…
…

…
சர்தார் படேல் அவர்கள் சுதந்திர இந்தியாவின் துணை பிரதமராக
பதவி வகித்தவர். உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பும் அவரிடம்
தான் இருந்தது.
RSS இயக்கம் தேச விரோத இயக்கம் என்று அறிவித்து, 1948-ல்
அந்த இயக்கத்தை தடை செய்தவர் அப்போதைய துணை பிரதமர்
திரு.சர்தார் படேல் தான்.
மஹாத்மா காந்தி கொல்லப்பட்டபோது, சர்தார் படேல் அவர்கள்
சொல்லியவற்றில் சில அவரது வார்த்தைகளிலேயே –
…

…

…
——————————————-
” காந்திஜியின் கொலைச்சதியில் ஈடுபட்டவர்கள் ஹிந்து மஹா
சபையை சேர்ந்த சில தீவிரவாதிகள் தான் என்பது குறித்து என்னுடைய
மனதில் எந்தவித சந்தேகமும் இல்லை.”
“RSS இயக்கத்தின் செயல்பாடுகள் இந்த நாட்டிற்கும், அதன்
இறையாண்மைக்கும் அச்சுறுத்தலானது…
அதன் தலைவர்களின் உரைகள் விஷத்தை கக்குவதாக இருக்கின்றன.
“அந்த விஷத்தின் விளைவாகவே காந்திஜி கொல்லப்பட்டார்…”
அதை இனிப்பு கொடுத்து கொண்டாடினர் அந்த இயக்கத்தின்
தொண்டர்கள். ”
—————————————-
சர்தார் படேல் அவர்களுக்கு உரிய இடத்தை காங்கிரஸ் கட்சி
கொடுக்கவில்லை என்பது உண்மையே. அவர் மறைந்த பிறகும் கூட,
இந்திய அரசின் சார்பில் அவருக்கு பெரிய அளவில் எதுவும்
மரியாதைகள் செய்யப்பட்டதில்லை என்பதும் உண்மையே…… !
இதற்கு முக்கியமான காரணம் – சுதந்திரம் கிடைத்த நாள் முதல்
பல வருடங்களுக்கு நேருஜியே பிரதமராக இருந்ததால்,
அவர் தனது போட்டியாளரான சர்தார் படேலுக்கு விளம்பரம்
கொடுக்கப்படுவதை அங்கீகரிக்கவில்லை என்பது தான்….
இது சர்தார் படேல் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆனால், ஒரு பழுத்த காங்கிரஸ்காரரான, RSS இயக்கத்தை கடுமையான வார்த்தைகளால் விமரிசித்த, அந்த இயக்கத்தையே தடை செய்த ஒருவரை
இன்று விழுந்து விழுந்து கொண்டாடுவது ஏன்…?
காங்கிரஸ் கட்சி சர்தார் படேலுக்கு உரிய பெருமையையும், இடத்தையும்
கொடுக்கவில்லை. அதனால் தான் நாங்கள் பெருமைப்படுத்துகிறோம் என்று
சொல்லலாம். ஆனால், காங்கிரசில் அப்படி”ஒதுக்கப்பட்ட”, “மறக்கப்பட்ட” தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பாஜக கண்டு கொள்ளாமல் சர்தார் படேலை மட்டும் கொண்டாடுவது ஏன் என்கிற கேள்வி எழுகிறது…..!
” குஜராத் அஸ்மிதா….???? ”
———————————————
பின் குறிப்பு –
1) இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியும் இருக்கிறது. RSS தலைவர்கள் யாரும் இந்த விழாக்களில் கலந்து கொள்ளவில்லை… சர்தார் படேலை எங்கும் புகழ்ந்து பேசவும் இல்லை…!!!
2) நேற்று உலக வங்கி தனது புதிய list of countries that are Easy to do Business -ஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா கடந்த ஆண்டை விட
30 புள்ளிகள் தாண்டி முன்னுக்கு வந்திருக்கிறது, அதாவது 130-லிருந்து
100-க்கு. இதற்கான பெருமை முழுவதும் மோடிஜி அரசு மேற்கொண்ட
நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கே போய்ச்சேர வேண்டும்.
– இது நிச்சயம் பாராட்டுதலுக்குரிய ஒரு விஷயம். இந்த சாதனைக்காக மோடிஜி அரசை பாராட்டுவோம்…!
—————————————————————————————



