…
…

NEW DELHI, INDIA – A Lady cleans compound of Parliament House on the first day of the Budget Session
…
கடந்த 15 நாட்களுக்குள் மோடிஜி இரண்டு தொலைக்காட்சி பேட்டிகளில்
( ஹிந்தியில்……டைம்ஸ் நவ், ஜீ நியூஸ்….)
(அவராகவே ……………………… கொடுத்தது தான் )
திரும்ப திரும்ப தன் விருப்பத்தைச் சொல்லி விட்டார்…
இந்தியாவில் அனைத்து சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று….
இதையடுத்து, ஜனாதிபதியும் பாராளுமன்ற துவக்க கூட்டத்தில் படித்த உரையில், இதை அரசின் விருப்பம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்….
இதனால் ஏற்படும் பலன்கள் என்று மோடிஜி கூறுவது –
1) அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் நிறைய பணம் மிச்சப்படும்….
எவ்வளவு…? சுமார் 4,500 கோடி ரூபாய்… 🙂 🙂
(5 வருடத்தில்….?)
2) எல்லா நேரமும் தேர்தல் வேலைகளில் நேரத்தை செலவழிக்காமல் ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம்….!!!
3) தேர்தல் நடத்தை விதி முறைகளை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தி, அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகளை இடையூறு இல்லாமல் தொடர்ந்து நான்காண்டுகளுக்கு நடத்த முடியும்….
இந்த 3 காரணங்களுமே, குறிப்பிடத்தக்க வகையில் –
ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய காரணங்கள் தான்… வரவேற்கப்பட
வேண்டிய கருத்துகள் தான்.
————————————————-
வெளிப்படையாக மோடிஜி கூறியுள்ள காரணங்கள் இவ்வளவு தான்….
ஆனால், நிஜத்தில் காரணங்கள் –
– இவ்வளவு தானா…?
– இவை மட்டும் தானா…?
– சொல்லப்படாத காரணங்கள் வேறு உண்டா…?
அவை என்னென்ன…? அவை ஏன் வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்கிற கேள்வி எழுகிறது…
ஏன் சொல்லப்படவில்லை என்றால் – எல்லாருக்கும் பொதுவான காரணங்களை மட்டும் தான் வெளிப்படையாக சொல்ல முடியும். ஆளும் கட்சிக்கு மட்டும் பயன் தரக்கூடிய காரணங்களை எப்படி வெளிப்படையாக சொல்ல முடியும்…?
பாஜக மட்டுமோ, மத்திய அரசு மட்டுமோ – இதை தீர்மானித்து விட முடியாது…. இத்தகைய ஒரு முடிவை அமல்படுத்த வேண்டுமானால், அரசியல் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மூன்றில் இரண்டு பங்கு -மாநில அரசுகளும் அவற்றை ஏற்க
வேண்டும்….
இதுவரை, பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இதை ஆதரித்து
பேசவில்லை… அதன் கூட்டணி, தோழமை கட்சிகள் உட்பட…!!!
மோடிஜி கூட – கருத்து சொல்லி இருக்கிறாரே தவிர, இதற்கான செயல், நடவடிக்கைகள் எதையும் துவங்கக்கூட இல்லை….!
இது நடக்குமா …? –
எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும், சம்மதமும் இன்றி நடக்க வாய்ப்பே இல்லாத இத்தகைய ஒரு யோசனையை மோடிஜி கூறி இருப்பது ஏன்..?
2018-ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்கள் நடக்க வேண்டும்…
ராஜஸ்தான்,
மத்திய பிரதேசம்,
சட்டிஸ்கர்,
கர்நாடகா,
மிசோரம்,
நாகாலாந்த்,
திரிபுரா,
மேகாலயா
-இவற்றில் 4 மாநிலங்களில் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் இருக்கிறது. மத்திய பிரதேசத்திலும், சட்டிஸ்கரிலும் – 3 தடவையாக (கிட்டத்தட்ட 15 வருடங்களாக….)… இங்கெல்லாம் பொதுவாகவே ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு மன நிலை மக்களிடம் உருவாகி இருக்கும்….ராஜஸ்தானிலும் அரசுக்கு
எதிரான உணர்வு வலுவாக இருக்கிறது…
இதைத்தவிர, மே,2019-ல் பாராளுமனறத்திற்கு தேர்தல்கள் வேறு நடத்தப்பட வேண்டும்….
