பரமார்த்த குருவும் – சீடர் ஷண்முகநாதனும்…….

karunanithi-and-shanmuganathan

தமிழ் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் அனைத்துமே –
திரு.ஷண்முகநாதனை, சிபிஐ நேரில் வரச்சொல்லி தொலைபேசி
மூலம் சொன்னதாகவும், அவர் பதிலுக்கு தன் வழக்குரைஞரிடம்
பேசுமாறு கூறி விட்டதாகவும்,
அதனைத் தொடர்ந்து சிபிஐ எழுத்து மூலம் சம்மன்
அனுப்பப்போவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த செய்திகளில், மற்றவர்களை பற்றி தகவல் ஏதும் இல்லை.

shanmuganathan news

ஆனால், இந்து ஆங்கில நாளிதழில் இன்னும் கொஞ்சம் விவரமாக, திருவாளர்கள் ஷண்முகநாதன், சரத் ரெட்டி, ஜாபர் சேட் மற்றும் திருமதி கனிமொழி ஆகிய நான்கு பேரையுமே சிபிஐ அழைத்திருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.

திருமதி கனிமொழியிடம் மட்டும், அவர் வரவேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் ( ? ) சொல்லி இருப்பதாகவும் தகவல்…
(திருமதி கனிமொழியின் குரல் “சாம்பிள்” ஏற்கெனவே அவர்களிடம் இருக்கக்கூடும்…)

ஒரு முக்கிய விஷயம் இங்கு “பளிச்”சென்று தெரிகிறது…..
இவ்வளவு பரபரப்பான செய்திகள் வெளிவந்தும்,
இன்னமும் கலைஞர் இது குறித்து வாயே திறக்கவில்லை.
திரு. தயாநிதி மாறனின்
முன் ஜாமீன் வழக்கு குறித்து –
சிபிஐ “யாரையோ” திருப்திப்படுத்த முயல்கிறது என்று
அவ்வளவு தீவிரமாக கருத்து தெரிவித்தவர்
இங்கு ” அமைதி ” காப்பதன் காரணம் புரிகிறதா ….?

அங்கு சிபிஐ முறைத்துக் கொண்டாலும் கவலை இல்லை. சம்பந்தப்பட்டவர், பாதிக்கப்படப்போகிறவர் – தயாநிதி தான்.

ஆனால் இங்கு …?
கலைஞரே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்….!
“டேப்” பில் கலைஞர் டிவியின் 214 கோடிகள் பணப்பரிமாற்றம்
குறித்து அவருக்கு தெரியும் என்று ஷண்முகநாதன்
உறுதி செய்கிறார்.

எனவே, தனது சொந்த உதவியாளரையும், மகளையும்
சிபிஐ விசாரணைக்கு அழைத்தும் கூட தலைவர்
இதுவரை வாயே திறக்கவில்லை….
எங்கு திறக்க வேண்டும் – எங்கு வாய்பொத்தி மௌனம் சாதிக்க வேண்டும் என்று
கலைஞருக்கு தெரியாதா என்ன …!

நேற்றைய பதிவின் பின்னூட்டங்களில் நண்பர்கள்
சொன்னது போல்-
இப்போதெல்லாம் இந்த விசாரண பற்றி சீரியசாக
எடுத்துக் கொள்ள தோன்றவில்லை.
எல்லாம் ஆரம்ப சூரத்தனம் – மிகத் தீவிரமாக விசாரணை, வழக்கு நடவடிக்கைகள் இருப்பது போல் அவ்வப்போது ஒரு செயற்கை தோற்றத்தை உண்டு பண்ணி விட்டு பின்னர் வழக்கம்போல் எங்கேயாவது போய்
பதுங்கிக்கொள்ளும். அவ்வளவே…!!!

