எங்கே தொடங்கும்… எப்படி முடியும்…? (பகுதி -9) – இன்றைய சுவாரஸ்யம்….


ஒரு சுவாரஸ்யமான ஆட்டம்….
நமக்கு ரொம்ப காலமாக பழக்கமான ஆட்டம் தான்..
வேறொரு format – ல்.

இந்த ஆட்டம் துவங்கும் முறையை கவனித்தோ,
தொடர்ந்து அது செல்லும் விதத்தை பார்த்தோ –
எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள்…
இறுதி வரை பாருங்கள்….

இது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
எத்தனையோ விஷயங்களை சந்திக்கிறோம்..
எவ்வளவோ விதங்களில் எதிர்கொள்கிறோம்.
பல சமயங்களில் -தீர்ந்தது … இதன் கதி இவ்வளவு தான்
என்று நினைத்துக் கொள்வோம்… ஆனால்….

கடைசி நொடியில் கூட விஷயம் தலைகீழாக மாறுவது உண்டு.
மேற்படி ஆட்டத்தைப்போல…!

முழுமையாகப் பொருந்தும் என்று சொல்ல முடியா விட்டாலும் கூட-
கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல் வரிகள் சில –
என் நினைவிற்கு வருகின்றன….எவ்வளவு எளிமையான வரிகளில்,
எவ்வளவு உன்னத தத்துவத்தை விளக்கி விடுகிறார் மனிதர்…!!!

………………………..

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்

———————————————————————————————

பல நூறுமுறை கேட்டு மனப்பாடமாகி விட்ட அந்த
முழு பாடலும் கீழே – இன்னுமொரு முறை ரசிக்க….

—————–

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதும் இல்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.