.
.
கீழே இருப்பது இன்று “மாலைமலர்” நாளிதழுக்காக
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த விசேஷ பேட்டியிலிருந்து ஒரு பகுதி –
கேள்வி:
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளோடு
கூட்டணி அமைக்க முயற்சித்தீர்களா?
பதில்:
ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் நாங்கள் முயற்சித்து இருந்தால் கூட்டணி அமைத்து இருக்க முடியும்.
—-
( நாங்கள் தான் இரு கட்சிகளையும்
வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறோம்….! )
———————
” ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் ” – என்றால்,
ஆசை காட்டியோ, சலுகைகள் கொடுத்தோ,
பயமுருத்தியோ கூட்டணி அமைத்திருக்க முடியும்
என்று சொல்கிறாரா …?
வேறு என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்க முடியும் ….?



முதல் இரண்டையும் பண்ணிப் பார்த்து விட்டார்கள்.
முடியவில்லை. மூன்றாவதைத் தான் முயற்சிக்கவில்லை
என்று தெரிகிறது.
தனித்து போட்டியிட்டால், தன் உண்மையான
ஓட்டு சதவீதம் வெளியே தெரிந்து விடுமே என்று
பஜகவிற்கு பயம். அதனால் தான் திரும்ப திரும்ப
கூட்டணி தேடி அலைகிறார்கள்.
சென்றமுறை வாங்கிய ஐயாயிரத்து சொச்சம் ஓட்டு வெளியே தெரியவில்லையா ஐயா?
உண்மையை உளறியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
One cannot be certain –But generally the regional parties would like to be close to the ruling party at the centre to get things for their states — AIADMK wants to go it alone and DMK has chosen Congress —
Mr.LVISS,
So it is possible only if the state party concerned is interested in it.
Then how can they say –
//ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் நாங்கள்
முயற்சித்து இருந்தால் கூட்டணி அமைத்து
இருக்க முடியும்.//
The fact is the BJP tried its best, but could not succeed.
So it is nothing but
//உண்மையை உளறியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.//
// ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் நாங்கள் முயற்சித்து இருந்தால் கூட்டணி அமைத்து இருக்க முடியும்.// இவர் இந்தஇரண்டு கட்சிகளின் — 2 ஜி . மற்றும் சொத்து குவிப்பு ” வழக்குகளை ” மனதில் கொண்டு தான் இதை கூறியிருக்கணும் — அதனால் தங்களின் முந்தைய இடுக்கை // நடந்தது அத்தனையும் நாடகம் – திருமதி பிரேமலதா வி.காந்த் அவர்களின் கதை, வசனம் இயக்கத்தில்….!!!
Posted on மார்ச் 12, 2016 by vimarisanam – kavirimainthan — இதன் கூட்டு தயாரிப்பாளர்கள் பாஜக மற்றும் தேமுதிக தலைமை என்று தெரிய வருகிறது. // என்று குறிப்பிட்டு இருந்திர்கள் …. இவர்கள்கூடி பேசியபோது கண்டிப்பாக இந்த வழக்குகளை பற்றி விவாதித்து — தீர்ப்பு தேர்தலுக்கு முன்பு பாதகமாக வந்தால் ” நாம் தான் ஆட்சி அமைப்போம் ” என்று ஐடியா உருவாகி — இப்போதைக்கு தனித்து போட்டி என்று கூறி மக்கள் நல கூட்டணியையும் உங்களோடு இணைத்து கொண்டால் — பின் நாங்கள் { பா.ஜ.க. } வந்து ஐக்கியமாகி விட்டால் வெற்றி நமதே என்கிற திட்டத்தின் வெளிப்பாடே — பிரேமலதாவின் இரண்டு கட்சிகளையும் — ஜெயாவையும் நேரடியாக அட்டாக் செய்ததும் — இப்போது தமிழிசை இப்படி கூறுவதும் நடந்திருக்க ” வாய்ப்பு ” உண்டல்லவா …. ?