2 ஜி வழக்கில் நாம் பார்க்காத பரபரப்பா ?
இப்போது அதன் கதி என்ன….?
பலீன்சடுகுடு விளையாடுவது போல – ராசா
தெருவுக்கு தெரு வந்து “என்னை என்ன செய்துவிட முடியும் ?”
என்று சவால் விட்டு விட்டு, போய்க்கொண்டே இருக்கிறார்…!!

நேற்றைய பதிவை எழுதும்போது – முன்னர் ஒருமுறை
ஷண்முகநாதன் அவர்கள் கலைஞரிடம் மாட்டிக்கொண்டு
விழிப்பது குறித்து தமாஷாக ஒரு இடுகை எழுதியிருந்தது
நினைவிற்கு வந்தது.

இடுகை – காமெடி தான் என்று முடிவாகி விட்டது.
அப்புறமென்ன – அதையும் கீழே தருகிறேன்…
மீண்டும் ஒரு முறை வடிவேலுவை ரசிப்போம்…..!!!

————–
கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!
Posted on ஜூலை 2, 2014

————

கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக,
செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின் இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி –

————

“சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய
அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட,
என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர்.
வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை

ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்.”

தமிழுக்கு ஏற்றம் தருவோம் –

தொடர்ந்து கருணாநிதி பேசியபோது,
“நான் நடத்தி முடித்தது தமிழ்த் திருமணம்.
மணமக்கள் பெயர் விக்ரம், நிஷாந்தி.

முடிந்தவரை தமிழுக்கு ஏற்றம் தரும் அளவுக்கு நாம்
நடந்துகொள்ள வேண்டும். இப்போது விட்டுவிட்டால்
தமிழைக் காப்பாற்ற, தமிழுக்கு நேரும் ஆபத்துக்களை
தடுத்து நிறுத்த யாருமே இருக்க மாட்டார்கள்.
எதிர்காலத்திலே தமிழ் இருக்குமா என்ற கேள்வியோடு,
இன்றைக்கும் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் அப்படிப்பட்ட புயல் இந்தியாவிலே வீசி,
அது தென்னகத்திலே தவழ்ந்து, தமிழகத்திலும் புயலாக
மாறியிருக்கிறது, அந்தப் புயலைத் தடுத்து நிறுத்த
சண்முகநாதனுக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

விக்ரம் என்ற மணமகன் பெயரையும்,
நிஷாந்தி என்ற மணமகள் பெயரையும், கூடுமான வரை
தமிழ்ப் பெயர்களாக மாற்றி, தமிழுக்குப் பெருமை
தேடித் தாருங்கள்”
என்றார்.

இதையடுத்து, ‘நீங்களே தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ என்று
கருணாநிதியிடம் சண்முகநாதன் கூறினார்.

“நல்ல பெயர்களாக சிந்திப்பதற்கு எனக்கு சிறிது நேரம்
வேண்டும். அந்தப் பெயர்களை வீட்டுக்குப் போன பிறகு
நிச்சயமாகச் சொல்வேன், அந்தப் பெயர் முரசொலியில்
வெளிவரும்”
என்று கருணாநிதி தெரிவித்தார்

————————-

இந்த செய்தியைப் படித்தவுடன் என் மனதில்,
ஷண்முகநாதன் இடத்தில் வைகைப்புயல் வடிவேலுவை
வைத்துப் பார்த்தேன்….

ஒரு வேளை அது வடிவேலுவாக இருந்தால் –
அவர் தன் மனதுக்குள் இப்படிப் புலம்பி இருப்பாரோ ….?

“அய்யா – அம்பது வருஷமா ஒங்கூட குடுத்தனம் பண்றேன்.
அதுக்கு இப்படி ஒரு கைங்கரியம் நீங்க பண்ணுவீங்கன்னு
கனவுல கூட நான் நெனக்கல்லையே மவராசா….

ஊருல, ஒலகத்துல எவ்வளவோ பேர் இருக்காங்க ….
ஒங்க வூட்டுல இல்லாத மக்களா, ஆளுகளா – பேருகளா ….?