மோடிஜிக்கு எதிராக அவருக்கு இணையான – வலுவான எதிர்க்கட்சித்தலைவர் யாரும் இல்லை என்பதும் –
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததும், பாஜகவுக்கு சாதகமாக
இருந்தாலும் – மத்திய அரசின் மீது அண்மைக்காலங்களில் மக்களிடையே கணிசமான அளவிற்கு ஒரு எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது…
இவற்றை மறக்கடிக்கவும்,
தேர்தல் களத்திற்கான விவாதப் பொருளை திசைதிருப்பவும் – நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட ஒரே நேரத்தில் தேசம் முழுவதும் தேர்தல் என்கிற தனது முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்கள் விரோத, வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்கிற ஒரு புதிய கோஷம்
முன்வைக்கப்படலாம்.
இன்னும் பல காரணங்கள் கண்ணெதிரே தோன்றுகின்றன… ஆனால், இவற்றை நான் மட்டுமே சொல்வதை விடுத்து, நண்பர்களும் ஆராய்ந்து விவாதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
பின்னூட்டங்கள் மூலம் விவாதிப்போமே…



உண்மையில் இது வரவேற்கக்கூடிய ஒன்றுதான்.
தேர்தல்கள் தொடர்ந்து மாறி மாறி வருவதால் எப்போதும் கூட்டணி கட்சிகளை சரிகட்ட வேலை செய்ய வேண்டியுள்ளது. so called populist schemes தொடர்ந்து தர வேண்டியுள்ளது.
தவிர, ஒட்டுமொத்தமாக பிஜேபி தோற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது நம் நாட்டுக்கு நல்லது 😉
இது சாத்தியமில்லாத ஒன்று. ஜன’நாயகத்துக்கு எதிரானது.
Advantage
சட்ட சபை, பாராளுமன்றம் இரண்டிலும், தேசீய வாதம் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும்போது, வாக்காளர்கள் புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில் (30%க்குமேல் வாக்களிப்பவர்களில் சிந்திப்பவர்கள் இல்லை என்பது நாட்டு நிலைமை) இருவேறு கட்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம். Down the line மாநிலக் கட்சிகளின் வலு குறைய ஆரம்பிக்கும். இந்தியா, ஒரே தேசம் என்ற சிந்தனை அதிகமாகும்.
Disadvantage
4 வருஷங்களும் மக்களைப் பற்றி கவலையே படமாட்டாங்க. அதிருஷ்டத்துல ஆட்சிக்கு வந்தவங்க, அல்லது, அந்த முற்போக்கு கூட்டணி, பிற்போக்கு கூட்டணின்னு form பண்ணி ஆட்சி அதிகாரத்தைச் சுவைப்பவர்கள், மக்களைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் சுருட்டுவதிலேயே இறங்கிவிடுவார்கள் (உதாரணம் காங்+திமுக+லாலூ கூட்டணி 10 ஆண்டுகள் சுருட்டியது)
இப்போ உள்ள முறைல, 5 வருஷத்துல, குறைந்த பட்சம் 10 தேர்தல்கள் நடக்கின்றன. அதனால் வருஷத்துக்கு இரு முறையாவது ஆளும் கட்சி மக்களை தேர்தல் வடிவில் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதனால் CHECK & BALANCE இருக்கிறது. தோல்வியுற்றால், வாக்கு சதவிகிதம் குறைந்தால், என்ன தப்பு என்று பார்த்து சரி செய்யமுடியும். இல்லைனா, மக்களோட எண்ணவோட்டம் எப்படித் தெரியும்?
சாத்தியமில்லை
மானில அரசு என்பது நிலையானதல்ல (சில சமயங்களில் மத்திய அரசும்). மானில அரசு கவிழும்போது, மத்திய அரசு, மீதிக்காலத்தில் கவர்னர் ஆட்சி மூலம் ஆள நினைக்கும். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது.