பின்குறிப்பு 1: கருத்து இல்லை.
பின்குறிப்பு 2: முதலாம் இடத்திற்கு இந்தியா வர வாழ்த்துக்கள். கிளீன் இந்தியா [ வெளிநாட்டுக்காரன் துடைத்து அள்ளிக்கொண்டு போவான் அப்போ ] போலோஜி பாரத்மாதாகி……
உங்கள் இரண்டாம் கருத்து சரியான assessment இல்லைனு நினைக்கிறேன். ‘வெளி’நாட்டுக்காரன் துடைத்துக்கொண்டு போகக்கூடாது’ என்று நாம எண்ணினா, எந்த சைனா பொருட்கள், வெளி’நாட்டுப் பொருட்கள் எதுவும் வாங்கக்கூடாது. ஏர் இந்தியாவில் மட்டும்தான் பிரயாணம் செய்யவேண்டும் (ஜெட் ஏர்வேஸ் ஓகே). சரவண பவன், தலைப்பாக்கட்டி போன்றவை மட்டும்தான் உண்ணவேண்டும், கேஎஃப்சி, பிட்சா, நூடுல்ஸ் போன்றவற்றைக் கனவில்கூட நினைக்ககூடாது. உள்ளூர் வாழை, கொய்யா மட்டும்தான் சாப்பிடணும், ஆப்பிள் – காஷ்மீர்/ஹிமாச்சல் பிரதேஷ் மட்டும்தான் allowed. இதெல்லாம் நடக்கிற காரியமா? இதைச் சொன்னால் நம்ம பசங்களை நம்மை கீழப்பாக்கத்துக்கு அனுப்பிருவாங்க.
உலகமயமாக்கல் ஆரம்பிச்சானா அதை நிறுத்த முடியாது. Indian goods competentஆ இல்லைனா இந்தியா வளராது.
“படேலை மட்டும் கொண்டாடுவது ஏன் என்கிற கேள்வி எழுகிறது…..!” – எனக்குத் தோன்றுவது, நேரு குடும்பத்துக்கு மாற்றா, வல்லபாய் படேலை உயர்த்துகிறார்கள் என்று. இந்திய அரசியலில், சர்தார் படேல், சாஸ்திரி (இவர் மரணமே சந்தேகம்), மொரார்ஜி, காமராஜர் போன்றோர் அவர்களுக்கு உரிய இடம் பெறவில்லை. ஆனாலும், குஜராத்தி என்பதற்காகச் செய்ய ஆரம்பித்தால், அது பாஜகவுக்கு பெரிய பின்னடைவைத் தரும். (இப்போவே சிவசேனா ரொம்ப முறுக்கிக்கொள்கிறது).
”undesirable and even dangerous activities have been carried on by members of the Sangh. It has been found that in several parts of the country individual members of the RSS have idulged in acts of violence involving arson, robbery, dacoity, and murder and have collected illicit arms and ammunition. They have been found circulating leaflets exhorting people to resort to terrorist methods, to collect firearms, to create disaffection against the government and suborn the police and the military.”
இந்த பயங்கரவாதிகளின் இன்றைய நடவடிக்கைகளில் மாற்றம் எதாவது இருக்கா. இன்னும் இந்த தேச துரோகிகளின் பயங்கரவாதிகளின் terrorist-களின் அட்டூழியங்கள் மிகவும் அதிகரித்து தானே இருக்கு. இவர்களை இந்த கொலை பாதகர்களை வாழ்நாள் தடை செய்ய எல்லா காரணமும் இன்னமும் கூட இருக்கே.
சர்தார் படேல் பிரதமராகி இருந்தால் நிச்சயம் RSSஐ நிரந்தரமாக தடை செய்திருப்பார். காங்கிரஸ் படேலுக்கு மட்டுமா அநீதி இழைத்தது. அது ஒரு நெடிய தொடர்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று கூறினார், ”சர்தார் படேல் பிரதமராகி இருந்தால்.., அவர் பாஜக கூட்டாளிகளை திருப்திப்படுத்த சொன்னதாக இருந்தாலும், ஆம் இன்று இந்தியாவின் வரலாறு வேறு விதமாக தான் இருந்திருக்கும். நிதிஷ்குமார் சொன்ன பொருளில் அல்லாமல் நிரந்தர தடையாகி இருந்தால் தலித்துகள் சிறுபான்மையோர் இன்னும் பல சமுதாய மக்கள் நிம்மதியாக உயிருடன் இருந்திருப்பர். இந்த நாடும் பெரும் அமைதிப் பூங்காவாக இருந்திருக்கும்.
பிரிவினையை ஜின்னாவுக்கும் முன்பு முதலில் கோரிய இந்த நாட்டை நாசமாக்கும் மாபாதக தேச துரோக திட்டத்துடன் செயல் படுத்திய ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிய இந்த சதிகார கும்பளை எதிர் காலத்தில் நல்ல ஒரு ஆட்சி அமைந்து, அது காங்கிரஸ் அல்ல, இந்த கொலைகார பயங்கரவாத தீவிரவாத அமைப்பை நிரந்தர தடை செய்யும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
” குஜராத் அஸ்மிதா….???? ”
ஐயா,
தயவுசெய்து அது என்னவென்று கொஞ்சம் சொல்லிவிடுங்களேன்.
சும்மா தமாஷுக்காக,
குஜராத் தேர்தலிலிருந்து பாஜகவின் ‘அஸ்த்தமனம்’ ஆரம்பமாகிறது என்று சொல்லலாமா…!
ஆசையப்பாரு பய புள்ளைக்கு!
“The government claims there has been a movement forward in ease of doing business… I request Arun Jaitley to go to a small or medium businessmen and ask him (about it, and) he will (say) that ease of doing business was killed by demonetisation.”
सबको मालूम है “ease of doing business” की हकीकत, लेकिन
ख़ुद को खुश रखने के लिए “Dr Jaitley” ये ख्याल अच्छा है
There is no ease of doing business in India: Rahul Gandhi in Gujarat
The government is working only to benefit a few chosen businessmen: Rahul Gandhi
“(Then chief minister) Modi gave a Rs 33,000 loan crore (for the) Tata Nano (project) almost for free… In spite of that there are no Tata Nano seen on roads (today), Rahul Gandhi