நிம்மதியாகத் தூங்க….!!!


அறிவுபூர்வமாக ஆராய்ந்து சொல்கிறார்கள்..
தூக்கம் சுலபமாக உங்கள் கண்களைத்தழுவ வேண்டுமானால்
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று….!!!

—————————————————————————————————————-

பின் குறிப்பு –

நான் இரண்டு வித மனிதர்களையும் பார்க்கிறேன்.
தூக்கம் வராமல் திண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்…(அவர்கள் மிகக்குறைந்த அளவிலானவர்கள்… மைனாரிடி பிரிவினர்…!!! )

இன்னொரு ரகம் – தூங்குவதையே பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்கள்… ஒரு தடவை அலுவலக வேலையாக கல்கத்தா போய் விட்டு ரெயிலில் திரும்ப வந்துகொண்டிருந்தேன்…
எதிர்த்த சீட் – மேல் பர்த் – காரர், கல்கத்தாவில் ஏறியவர், கிட்டத்தட்ட 32 மணி நேரம் கழித்து சென்னை வந்து சேரும்வரை தூங்கிக்கொண்டே இருந்தார்.
கரெக்டாக, அவ்வப்போது பெரிய ஸ்டேஷன் வரும்போது மட்டும்
டக்கென்று கீழே இறங்கி பிளாட்பாரத்தில் கிடைப்பதை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவார். வண்டி கிளம்பியதும், மீண்டும் மேலே ஏறி, சொர்க்கம் போய்விடுவார்….!!!

அது ஒரு மறக்க முடியாத பயணம்….

காரணம், மேற்படி நண்பரல்ல.
நடிகை ஜெயப்ரதாவும் விஜயவாடாவிலிருந்து – சென்னை வரை
அதே கேபினில் எங்களுடன் பயணம் செய்தார் ..!!! ( first class – cabin -அப்போதெல்லாம் ஏ.சி.கிளாஸ் இல்லை…!!! ) அமர்சிங் பழக்கம்,
அரசியல் எல்லாம் கிடையாது அப்போது. வெறும் சினிமா மட்டும் தான்…!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நிம்மதியாகத் தூங்க….!!!

  1. THANMANAMIGU THAMIZHAN's avatar THANMANAMIGU THAMIZHAN சொல்கிறார்:

    Super sir but today shivaraathri sir..

  2. BVS's avatar BVS சொல்கிறார்:

    தூக்கம் வர இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன.

    எனக்கு படுக்கையில் படுத்துக்கொண்டு, புத்தகம் படிக்க ஆரம்பித்தால் போதும்;

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நல்ல பகிர்வு கா.மை. சார். அவர் சொல்வது எல்லாம் மிகச் சரியானவை. Your way of mixing topics is good for a reader.

    எனக்கு பொதுவா 8.30-8.45க்குள்ள படுக்கும் பழக்கம் உண்டு. காலைல 4.30க்குள்ள எழுந்துக்கணும்னு நினைப்பேன், ஆனால் 5-5 5 1/2 ஆகிவிடும் குளிர்காலங்கள்ல. படுக்கை அறைக்குள் செல்போன் வராது. காபி/டீ பழக்கம் கிடையாது.

    என் அனுபவப்படி, நல்ல தூங்கணும்னா,
    படுக்கப் போவதற்கு 1 1/2 மணிக்கு முன்பு சாப்பிட்டு முடித்திருக்கவேண்டும். (to avoid craving, நான் பல் துலக்கிவிடுவேன். அது திரும்பவும் எதையாவது வாயில் போடணும் என்ற எண்ணத்தைத் தவிர்க்கும்).
    அரை மணி நேரமாவது இரவு நடப்பது நல்லது. சாப்பிட்டபின்பு, கொஞ்சம் நடை பழகுவது நல்லது.

    8 மணிக்குச் சாப்பிட்டாலோ அல்லது, உடம்பு வேலை செய்யாததனால் அயர்ச்சி இல்லாமல் இருந்தாலோதான் எனக்கு தூக்கம் affect ஆகும். (சனிக்கிழமைகளில் மதியம் 1 மணி நேரம் தூங்கினாலும் அது இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும்). Professionals என்ன சொல்றாங்கன்னா, 1 1/2 மணி நேரத்துக்கு முன்னாலேயே தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் இருந்தால் நிறுத்திவிடணும் என்கிறார்கள். தேவைனா, புத்தகம் படிக்கலாம். (நான் சமீப காலமா தூங்கும் 15 நிமிடம் முன்பு வரை திரைப்படம் பார்க்கிறேன். It affects peaceful sleep)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.