“சிங்கம்” ஆன “சிங்” !

கிட்டத்தட்ட நம் எல்லாருக்குமே தெரிந்த ஒரு புதிர்.

கோடு ஒன்றை போட்டு விட்டு, அதைத் தொடாமலே,
சிறியதாக்க முடியுமா என்பது வினா ?

சிம்பிள். பக்கத்திலேயே அதைவிடப் பெரிய கோடு
ஒன்றை வரைந்தால் முதல் கோடு தானாகவே சிறிய கோடு
ஆகி விடுகிறது.

ஒண்ணாங்கிளாஸ் பையன்களுக்கான
இதே  லாஜிக் தான் நேற்று மத்திய அரசு
இந்திய மக்களுக்காக செய்தது.

“நிலக்கரி ஊழல்” சந்தி சிரிக்கிறது. அனைத்துக் கட்சிகளும்,
அனைத்து பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை
விவரமாக அலசத் தொடங்கி விட்டன. மிகப்பெரிய பிரச்சினையாக
வளர்ந்து விட்ட இதிலிருந்து தப்ப வேண்டுமானால் என்ன
செய்வது ?

அதே இரு கோடுகள் லாஜிக் தான்.
ஒரு பெரிய கோட்டிற்கு பதிலாக கன்னா பின்னாவென்று
ஏகப்பட்ட பெரிய கோடுகளைப் போட்டு விட்டால் –
அனைவரும் எதைப்பற்றி பேசுவது என்று தெரியாமல்
பைத்தியம் பிடித்து அலைவார்கள். ஒரிஜினல் “நிலக்கரி ஊழல்”
பிரச்சினை களத்திலிருந்தே காணாமல் போய் விடும்.

நிலக்கரி ஊழல்” என்கிற ஒரு கோட்டிற்கு பக்கத்தில் –

டீசல்  விலை உயர்வு”
“ஆறு எல்பிஜி சிலிண்டருக்கு மேல் ரூ.750/- ஆக
விலை உயர்வு”
“சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு”

என்று பல பெரிய கோடுகளைப் போட்டாயிற்று. நீங்கள்
எதைப்பற்றித்தான் பேசுவீர்கள் ? நிலக்கரியைப் பற்றி
பேச உங்களுக்கு ஏது நேரம் ?

ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் வேறு !

மக்களையும்,மீடியாவையும் மடையர்களாக்கியாயிற்று.

போன வாரம் “ஊழல் நிர்வாகத்திற்கு தலைமை
தாங்கும் கையாலாகாத பிரதமர் சிங்” என்று அட்டைப்படம்
போட்டு “கௌரவித்த” அமெரிக்க பத்திரிகைகளை   

-இன்று “இந்தியாவின் அதிசிறந்த பொருளாதார
சீர்திருத்தவாதி. துணிச்சல் மிகுந்த பிரதமர்” என்கிற
தலைப்பில் முதல் பக்கத்தில் “சிங்கமாக” போட்டோ
போடவும்  வைத்தாகி விட்டது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to “சிங்கம்” ஆன “சிங்” !

  1. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    குதிரைகள் காணாமல் போன பிறகு லாயத்தை திறந்து வைத்தது போல அல்லது கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் போல அல்லது சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் போல இனி என்ன செய்து என்ன?எதற்கெடுத்தாலும் சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி காங்கிரஸ் கட்சி.ஆதலால் இந்த நாடடைக் காப்பாற்றும் (கொள்ளையடிக்கும்)உரிமை எங்களுக்குத்தான் உண்டு என்கிறார்களே எப்படி?

