இது பாண்டே-யும், வைகோ-வுமா…? அல்லது பார்த்திபனும், வடிவேலு-வுமா…?



தந்தி தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்
திரு.ரங்கராஜ் பாண்டே-வுக்கு
அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் மாறி மாறி வரும்.

சில பேட்டிகள் … தங்க தமிழ்ச்செல்வன் மாதிரி –
டி.அன்பழகன் மாதிரி…
கல்லிலிருந்து நார் உரிப்பது போல….
ஒன்றுமே கிடைக்காது.

சில சமயம் திரு.வைகோ போல – லக்கி ப்ரைஸ்…
லட்ச ரூபாய் லாட்டரி….!!!

கேள்வி கேட்டு – பதிலில் மாட்ட வைப்பது ஒரு ரகம்.

வைகோ படு புத்திசாலித்தனமாக
பல கேள்விகளுக்கு பதில் சொல்லவே மறுக்கிறார்…
ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறார்…
கமலஹாசனைப்பற்றி பேசக்கூட பயப்படுகிறார்…
(ஸ்டாலின் விருப்பம் என்னவென்று தெரியாதே…! )

ஒரு காலத்தில் தம்பி ஸ்டாலின் என்று சொல்லி வந்தவர்,
“மாண்புமிகு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ”
என்று சொல்கிறார்….
(நமக்குத் தெரிந்து அமைச்சர் “பெருமக்களுக்கு”
தான் “மாண்புமிகு” போடுவது வழக்கம்…)

” பாண்டே .. கொக்கி போட்டு என் வாயிலிருந்து
எதையாவது வரவழைத்து மாட்டி விட முயற்சி செய்கிறீர்கள்…

ஏமாறுபவன் இந்த வைகோ அல்ல…
உங்கள் கொக்கிக் கேள்விகளில் நான் சிக்க மாட்டேன்…
நீங்கள் எப்படி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்… ”

ஒரு பரிதாபம் என்னவென்றால் – வைகோவுக்கு தெரியவில்லை.

பதில் சொல்ல மாட்டேனென்று மறுப்பதே
– ஒரு விதத்தில் பதில் தானே…?

தேவையே இல்லாத இடங்களில் –
சிரித்துக்கொண்டே இருப்பது ஒரு வித பதில்…

சீரியஸ் கேள்விகளுக்கு – சிரித்து மழுப்பி,
வழ வழ விளக்கம் கொடுப்பது இன்னொரு விதமான பதில்…

பாண்டேயின் கேள்விகள் வரும்போது,
இவர் வளைவதும், நெளிவதும்
தேவையின்றி சிரிப்பதும் இன்னொரு வித பதில்…

இதெல்லாம் வைகோவுக்கு புரியாவிட்டாலும்
பார்ப்பவர்களுக்கு புரிகிறதே…!

ஸ்டாலினை தான் ஆதரிப்பதற்கு கொடுக்கிறார் பாருங்கள்
ஒரு சூப்பர் காரணம் – கலைஞர் இறப்பதற்குமுன் –
இவர், அவருக்கு வாக்கு கொடுத்து விட்டாராம்…
“இனி நான் ஸ்டாலினுக்கு கவசமாக இருப்பேன்” என்று….
கடைசியாக,கலைஞரும் மகிழ்ச்சியாக
தலையை சாய்த்து அசைத்து அதை ஏற்றுக் கொண்டு விட்டாராம்….

“கொடுத்த வாக்கிலிருந்து என்றும் மாற மாட்டான் இந்த வைகோ”

தேர்தலுக்கு முன்னர், மார்ச் மாதம் –
கூட்டணி கட்சிகளிடையே ‘சீட்’ பங்கீடு உற்சவம் இருக்கிறது….

குறைந்த அளவு சீட் கொடுத்து,
அதையும் ஜெயிக்க வாய்ப்பில்லாத இடமாக பார்த்து கொடுத்து,
ஸ்டாலினும், துரைமுருகனும் – புத்திசாலித்தனமாக
வைகோவை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபடும்போது –

வைகோ, தான் கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதற்கு
என்ன விளக்கம் தரப்போகிறார் என்று – பார்க்க வேண்டும்…!!!

