யாருக்கு லாபம் …திணிக்கப்படும் digital transaction -ஆல்….?


டிஜிடல் முறை பண பரிமாற்றத்தால் –
யாருக்கு எவ்வளவு லாபம்…?
மக்களுக்கு என்ன நஷ்டம்…?
மத்திய அரசு ஏன் அதை வற்புறுத்துகிறது….?

2 நிமிடம் தான்…
இந்த சிறிய உரை நன்றாகவே புரிய வைக்கிறது…

சொல்பவரை மறந்து விடுங்கள்…
சொல்லப்படும் காரணத்தையும் மறந்து விடுங்கள்…

இந்த வீடியோவை,
மீண்டும் ஒரு முறை பாருங்கள்… கவனித்துக் கேளுங்கள்….

சொல்லப்படும் செய்தி
சரியா, தவறா…? ……..

————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to யாருக்கு லாபம் …திணிக்கப்படும் digital transaction -ஆல்….?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த வாதம் தவறு.
    1. டிஜிட்டல் முறை மூலமாக accountability இருக்கும். பணம் secured ஆக இருக்கும். Consumerக்கு ஒரு பாதிப்பும் இல்லை. இப்படித்தான் எல்லா வெளி’நாடுகளிலும் transaction நடைபெறுகிறது. இதற்கான facility கொடுப்பதால் Visa, Masters போன்றவர்கள் பணம் பண்ணுவார்கள். Payment Gateway கொடுக்கும் வங்கி பணம் பண்ணும். இவர்கள் எல்லோரும் அந்த 1.5%ஐப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
    2. வெளி’நாடுகளிலும் தங்கம் வாங்கும்போது, Cash கொடுக்கச் சொல்கிறார்கள், அல்லது 2.5% (உண்மையா 1.5% இருக்கும், இவங்க அதை avoid செய்வதற்கு 2.5% என்று சொல்றாங்கன்னு நினைக்கறேன்) அதிகமாகக் கொடுக்கச் சொல்கிறார்கள். (Money Exchangeக்கும் இது பொருந்தும்) மற்ற எந்த transactionலிலும், அது எவ்வளவு குறைவான தொகையாக இருந்தாலும் consumerக்கு பாதகம் கிடையாது. நான் 40 ரூபாய் transactionக்கும்-அதாவது மளிகை சாமானுக்கு- Credit Card sorry Debit Card உபயோகப்படுத்தியுள்ளேன்.
    3. நம்ம ஊர்ல, Bank Charges னு கிரெடிட் கார்டை உபயோகப்படுத்துவதால் வாங்கும் கடைகள், consumersஐ ஏய்க்கின்றன. தாங்கள் கணக்குக் காட்டாமல் இருப்பதற்காகவும், Cash Flow இருக்கணும்னு (இது சரியில்லைனு நினைக்கறேன்) இப்படிச் செய்கிறார்கள்.
    நம்ம நாட்டில் வங்கி transactionக்கு டிஜிட்டல் முறை மூலமாகச் செய்வதுதான் சரி.
    4. வெளி’நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் எல்லாமே டிஜிட்டல் transactionதான் (பெரும்பாலும்). நம்ம நாடும் அந்த நிலையை அடைய வேண்டும்.

    இன்றைக்கு ப.சி. நிதியமைச்சர் இல்லாததுனாலயும், இப்போதைக்கு அந்தப் பொறுப்பு தனக்கு வரப்போவதில்லை என்பதாலும் அடித்து விடுகிறார். அப்படிச் சொல்லுபவர், ஏன் மக்கள் வங்கிகளில் பணம் சேமிக்கணும், வீட்டிலேயே cashஆக வைத்துக்கொள்ளலாமே என்று சொல்வதில்லை?