  2. Padmanabhan Potti L's avatar Padmanabhan Potti L சொல்கிறார்:

    சிங்க் ஒருவேளை சிங்க் கதைகளில் வரும் பாத்திரமாக மாறலாம். ஆனால் ஒருபோதும் சிங்கமாக மாற இயலாது. காரணம் பசு எக்காலத்திலும்
    சிங்கம் ஆகாது. சிங்கத்தோல் போர்த்திய பசு என்று கூறலாம். பசு சில நேரங்களில் உதைக்கும். ஆனாலும் அது மாடுதான். கோடுகள் போட்டு கிறுக்கிக்கொண்டே இருந்தால் கிறுக்கன் என்று கூற வாய்ப்புள்ளது. அதற்க்கான சிகிச்சை மக்கள் தான் மேற்கொள்ள வேண்டும். நிலக்கரி ஊழல்
    இந்திய அளவில் உலுக்கிய போது தற்போது மாவட்ட அளவில் மத்திய அரசின் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக
    திசைமாறி மத பிரச்சனையாக மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மத்திய அரசுடன்
    மோதல் போக்கு காரணமாக இந்த பிரச்னை பூதாகாரமாகிவிடும். அப்போதும் பாதிக்கப்பட போவது மக்கள்தான். மேலும் மக்களை என்றுமே மடையர்கள்
    ஆக்கிவிட முடியாது. தேர்தல் நேரத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். நிலக்கரி ஊழல். டீசல் விலை உயர்வு. எல்பிஜி சிலிண்டர் விவகாரம், நேரடி அந்நிய
    முதலீடு என விலைவாசி நூலறுந்த பட்டமாக உயர உயர செல்கிறது. அது ஒரேயடியாக மேலே சென்று காணாமல் போய்விடும்.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    தலைப்பு “(அ) சிங்கம்” ஆன “சிங் ” என்று இருக்கவேண்டுமோ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்களை யாரும் மிஞ்சவே முடியாது கண்பத் !

      உங்கள் “முன்மொழிவை” நான் அப்படியே
      “வழிமொழிகிறேன்” !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    சுருக்கமாக சொல்வதானால் சிங் தனது இந்திய அரசியல் நாட்களில் இந்தியராக செயல் பட்டதை விட அமெரிக்க கொள்கை பரப்பு செயலாளராக செயல் பட்டது தான் அதிகம். ‘அன்னை’ பிறப்பிலேயே அன்னியர். இவர் அணியர்களின் கொளகைகளை, கட்டளைகளை நிறைவேற்றுவதால் இவரும் அன்னியர்! என்று தான் நாடு மீதும், மக்கள் மீதும் பற்றுள்ள உண்மை இந்தியன் நம்மை ஆள்வது?!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக எழில்,

      நீங்கள் தான் பார்க்கிறீர்களே –
      நம் மக்களின் லட்சணத்தை !

      எனக்கு – “ரத்தக் கண்ணீர்” படத்தின் முதல் சீனில்
      எம்.ஆர்.ராதா பேசும் வசனங்கள் தான் நினைவிற்கு
      வருகின்றன.
      இந்த நிலையில் நல்லவர்கள் எப்படி வர முடியும் ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    congrats for the bold steps.A time to check looting by some business communitiesl Welcome FDI. Welcome WALLMART.Laurels only by PERFORMANCE.

  6. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    Let TAMILIANS concentrate on some useful things.Did they not know other than Tamils at sri lanka, 2 kodugal outdated 2 kodugal KB’S philosophy?

  7. tim's avatar tim சொல்கிறார்:

    Ghost Writer என்ற படம் பார்த்தீர்களா.. அதில் Tony Blair ஏன் தன் பதவி முழுவதும் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருந்தார் என்பதை அவர் உள்வட்டத்தில் எப்படி CIA நுழைந்து அதை சாதித்துக்கொண்டது என்று விளக்கியிருப்பார்கள். அவர் விஷயத்தில் கற்பனையாக இருக்கலாம். ஆனால் சிங் விஷயத்தில் உண்மையாக இருக்கும் போல் தோன்றுகிறது!

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பரே,

    படம் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது
    புரிகிறது. ஆனால் இங்கு ஒரு tony blair மட்டும்
    இல்லை. ஒரு கூட்டமே இருக்கிறது.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      Tim அவர்களின் கருத்து மிக முக்கியமானது. நான் இது சம்பந்தமாக சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். CIA ஆல் பொதுவாக வளைத்து போடப்படும் ஒருவர், ஒன்று அமெரிக்காவில் கல்வி கற்றிருப்பார் இல்லை எனில் அவர் குழந்தைகள் அமெரிக்காவில் கல்வி கற்று அங்கேயே நிரந்தரமாக வசிப்பவர்களாக இருப்பர். உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ‘ரா’ வில் மிக முக்கிய (சோதனை இன்றி ‘ரா’ அலுவலகத்தின் உள்ளே சென்று வர கூடிய பெரிய) பொறுப்பில் இருந்த ஒருவர் முக்கிய ஆவணக்களுடன் நேபாளம் வழியாக அமெரிக்க சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது அப்போது செய்தியாக வெளி வரா விட்டாலும் விரைவில் புத்தகமாக வர இருக்கிறது.

      http://www.indianexpress.com/news/former-raw-officer-tells-the-complete-story-of-the-double-agent-who-got-away/974584/1

      இந்த வகையில் காவிரி மைந்தன் அவர்கள் கூறியது போல தற்போதைய அரசில் மேல் கூறிய வரையறைக்குள் அடங்கக் கூடிய ஒரு கூட்டமே முக்கிய பொறுப்பில் இருக்கிறது.

