…
…
நேற்றைய இடுகையில் உக்ரெயின் ஊழல் அரசியல்வாதி ஒருவருக்கு
மக்கள் ‘குப்பைத்தொட்டி’யில் புரட்டியெடுத்து மரியாதை கொடுத்த
காட்சியை கண்டோம்.
நேர்மையான, கௌரவமான, மரியாதைக்குரியவர்களாகவும்
அரசியல்வாதிகள் இருக்க முடியும் என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில்
நிரூபித்துக் காட்டி இருக்கிறார் ஒரு அமைச்சர்.
பாரன் பேட்ஸ் ( Baron Bates ), பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்.. பிரபுக்கள் சபையில் ( house of lords ) -உறுப்பினர்…. அமைச்சர் பதவி வகிப்பவர்.
ஜனவரி, 31-ந்தேதி, ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் திகைத்துப் போகும்படியான
ஒரு காரியத்தைச் செய்தார். பாருங்களேன் – என்ன செய்கிறாரென்று …!
…
…
அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட, கேள்வி நேரத்தில்
(question hour), அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வியும் இருந்தது.
ஆனால், அவர் அவைக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார்…
வந்தவர், உடனடியாக, சம்பந்தப்பட்ட கேள்வியை கேட்ட பெண் உறுப்பினரிடம், தான் உரிய நேரத்தில் வந்து பதில் சொல்லாததற்காக தன்னை மன்னிக்கும்படி கோரினார். கூடவே, தனது கடமையை சரிவர செய்யத் தவறியதற்காக, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறி விட்டு, அனைவரும் திகைப்புடன் பார்த்திருக்க, அவையை விட்டு உடனே வெளியேறியும் விட்டார்…!!!
( பின்னர் – பிரதமர், இந்த காரணத்திற்காக அவரது ராஜினாமாவை
ஏற்க முடியாது என்று மறுத்து விடவே, அமைச்சராகத் தொடர்கிறார்….!!!)
சில நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக, அமைச்சர் பதவியை தானே முன்வந்து ராஜினாமா செய்வது என்பது கொஞ்சம் மிகையாக தோன்றினாலும் கூட –
தவறுகளுக்கு பொறுப்பேற்பதும், அதற்காக பதவியை ராஜினாமா செய்வதும் – பிரிட்டிஷ் ஜனநாயகத்தில் ஒரு பண்பாக இயல்பாக ஏற்கப்பட்டு விட்டது…
கொள்கையை முன்வைத்து அடிக்கடி அரசாங்கங்கள் ராஜினாமா செய்வதும், மறுதேர்தல்கள் நடப்பதும், குறைந்த அளவு மெஜாரிடியில் கூட மாற்று அரசுகள் அமைவதும் அங்கே சர்வ சகஜமாகி விட்டது.
அத்தகைய ஒரு பக்குவம் இங்கும் ஏற்பட இன்னும் எத்தனை பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ…?
———————————————————————————————————



100 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஜனநாயகம் இருந்த இடத்தில்
இப்போது நாமிருக்கிறோம்.
பிரிட்டிஷாருக்கு ஒரு பெயர் எப்போதும் உண்டு. ஒருவனைத் தூக்கில் போடுவதென்றாலும், அதையும் சட்டப்படி எல்லாவற்றையும் செய்து பிறகு தூக்கிலிடுவார்கள். அதாவது, procedureக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பவர்கள் அவர்கள்.
பிரிட்டிஷ் அரசியல்வாதிகளின் மாண்பும் (அங்கேயும் தவறானவர்கள் உண்டு, ஆனால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்), ஜன’நாயகப் பண்பும் நமக்கு வருவதற்கு நூற்றாண்டுகள் ஆனாலும் ஆச்சரியமில்லை.