இருந்தபோது ஒரு முற்பட்ட வகுப்பினர் ஒருவர் மோடி அரசைப்பற்றி ரொம்ப கோபத்தோடு பேசினார். அவர் சொன்ன காரணம், டிமானிடைசேஷன் என்று சொல்லி 6 மாசம் என் காசை எடுக்கவிடாமல் படுத்தினார், ஆதார் கார்டு என்று சொல்லி அதற்கு அலையவைத்தார், அப்புறம் உச்ச நீதிமன்றமே சொன்னபோதும் எதற்கெடுத்தாலும் ஆதார் கேட்பதை நிறுத்தவில்லை, ஆதார் கார்டு வாங்கவும் என்னுடைய ஊருக்குச் சென்றுதான் அங்கு அப்ளை செய்யணும் என்று அலையவைத்தார், இப்போ வங்கிகள் ஸ்மார்ட் ஏடிஎம் கார்டு என்று சொல்லி, 31 டிசம்பருக்குள் செய்தாகணும்னு சொல்லி திரும்பவும் என் ஊருக்கே சென்று அப்ளை செய்யணுமாம், அங்க போனா, திரும்பவும் ஒவ்வொரு ஆதாரத்தையும் கேட்கிறான், ஏற்கனவே ஆதாருக்குத்தான் எல்லாம் கொடுத்தோமே…. மோடி நண்பரின் கம்பெனிக்கு வசூல் நடக்கணும்னு நாட்டுமக்களைப் படுத்தறார். சாதாரண கடை வைத்திருப்பவருக்கு 8000 ரூபாய் மாதம் வந்தாலே அதிகம் என்று சொல்கிறார்கள். அவர்களும் அந்த கார்டு ஸ்வைப்பிங் மெஷின் கண்டிப்பாக வைத்திருக்கணுமாம், அதுக்கும் மாதம் 1200 ரூபாய் கட்டணுமாம்… நாட்டுல 120 கோடிப்பேர்ல எத்தனை பேருக்கு கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் இயக்கத் தெரியும்? மோடிக்காக நான் சாகுற வயசுல ஸ்மார்ட் போன் வாங்கி எப்படி இயக்கறதுன்னு கத்துக்கிட்டிருக்கேன்.

    மன்மோகன்சிங் நாட்டுக்காக ஒண்ணும் பண்ணலை, எவனெவனோ கொள்ளை அடிச்சான், ஆனால் மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கலை. மோடி அரசு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக்குது. நாட்டுல எந்த மாநிலத்திலும் புத்திசாலிகள் இல்லையா? குஜராத்திகள் மட்டும்தான் புத்திசாலிகளா? எதை எடுத்தாலும் குஜராத்தி அதிகாரிகள்தான் மேல வராங்க, இல்லைனா குஜராத்தி கம்பெனிகளுக்காக மோடி உழைக்கிறார். எப்படா எலெக்‌ஷன் வரும்னு இருக்கு.

    இப்படி புலம்பிக்கொண்டே இருந்தார். அவரும் மோடிக்கு வாக்களித்தவர்தான். நாட்டு மக்களின் பொதுவான மனநிலை இப்படி இருக்கும்போது, மோடி அவர்களது கட்சியின் முக்கியஸ்தர்கள், நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல், என்ன நடக்கிறது என்று கட்சியின் தலைமை, ஆட்சியின் தலைமைக்குச் சொல்லாமல், வெறும் ஜால்ரா அடித்து எம்.பி. பதவிகளைப் பெற்று, மாநிலக் கட்சித் தலைமை/பொறுப்புகள் பெற்று சுகபோகத்தில் இருக்கிறார்கள். இவர்களே போதும் (பாஜக கட்சிப் பதவியில் இருப்பவர்கள்) பாஜகவை வீழ்த்த.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.