10 % மூளைக்கே இப்படி….!!!



மனித மூளையின் ஆற்றல் அளப்பரியது….சரியாக பயன்படுத்தினால்,
இன்னும் எத்தனையோ சாதிக்க முடியும் என்கிறது விஞ்ஞானம்.
ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் எல்லாம் அவற்றின் நீட்டிய
பயன்பாடுகளே….
(கூடு விட்டு கூடு பாய்தல்….??? – நம்பிக்கை உண்டா…?)

உடம்பின் 3 சதவீத கனத்தை கொண்டிருக்கும், மனித மூளை
உடலின் 20 சதவீத சக்தியை பயன்படுத்திக் கொள்கிறதாம்…!!!

சராசரியாக நமது மூளையில் 10 சதவீதத்தை தான் நாம்
பயன்படுத்துகிறோமாம்… சிறு வயதிலேயே – துவக்கப்பள்ளி நிலையிலேயே கற்றுக் கொடுத்தால், நிறைய மொழிகளை சிறுவர்கள் சுலபமாக கற்க முடியும் என்கிறது ஆராய்ச்சிகளின் முடிவு….

அந்த பத்து சதவீத மூளையைக் கொண்டே, இந்த மும்பைச் சிறுவன்
எத்தனை மொழிகளைப் பேசுகிறான் பாருங்கள்…

….

….

————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to 10 % மூளைக்கே இப்படி….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… நாம மூளையை 10 சதவிகிதத்துக்குமேல் பயன்படுத்துவதில்லை என்பது அறிவியல் ரீதியானதுதான். பொதுவா dangerous situation வரும்போது, நாம இன்னும் கூர்மையா சிந்தித்து நல்ல முடிவா பொதுவா எடுப்போம். அப்போ நாம இன்னும் கூர்மையா அறிவை உபயோகப்படுத்துவதுதான் அதற்குக் காரணம்.

    சிறிய வயதிலேயே நிறைய மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு முன்பாக தாய் மொழியில் நல்ல strongஆக இருக்கணும். ஒரு மொழிலதான் மனசு வார்த்தைகளைக் கோர்க்கும்.

    எல்லாருமே மொழி கற்றுக்கொள்ள முடியாது. சிலருக்குத்தான் அதற்கான மூளை அமைப்பு இருக்குன்னும் படித்திருக்கிறேன். அதாவது ஒரு வகுப்பில் 50 பேர் இருக்கிறார்கள் என்றால், 50 பேராலும் 10 மொழிகளைக் கற்றுக்கொள்ள இயலாது. 10 பேருக்கே அது சாத்தியம் என்று. அதிக மொழி கற்றுக்கொள்வதே மூளைக்குள்ள தனிப்பட்ட திறன்தான்.

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    மனித மூளையைப்பற்றி அறிய அறிய வியப்புகள் அதிகரிக்கின்றன. நமது மூளை வேலை செய்யும் விதத்தைப்பற்றி – நாம் அறியவே இன்னமும்
    எண்ணற்ற விஷயங்கள் பாக்கி இருக்கின்றன என்று தெரிகிறது.

    சிலர், தங்கள் குழந்தைகளை/ சிறுவர்களை, பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வைப்பது ‘குருவி தலையில் பனங்காய்’ என்று நினைத்துக் கொள்கின்றனர்… அப்படியல்ல – அவர்களால் இன்னும் எவ்வளவோ அறிந்து கொள்ள முடியும்; அதற்கான திறன், படைப்பிலேயே அவர்களிடம் இருக்கிறது…

    ஒரே ஒரு விஷயம் – எதையும் அவர்கள் மீது சுமத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது… அவர்கள் இயல்பாக, விரும்பி சுலபமாக கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்…… அவ்வளவே.

    நான் கூட சிறு வயதிலேயே இன்னும் நிறைய கற்றுக்கொண்டிருக்கலாம் – என்று சில சமயம் நினைப்பதுண்டு.
    ஆனால் – இந்த விஷயங்கள் எல்லாம் அப்போது சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை… அதற்கான சூழ்நிலையோ, வசதிகளோ இல்லை. ஆனால், இப்போது முடியும்… இன்றைய பெற்றோர்களுக்கு இது குறித்து
    அறிய இந்த இடுகை உதவும் என்பதாலேயே எழுதினேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.