ஒங்க பேரன் உதயநிதி இருக்காக ….
அவங்க பொஞ்சாதி கிருத்திகா இருக்காக ….
அவங்க கம்பேனி “ரெட் ஜெயண்ட் ” இருக்கு…..

ஒங்க மக கனிமொழி அம்மாவோட மகன்
“ஆதித்யா” இருக்காக…

ஒங்க பேரன் மாறன் கம்பேனிங்க –
” சன் பிக்சர்ஸ்” இருக்கு….
தொலைக்காட்சிக –
“சன் டிவி” இருக்கு –
“கே டிவி” இருக்கு –
“ஆதித்யா டிவி” இருக்கு –
“சன் ம்யூஸிக்” இருக்கு –
“சன் நியூஸ்” இருக்கு –

மதுரைப் பேரன் துரையோட –

“க்ளோவ்டு நைன்” சினிமா கம்பெனி இருக்கு –

ஒங்க எல்லைக்குள்ள இன்னும் என்னென்னவோ இருக்குக …
எல்லாத்தையும் விட்டூட்டு இப்படி
எங்குடும்பத்துக்குள்ள பூந்து
குத்து வெட்டு உண்டு பண்றீங்களே என் ராசா …..

அம்பது வருஷமா ஒங்ககூடவே இருக்கற
இந்த வெட்டிப்பயலுக்கு
இது தான் நீங்க செய்யற கைங்கறியமா ….என் ராசா……?”

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பரமார்த்த குருவும் – சீடர் ஷண்முகநாதனும்…….

  1. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! இங்கு எல்லாமே ஆரம்ப சூரத்தனம்தான். நலத் திட்டப் பணிகளோ, ஐந்தாண்டுத் திட்டங்களோ, ஊழலுக்கு எதிரான இரும்புக்கர நடவடிக்கைகளோ எல்லாம்… எல்லாம்… எல்லாமே! ஒன்றே ஒன்றைத் தவிர! தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனும் பெயரில் எதைத் தொடங்கினாலும் அது கடைசியில் அந்த இனத்தின், பகுதியின் மக்கள் மீதான பெரும் அடக்குமுறையில் போய் முடிகிறது. மற்றபடி, வேறு எந்தக் குற்றத்தின் மீதும் இங்கு எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கப்படப் போவதில்லை. மக்களும் எல்லாவற்றுக்கும் பழகி விட்டார்கள். ஆனாலும், புதிது புதிதாக மக்கள் விரோத நடவடிக்கைகள் பலவற்றை அறையெடுத்து உட்கார்ந்து சிந்தித்து அமல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். நம் மக்கள் அவற்றுக்கும் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் பழகுவார்கள். காரணம், நம் மக்கள் அரசுகளுக்கு எதிராக நடத்தும் போராட்டங்களும் இப்படிப்பட்ட ஆரம்ப சூரத்தனங்களே! தமிழினப் படுகொலை, அணு உலை எதிர்ப்பு, மதுவிலக்கு என மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அடுத்தடுத்துப் பிசுபிசுத்துப் போவதைக் கண்ணாலேயே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆம்! நாம் பழகிக் கொண்டே இருக்கிறோம் இவற்றையெல்லாம் சகிக்க. ஒருநாள் நாம் முற்றிலும் மரத்துப் போவதற்குள் மரணித்துப் போனால் அதுவே நல்ல வாழ்க்கையாக / நல்ல சாவாக இருக்கும்.

