…
…
ஆயிரத்தில் ஒருவர் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அவரது ஆயுட்காலத்திற்குள் இந்த வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டு, நிரந்தரமாக கம்பி எண்ண அனுப்பப்படுவாரென்று நம்புவோமாக…..
பல்கலைக்கழகத்திற்கு பாரதியாரின் பெயரை வைத்திருக்கிறார்களே என்று யோசிக்கிறார்களா …?
இல்லை நோட்டில் காந்தி படம் இருக்கிறதே என்று தயங்கி டாய்லெட்டில் பதுக்காமல் தான் இருக்கிறார்களா…?
பல்கலைக்கழக துணைவேந்தர்…!!! எத்தனை உயர்ந்த பதவி…அதில் எவ்வளவு கேவலமான மனிதர்கள்… !!!
தலைப்பில் ஆயிரத்தில் ஒருவர் என்று எழுதி அதை மாற்றி பல்லாயிரத்தில் ஒருவர் என்று எழுத நேர்ந்ததின் அவசியம் அனைவருக்குமே புரியுமென்று நம்புகிறேன்…. இரண்டு வருடங்களில் 20 கோடி ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஒரு இடத்திற்கு வருவதற்கு அவர், யார் யாருக்கு, எத்தனை கோடி
கொடுத்திருப்பார்….? அவர்கள் எல்லாரும் சிக்குவது எப்போது…?
எப்படி…?
கொள்ளை அடிப்பதற்கு துறைகள் ஒன்றா, இரண்டா…? கிரானைட், ஆற்று மணல், பதிவுத்துறை, டாஸ்மாக், போக்குவரத்து, பொதுப்பணி, சுகாதாரம்…. முக்கியமானவற்றை மறந்து விட்டேனே … குட்கா, லாட்டரி…!!!
சிக்கியவர் ஒருத்தர் தான். இன்னும் எத்தனையெத்தனை பேர் வெளியில்… இன்னமும் அதிகாரத்தில் இருப்பவர்கள்…
அதிகாரத்திற்கு வெளியில் இருப்பவர்கள்…
ஓய்வு பெற்றவர்கள்,
வெளிநாட்டிற்கு ஓடிப்போனவர்கள்…
முன்னாள்-இந்நாள் மந்திரிகள்,
வாரியங்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டங்கள், வட்டங்கள்,
IAS, IPS அதிகாரிகள்…
இப்போது அபூர்வமாக மாட்டியவர் விரோதம் காரணமாக அல்லது
சந்தர்ப்பவசமாக சிக்கியவராக / காட்டிக்கொடுக்கப்பட்டவராக இருப்பார்…
தவறு செய்தவர்கள் அத்தனை பேரையும் தண்டிக்க இந்த நாட்டின் சட்டங்களால் என்ன, இவர்களைப்படைத்த அந்த இறைவனாலும் கூடுமோ…?
…

…
“சத்யமேவ ஜெயதே” –
” வாய்மையே வெல்லும் “….
-இந்த நாட்டில் – சின்னங்களில் மட்டும் தானா…?



50-60களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இப்போது எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகிவிட்டது. எந்தத் துறையிலும் ஊழல், பணத்தை அபேஸ் செய்வது, கொள்ளையடிப்பது. என் மனதில், இப்போ 60%பேருக்கு மேல் இந்த மாதிரி, வெட்கப்படாமல், சங்கோஜப்படாமல் அடுத்தவன் காசை வாங்கிக்கொள்வதில் கைதேர்ந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது (தமிழர்கள், அதே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் கடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டிய தமிழ் இனம்).
இப்போவே நேர்மையா இருக்கறவன் ‘பைத்தியக்காரன், ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன்’ என்று அந்த அந்த அலுவலகங்கள் மட்டுமல்ல, பொதுமக்களே சொல்லுகின்றனர். இப்படி இருந்தால், விரைவில் 95% பேர், ஊழலில் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவார்கள். இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது தமிழ்’நாட்டுக்கு பெரும் கேடுதான்.
யார் பூனைக்கு மணி கட்டுவது? அனேகமா அந்தப் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லோரும் பூனைகளாக இருக்கிறார்களே?
புதியவன்,
// யார் பூனைக்கு மணி கட்டுவது? அனேகமா அந்தப் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லோரும் பூனைகளாக இருக்கிறார்களே?//
அது தான் பிரச்சினை… நம்பிக்கையானவர்கள் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை…
கண்ணுக்கு தென்படுபவர்களின் கையில் அதிகாரம் இல்லை…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மக்களும் ஓட்டு போட லஞ்சம் வாங்குகிறார்கள்.
எனவே நிச்சயம் இந்த கட்டுரையை பார்த்து மக்கள் பொறாமை மட்டுமே படுவார்களேயன்றி நிச்சயம் கவலை பட மாட்டார்கள்.
// இவர்களைப்படைத்த அந்த இறைவனாலும் கூடுமோ…? //
ஐயா,
உங்கள் வேதனை புரிகிறது.
இறைவனால் முடியாதது உண்டா? முடியாதவன் இறைவனாக இருக்கமுடியாது.
முடியும், நின்று கொல்லும். பொறுமை அவசியம். எதோ ஒரு காரணத்திற்காக விட்டுப்பிடிக்கிறான்.
இது மேலேயுள்ளவர்களுக்கும் மதவாதிகளுக்கும் மதத்தை காக்க புறப்பட்டுள்ளோம் என்று சொல்லி அட்டூழியம் செய்யும் மாபாதகர்களுக்கும் பொருந்தும்.
இன்றில்லாவிடில் நாளையாவது நடக்கும். ‘நாளை’ ….? நடக்கும்.
The chancellor should have suspended him(pending enquiry)
A rebel of AIADMK independent has won by giving cash to his constituency’s voters hoodwinking
DMK which was tipped to win the seat (as per the survey of a college professor) Ruling party was also defeated . a national party polled less than nota votes. How come? Because votes for notes
policy pursued by a nephew whose aunt is serving jail sentence in another state. This can happen onlly in Tamilnadu whose voters are aslo corrupted by the political parties. No wonder a vice chancellor has amassed wealth by getting bribes for posting his associates in the university. He should be suspended and should be punished for his crime.
மணி – துணைவேந்தர் பதவி, பணம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை. எல்லாப் பதவிகளும், கல்வி முதற்கொண்டு, முதல் போட்டு லாபம் எடுக்கும் தொழிலாகிவிட்டது. இதில், இவரை துணைவேந்தராகத் தேர்ந்தெடுத்தவருக்கு பொறுப்பு கிடையாதா? கோவில் பூஜாரிகளும் எப்போது அரசு தேர்ந்தெடுக்கும் என்ற நிலைமை வருகிறதோ, அப்போது அவர்களும் corrupt ஆகிவிடுவார்கள்.
திராவிடக் கட்சிகள், தமிழகம் முழுவதும் corrupt என்ற வலைக்குள் கொண்டுவரப்பார்க்கின்றனர். அப்போது யாரும் யாரையும் குறைசொல்ல முடியாதல்லவா?