      நான் (சொந்த முயற்சியில் சில எடுகோள்களின் அடிப்படையில்) படித்து சேகரித்த வகையில் நமது நாட்டை பொறுத்த வரையில் உலகமயமாக்கல் எனும் தாராள பொருளாதார கொள்கை நரசிம்ம ராவ் ஆட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது.

      நான் (சொந்த முயற்சியில் சில எடுகோள்களின் (hypothesis) அடிப்படையில்) படித்து சேகரித்த வகையில் நமது நாட்டை பொறுத்த வரையில் உலகமயமாக்கல் எனும் தாராள பொருளாதார கொள்கை நரசிம்ம ராவ் ஆட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது. இதையொட்டி உரத்து சிந்தித்து பார்க்கையில் ராஜீவ் மரணம் முதலாக ஐஸ்வர்யா உலக அழகி ஆனது, சுப்பிரமணிய சுவாமி பா ஜா க அரசை கவிழ்த்தது, மன்மோகன் பிரமரானது எதுவமே ஒன்றுகொன்று தொடர்பற்ற தனி தனி நிகழ்வுகள் அல்ல.

      நான் மேற்கூறியது பலருக்கு ஏற்புடையதாய் இருக்காது. ஆனால் சற்று சிந்தித்து பார்த்து, பின் வலை உலகையோ இல்லை புத்தகங்களையோ தட்டி பாருங்கள். அதன் பின் மெய்பொருள் காண்பது அறிவு!

      • tim's avatar tim சொல்கிறார்:

        நூற்றுக்கு நூறு உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட எவையுமே தொடர்பற்ற நிகழ்வுகள் அல்ல.

        • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

          நன்றி நண்பரே, பல தேடுதல், பல மணி நேர வாசிப்புகளுக்கு பின் எடுக்க பட்ட சில முடிவுகளுடன் ஒத்த கருத்துள்ள ஒருவரை அறிந்து கொள்ளும் போது முயற்சி வீண் போகவில்லை என்று தெரிகிறது. நன்றி!.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நண்பர் எழில்,

        ஒரு விதத்தில் உங்கள் கோணத்தில் தான்
        நானும் சிந்திக்கிறேன்.
        ஆனால் நீங்கள் படித்த,சேகரித்த விஷயங்கள் அளவிற்கு
        என்னிடம் அடிப்படைத் தகவல்கள் இல்லை.
        அனுமானம் மட்டும் தான்.

        ஒன்று செய்ய முடியுமா ? நீங்கள் படித்த, சிந்தித்த
        உண்மைகளின் அடிப்படையில் இது குறித்து நீங்களே
        ஒரு இடுகை அல்லது வரைவு தயாரிக்க முடியுமா ?
        நான் அதை இதே வலைத்தளத்தில் பதிவேற்றத்
        தயாராக இருக்கிறேன்.

        உங்களுக்கு தெரியும் –
        சமுதாய நன்மையின் பொருட்டு,
        நம் பார்வைக்கு கிடைப்பவற்றை –
        நம் சிந்தனையில் தோன்றுவதை –
        இயன்ற வரை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்
        என்பது தான் இந்த வலைத்தளத்தின் அடிப்படை நோக்கமாக
        இருந்திருக்கிறது. இந்த வலைத்தளம் பல நல்ல தகவல்களை,
        உபயோகமான சிந்தனைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது
        என்றால் அதற்கு நான் மட்டும் காரணம் அல்ல.
        உங்களைப்போன்ற இன்னும் சில நண்பர்களின்
        ஈடுபாடும், பங்கேற்பும் அதற்கு முக்கிய காரணம்.

        யோசியுங்கள் !
        (என்னுடன் தொடர்பு கொள்ள –
        என் முகவரி – kavirimainthan@gmail.com )

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

        • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

          நன்றி காவிரி மைந்தன் ஐயா. இதை நீங்கள் எனக்கு தரும் பெரும் கவுரவமாக கருதுகிறேன். முடிந்த வரையில் ஒரு கோர்வையாக்கி எழுதி மின் அஞ்சல் செய்கிறேன். நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.