  2. பிங்குபாக்: பரமார்த்த குருவும் – சீடர் ஷண்முகநாதனும்……. | Classic Tamil

  3. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    தினமலர் செய்தி :—– ‘என்னை எதுவும் செய்ய முடியாது’ ‘
    மாற்றம் செய்த நாள்
    27ஆக
    2015
    15:49
    பதிவு செய்த நாள்
    ஆக 26,2015 23:41

    கூடலுார்: ”2ஜி வழக்கில் என்னை எதுவும் செய்து விட முடியாது,” என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசினார்.
    நீலகிரி மாவட்டம், கூடலுார் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் ராஜா பேசியதாவது:

    வரும் சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில் நான் போட்டியிடுவதாக தகவல்கள் வருகின்றன. எதையும், தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்.கடந்த, 2013ல், என் உறவினர் வீடுகளில் சோதனை செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், ‘ஒன்றுமில்லை’ என தெரிவித்தனர். ஆனால், தற்போது என் மீது சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என கூறியவர்கள், தற்போது, 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக கூறுகின்றனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். பிரதமர், முதல்வர் சந்திப்பு சரியாக இருந்தாலும், அதில், நிச்சயம் உள்நோக்கம் உள்ளது. மத்திய அமைச்சர்களின் மீதான புகார் குறித்து, பிரதமர் மோடி வாய் திறப்பதில்லை. 2ஜி வழக்கில், என்னை எதுவும் செய்து விட முடியாது …? இந்த மாதிரியான பேச்சுகளை பார்த்து ” கழுதை தேய்ந்து – கட்டெறும்பு ஆகியதை போல ” — என்றாவது மக்கள் புலம்புவார்களா …. ? இல்லை எதையும் ரசித்து கை தட்டுவார்களா ….?

  4. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    1.– போர்க்குற்றம்: நம்ப வைத்துக் கழுத்தறுத்த யு.எஸ். முயற்சியை இந்தியா முறியடிக்க வேண்டும்- வேல்முருகன் Posted by: Mathi Published: Thursday, August 27, 2015, 12:09 [IST]

    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tvk-condemns-us-stand-against-eelam-tamils-234367.html 2— புலிகளை அழிக்க இலங்கைக்கு குத்தகைக்கு கொடுத்த ரோந்து கப்பலை அன்பளிப்பாகவே வழங்கியது இந்தியா! Posted by: Mathi Published: Friday, August 28, 2015, 10:31 [IST]

    Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/india-officially-gifts-coast-guard-ship-varaha-sri-lanka-navy-234448.html —- இந்த இரண்டு செய்திகளையும் …. பற்றி ….. ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பாமரன்,

      இலங்கையில் அமெரிக்காவும், இந்தியாவும் விரும்புவதெல்லாம்,
      சீனாவுடன் நெருக்கம் கொள்ளாத, தங்களை மீறி இயங்காத
      ஒரு அரசு ஏற்பட வேண்டும் – அவ்வளவே.

      இப்போதைய இலங்கை பிரதமரும், ஜனாதிபதியும்
      இந்த வரையறை, எதிர்பார்ப்புக்குள் வந்து விடுகிறார்கள்.
      எனவே, அவர்களுக்கு இணக்கமானதை – இவர்கள் செய்து
      கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

      தமிழர்களைப் பற்றி அமெரிக்காவிற்கும் சரி,
      இந்தியாவிற்கும் சரி ( ஆட்சியில் இருப்பது காங்கிரசானாலும்,
      பாஜகவானாலும் – இதில் ஒரே மாதிரி தான் ) தீவிரமான
      அக்கரை எதுவும் இல்லை.

      வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டு
      இயங்கினாலொழிய இதற்கு தீர்வு எதுவும் இருப்பதாகத்
      தெரியவில்லை. செய்வார்களா …?

      – வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. ravi's avatar ravi சொல்கிறார்:

    இலங்கையில் அமெரிக்காவும், இந்தியாவும் விரும்புவதெல்லாம்,
    சீனாவுடன் நெருக்கம் கொள்ளாத, தங்களை மீறி இயங்காத
    ஒரு அரசு ஏற்பட வேண்டும் – அவ்வளவே.///

    தெளிவான பதில்.. உலகத்தில் இருக்கும் பல நாடுகளின் நிலை இதுவே .. இலங்கை உடன் நேபாளம், பூடான், வங்காளம் போன்றவையும் அடக்கம் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.