இரண்டாவது, தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யாமல், எல்லா ஓட்டைகளையும், ACCEPTABLE நிலைமைக்குக் கொண்டுவராமல் இந்த மாதிரி முயற்சி செய்வது, எந்த வித உபயோகத்தையும் தராது. (உதாரணமா, பதிவு செய்த கட்சிகளைத் தவிர-அதுவும் 3-4 கட்சிகள்தான் இருக்கணும், தொடர்ந்து ரெண்டு தேர்தல்ல 15-20%க்கு குறைவா வாக்கு வாங்கினா கட்சி அங்கீகாரம் கிடையாது, இடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர் இறந்தால், அவருடைய கட்சி இன்னொரு மெம்பரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், ஒரு தேர்தலுக்கு ஒரு தொகுதியில் 5 பொதுக்கூட்டம்தான், வீதி வீதியா வாக்காளரைப் பார்க்க வருவது தடை செய்யப்படணும் போன்று)
பொது மக்கள் நினைப்பது
4500 கோடி சேமிக்கலாம் என்பது அர்த்தமே இல்லாதது. இவங்க சொல்றதைப் பார்த்தால், as if நாட்டு நலனை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சி புரியறமாதிரித்தான். அவன் அவன் லட்சம் கோடிகளை ஸ்வாகா பண்ணிட்டிருக்கான், 4500 கோடியை பெருசா சொல்றாங்க. நேற்று ரயில் பிரயாணத்துக்குக் காசில்லாமல் இருந்தவங்க, இன்னைக்கு ஒவ்வொரு குடும்ப மெம்பரும் ஆயிரம் கோடி வச்சிருக்காங்க, அறக்கட்டளை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கேயிருந்து வந்தது? (இது மாதிரி ஒவ்வொரு கட்சியையும் கேட்கலாம்)
புதியவன்,
நீங்கள் சொல்லும் இந்த வாதங்கள் மிகவும் வலுவானவை….
—–
மானில அரசு கவிழும்போது, மத்திய அரசு, மீதிக்காலத்தில் கவர்னர் ஆட்சி மூலம் ஆள நினைக்கும். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது.
———
தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யாமல், எல்லா ஓட்டைகளையும், ACCEPTABLE நிலைமைக்குக் கொண்டுவராமல் இந்த மாதிரி முயற்சி செய்வது, எந்த வித உபயோகத்தையும் தராது.
உதாரணமா, பதிவு செய்த கட்சிகளைத் தவிர-அதுவும் 3-4 கட்சிகள்தான் இருக்கணும், தொடர்ந்து ரெண்டு தேர்தல்ல 15-20%க்கு குறைவா வாக்கு வாங்கினா கட்சி அங்கீகாரம் கிடையாது,
இடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர் இறந்தால், அவருடைய கட்சி இன்னொரு மெம்பரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ஒரு தேர்தலுக்கு ஒரு தொகுதியில் 5 பொதுக்கூட்டம்தான், வீதி வீதியா வாக்காளரைப் பார்க்க வருவது தடை செய்யப்படணும் போன்று –
———–
யோசித்தால், கூடவே இன்னும் சில விஷயங்கள் கூட தோன்றும்……
உதாரணமாக –
போஸ்டர்கள், பேனர்கள் வைப்பதற்கென்று, குறிப்பிட்ட இடங்களை தேர்தல் கமிஷனே தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அந்த இடங்களைத் தவிர, வேறு எங்கும் விளம்பரங்கள் செய்யக்கூடாது…
ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக்கூடாது…
தேர்தல் வழக்குகள், தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து வைக்கப்பட வேண்டும்…
தேர்தல், அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட வேண்டும். பிரச்சாரத்திற்கு 2 வாரங்களுக்கு மேல் அவகாசம் கொடுக்கக்கூடாது…
எல்லா தொகுதிகளிலும், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். (போலி ஓட்டுக்களை தடுக்க….)
-காவிரிமைந்தன்
இதில் என்ன தவறு இருக்க முடியும்.
சட்டசபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் தனித்தனியாக நடக்கும் பொது மக்கள் தீர்ப்பு குளப்பும்படியாக உள்ளது.