    இதைப் பற்றி இன்னும் விரிவாகவும் எழுதலாம். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’. யார் அந்த மாற்றம் கொண்டுவந்தார்களோ, அவர்கள் பணம் பார்க்கிறார்கள் (Visa, Masters, Payment Gateway போன்றவர்கள்). கணிணி வாங்கினா, வின்டோஸ் ஆபரேடிங்க் ஸிஸ்டம் வாங்கணும். பில் கேட்ஸ் காசு சம்பாதிக்கிறானே, இன்னும் கணிணி விற்கும் பலபேர் சம்பாதிக்கிறார்களே என்று வருத்தப்படுவதில் பயனில்லை. சௌகரியம், அதற்கேற்ற விலை. அவ்வளவுதான்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இங்கே கொஞ்சம் குழப்பமாக இல்லை….?

      // இதற்கான facility கொடுப்பதால் Visa, Masters போன்றவர்கள் பணம் பண்ணுவார்கள். Payment Gateway கொடுக்கும் வங்கி பணம் பண்ணும். இவர்கள் எல்லோரும் அந்த 1.5%ஐப் பகிர்ந்துகொள்கிறார்கள்.//

      அப்படியென்றால், 1.5 % கமிஷன் பிடிக்கிறார்கள் என்கிற வாதம் சரியாகி விடுகிறது அல்லவா…?

      திரு.ப.சி.சொல்வது தவறு என்பதை வேறு வகையில் சொல்ல முடியுமா…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        ஆமாம். 1.5% கமிஷன் பிடிக்கிறார்கள். யாரிடமிருந்து? நியாயமாக Sellers, Retailers, Service Providersஇடமிருந்து.

        பணமாக (கேஷ்) வாங்கும்போது, அதனுடன் associated risks இருக்கு. Money handling risks. திருட்டுக்கொடுக்கக்கூடாது, பத்திரமா வங்கில டெபாஸிட் பண்ணணும், அதுக்கு பொதுவா External companies (like 4Secure something like that) employ பண்ணுவாங்க. இல்லைனா இதுக்குன்னு ஆட்களை ஒதுக்கி வங்கிவரைல பத்திரமா கொண்டுபோகணும். இதற்கெல்லாம் ஆகும் Cost ஐவிட இந்த கமிஷன் கொஞ்சம் safe. அரசாங்கத்துக்கும் எல்லாம் கணக்கில் வரும்.

        இந்த கமிஷன் மக்களிடமிருந்து பிடிக்கப்படாது. Online Paymentலயும், இந்த கமிஷன் Service Providerஇடமிருந்து வாங்கப்படும். நாம் என்ன விலை போட்டிருக்கானோ அதைத்தான் கொடுப்போம்.

        ப.சி ரொம்ப exaggerate செய்து அரசியல் ரீதியா சொல்றார். ஒரு நாளைக்கு 200 கிராம் அரிசி வீதம், 10 வருஷத்துல ஒருத்தர் 700 கிலோ அரிசியைச் சாப்பிடுகிறார்னு கணக்கு சொல்லும்போது நாம ‘ஏ அப்பா 700 கிலோவா’ என்று மயங்குவதுபோல் அவர் கணக்கு இருக்கிறது.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இதை எப்படிப் பார்க்கணும்னா, விசா, மாஸ்டர், வங்கி போன்றவை செர்வீஸ் கொடுக்கின்றன. அதற்கான கூலி இந்த 1.5%. மக்களிடமிருந்து இந்த கமிஷன் அல்ல.

  2. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    Govt. should make the National Payment Corporation of India (RUPAY) much more robust and extend it to Credit card also. Govt should make bring the commission near to zero and promote RUPAY over VISA/MASTERCARD/MASTRO rigourously. Alternatively, it can also promote IMPS/NEFT for payment.
    Govt. promotes digital or not, its not acceptable to let VISA/MASTERCARD loot when we do have a inhouse solution.

  3. Raghuraman N's avatar Raghuraman N சொல்கிறார்:

    Sir.,
    One important point here is – everything will get accounted. Our current scenario is – most of the transactions are not accounted – so the recipients do not have compulsion to report their income – hence income gets evaded – not taxed.

    If the tax base is widened, then there will be a reduction in tax rates – this remains a dream for so many years. At least by digital transactions, there will be a process to get them accounted and taxed.

    Look at the real estate market – I could see many flats in Bangalore unsold. This eventually reduce the market value for those properties. The value for these were artificially inflated due to unaccounted money.

    PC is taking political opportunity to hit back.

    Regards

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.