தேர்தல் வருவதற்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும்போதே…
நாடகங்கள் துவங்கி விட்டன….மீடியாக்களுக்கு வேட்டை தான்….

கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்
பார்க்க இயலாதவர்களுக்காக, அதை கீழே பதிந்திருக்கிறேன்…

ஒரு நல்ல காமெடி நாடகம்…..
பார்த்து ரசியுங்கள்…

……

.
—————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இது பாண்டே-யும், வைகோ-வுமா…? அல்லது பார்த்திபனும், வடிவேலு-வுமா…?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    இரண்டாவதாகச் சொன்னது தான்.
    சூப்பர் காமெடி.

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    “பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா ? ”

    “என் உள்ளத்தில் உயிரோடு இருக்கிறார் ! ”

    “வைகோ சார்………………………..”

    “நோ.நோ.இதற்கு மேல் நான் எதுவும் சொல்லத்தயாரில்லை ! ”

    ” டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன்………….”

    ” குமரி அனந்தன் அவர்கள் நான் மிகவும் மதிக்கின்ற ஒரு தலைவர்.
    டாக்டர் சௌந்திரராஜன் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் ———-
    ஆகையால் திருமதி தமிழிசை பற்றி நான் எதுவும் பேசத் தயாரில்லை ! ”

    வைகோ நெஞ்சுறுதி கொண்டவர் –
    எவருக்காகவும், யாருக்காகவும் பயப்பட மாட்டார்.
    தன் கொள்கைகளை கடைசி வரை மாற்றிக் கொள்ள மாட்டார்.
    எதையும் வெளிப்படையாக, நேருக்கு நேர் எதிர்கொள்வார் !

    தமிழக அரசியலில் இன்னும் சில முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள்.
    ரங்கராஜ பாண்டே அவர்களையும் கூப்பிட வேண்டும்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அரவிந்தன்,

    முதலில், நானே பேட்டியின் முக்கியமான வசனங்களை -highlights –
    தொகுத்துதர நினைத்தேன்…

    ஆனால், பேட்டி காண்பவரின்
    அப்பாவித்தனமான முகபாவ – கேள்விகளையும்,
    பதில் சொல்பவரின் அசட்டு சிரிப்புகளையும்
    நண்பர்கள் அவசியம் பார்த்து அனுபவிக்க வேண்டும்
    என்று நினைத்ததால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // வித்தியாசமான வைகோ …. //
    Posted on மார்ச் 21, 2011 by vimarisanam – kavirimainthan ……. https://vimarisanam.wordpress.com/2011/03/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/ ……..இது அன்றைய வைகோ … ஆனால் இன்றைய வைகோ …. கெக்கே -பிக்கே ….!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      ஒரு காலத்தில் மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருந்தேன்…
      “அந்த” வைகோ’வின் மீது…!
      முற்றிலுமாக ஏமாற்றி விட்டார்..
      கலிங்கப்பட்டி ‘டாஸ்மாக்’ போராட்டத்தின்போதே அவரது வேடம் கலைந்து விட்டது. அப்போதே இங்கு விவரமாக விவாதித்தோமே.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        அது தான் அய்யா …! ” எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன் ” என்பதை பாேல …. திரு கைகாே பற்றி நிறைய பதிவுகள் நம் தளத்தில் உள்ளது … அவரது மகனின் சிகரெட் கம்பெனி பற்றியும் ..டாஸ்மாக் பாேராட்டம் பற்றியும் .. ம.ந.கூ.. கூத்துப் பற்றியும் இன்னும் பலதை பற்றியும் இதே ஆண்டு ஜூன் மாதம் இதே பாண்டேவுடனான பேட்டி என்று அதிகமான இடுகைகள் நிறைய பதிவுகளை நல்லதும் ..கெட்டதும் என்று நடு நிலையாக கலந்து வெளிவந்த ஒரே தளம் இது தான் என்பது ஒரு தனி சிறப்புதானே …?