இரண்டும் ஒன்றாக நடக்கும் பொழுது நிச்சயம் தேசிய காட்சிகள் மாநிலங்களில் பலம் பெரும்,. இது நிச்சயம் நாட்டுக்கு நல்லதுதான்.
விபரீதமாக நாம் தவறு காணத்தான் வேண்டுமா?
It is Indira Gandhi who delinked state elections from national elections and paved the way for mushroom growth of regional parties and parochial ideologies.Perhaps simultaneous elections will help emergence of panindian and effective growth of leadership at all levels.Remember acjevements of RVenkatraman And Kamaraj.Thiruvengadam
கே.எம்.சார்,
இங்கே ஒரு பெரிய சந்தேகம் வருகிறது. 5 வருடங்களுக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி,எதாவது ஒன்று அல்லது சில மாநிலங்களில், எதாவது காரணத்தால், மெஜாரிடி இழந்து ஆட்சி கவிழ்ந்தால், வேறு எந்த கட்சிக்கும்
ஆட்சி அமைக்க மெஜாரிடி இல்லையென்றால், அங்கே என்ன நடக்கும் ?
suppose 2-வது வருடமே ( நம்ம தமிழ்நாட்டை போல ) ஆட்சி கவிழ்ந்தால்,
மீதி 3 ஆண்டுகளுக்கும் ஜனாதிபதி (அதாவது மத்திய அரசின்) ஆட்சி தானா ?
3 வருடங்கள் ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்தால் அது எப்படி ஜனநாயகமாகும் ?
மாறாக, மத்திய அரசு 3வது வருடமே கவிழ்ந்து விட்டால், அடுத்த 2 ஆண்டுகள்
ஜனாதிபதி ஆட்சி நடத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா ? இல்லை 32 மாநிலங்களிலும் ஆட்சியை கலைத்து விட்டு, மீண்டும் 3-வது வருடமே எல்லா
மாநிலங்களிலும், மத்தியிலும் தேர்தலா ?
இந்த யோசனையே பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதே.
“இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எந்த வித அடையாளமும் இல்லாத வெறும் நிர்வாக அலகுகள் மட்டுமே என்று நினைக்ககூடிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் இது”
“இந்தியா முழுமையையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்கிறது ஆர்.எஸ். எஸ் சித்தாந்தம். அதாவது எந்த பன்முகத்தன்மையையும் அது விரும்புவது இல்லை. இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு நடைமுறை அரசியல் சாசன வடிவம் கொடுப்பது அன்றி வேறொன்றுமில்லை.” என்கிறார்
என்கிறார் அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான ஆழி செந்தில்நாதன்.
ஆழி செந்தில்னாதன், சமஸ் போன்றவர்களெல்லாம் அவர்களாகவே ஒவ்வொரு சித்தாந்தத்தையும் எழுதி, இது பாஜக சித்தாந்தம், ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தம் என்று எழுதி திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.
நான் அறிந்த வரையில் ஆர்.எஸ்.எஸ். (அல்லது பாஜக சார்புகள்) என்ன நினைக்கின்றது என்றால், இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் என்று இந்தியாவைப் பிரித்துக்கொடுத்தாகிவிட்டது, இந்தியா இந்துக்களின் தேசம், அதற்கான அடையாளம்தான் எல்லா இடத்திலும் இருக்கவேண்டும் என்று. அதற்கு சாத்தியம் இல்லை.
ஆனால் இந்த தேசம் பிறந்தபோதே அது எதை நோக்கிச் செல்லவேண்டும் என்று எழுதப்பட்டுவிட்டது. அதை மாற்ற யாராலும் முடியாது. காந்தி போன்ற தேசத் தலைவர்கள் எது நல்லது என்று நினைத்து விதை போட்டார்களோ, அதுதான் மரமாக வருமே தவிர, ‘குறுகிய சித்தாந்தங்கள்’ வெற்றிபெற இயலாது. அதே சமயம், காந்தியின் சித்தாந்தம் deviate ஆகிறமாதிரி நடக்கும் செயல்களை (இந்திய தேசத்தைப் பாதிக்கும் செயல்களை) பாஜக களைய முனையவேண்டும்.