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்…. தங்கள் தளத்தில் ‘நகைச்சுவைப் பகுதி’ இல்லாமல் இருந்துவிடக் கூடாது, அப்போதுதான் பல்சுவைத் தளமாக இருக்கும் என்று நினைத்து இந்தப் பேட்டியை வெளியிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    நல்ல நகைச்சுவைப் பேட்டி.

    புலி போன்ற பாய்ச்சல் உடைய சொல்வீரர், பலப் பல ஆண்டுகளாக அட்டைக் கத்தியோடு புலி முகமூடிகொண்ட பயந்தாங்கொள்ளியாக இருப்பதை மக்களிடம் வெளிச்சம்போட்டுக் காண்பித்துவிட்டார். வை.கோ அவர்களைப் போன்ற பல்டி அடிக்கும் வீரர் அரசியலில் மிகக் குறைவு. என்ன இருந்தாலும் கருணாநிதியிடம் அரசியல் பயின்றவரல்லவா?

    காகிதப் புலி வைகோவின் பேட்டி அருமையாக இருந்தது. இவரையும் நம்பி எத்தனை எத்தனை தொண்டர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டார்களோ.

    கருணாநிதியின் கனவில் அண்ணா வந்து பலப் பல கட்டளைகளைச் சொன்னதுபோல கருணாநிதியிடம் வை.கோ சத்தியம் செய்தார் என்பதை அறிந்து வாய்விட்டுச் சிரித்தேன். இந்தக் காகிதப் புலி செய்த சபதங்களை, எடுத்த கொள்கை முடிவுகளை புல்லட்டின் போல் வெளியிட்டால் அது நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவைக் கொத்தாக இருக்கும்.

    காத்திருங்கள்… வைகோவுக்கு சில வாய்ப்புகள் இருக்கின்றன.
    1. கருணாநிதியிடம் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக இந்தத் தேர்தலில் திமுகவுக்கு கெடுதல் நேரிடக்கூடாது என்பதற்காக போட்டிபோடவில்லை.
    2. குறைந்த சீட்டுகள் கொடுத்தபோதும், பாஜக, மதவாத சக்திகள் அமைதிப் பூங்காவாம் தமிழகத்தில் தலையெடுத்துவிடக் கூடாது என்பதற்காக மாண்புமிகு, தளபதி, திமுகவின் எழுச்சித் திலகம், அண்ணா கண்ட மாவீரன், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குப் பல்லக்குத் தூக்குவது என்று நான் முடிவு செய்துவிட்டேன்.
    3. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது, ஸ்டாலினுக்காக என்னை ஒதுக்கிய தீயசக்திகளுக்கும் பாடம் கற்பிக்கவேண்டும். அதனால் கமல் கட்சியை ஆதரிக்க மதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தீர்மானம் செய்து என்னை மீற முடியாமல் செய்துவிட்டனர்
    எத்தனையோ வை.கோவின் பல்டிகளைப் பார்த்த நாம் இதனையும் பார்க்கமாட்டோமா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      கமல் பற்றியோ, தினகரன் பற்றியோ இவர் விமரிசிக்காததற்கு பின்னால்
      காரணம் இருக்குமென்று நினைக்கிறேன்….
      ஒருவேளை – திமுக, காங்கிரஸ் கூட்டு கைகூடாமல், காங்கிரஸ் வெளியேறி விட்டால், இவர் – கமல், தினகரன் ஆகியோருடன் காங்கிரஸ் பக்கம் போக வாய்ப்பிருக்கிறது… அதற்காகத்தான் “துண்டு” போட்டு வைக்கிறார் என்றும் தோன்றுகிறது.
      இவர் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும்..
      (சீமானுடன் சேர்வதைத்தவிர…!!!) இல்லையா…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.