கிள்ளு,குட்டு, தட்டு, -சீச்சீ வன்முறைக்கே அவமானம் !

கிள்ளு,குட்டு, தட்டு, -சீச்சீ வன்முறைக்கே
அவமானம் !

தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகள் எல்லாம்
ஆளுக்கு ஆள் அலறுகிறார்கள்.
வன்முறை- வன்முறை என்று.

கிள்ளுவதும், குட்டுவதும், தட்டுவதும் எல்லாம்
வன்முறை என்றால் உண்மையான வன்முறையை
என்னவென்று  கூறுவது ?

பிடிக்காத அரசியல்வாதிகளின் மீது  –
அழுகிய முட்டையை, தக்காளியை வீசுவது
மேற்கத்திய நாடுகளில் சர்வ சகஜம்.
செருப்பு வீச்சு கூட ஆரம்பித்தது !
இங்கு தான் இவை எல்லாம் அதிசயம் !!

இவையெல்லாம்  மக்கள் தங்கள்
அதிருப்தியை
வெளிப்படுத்தும் சாத்வீக வழிகள் !!!

மக்களின் மன நிலையை உணர்ந்து
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள்
திருந்தா விட்டால் –
இது அடுத்த கட்டத்துக்கு போகும் –
அது தான் வன்முறை !
மக்கள் அந்த நிலைக்கு போகாத அளவிற்கு
நடந்து கொள்வது
இந்த அரசியல்வாதிகளின் கையில் தான்
இருக்கிறது.

45 வருடங்களாக மகாராஷ்டிர அரசியலிலும்,
பின்னர் தேசிய அரசியலிலும் குட்டையை குழப்பி,
கொள்ளை அடித்த பின்,
வாயில் கேன்சர் வந்து சாகும் நிலை
வந்த பின்னரும்
இவர்களுக்கு இன்னும் பதவி ஆசை ஏன் ?
விட்டு விட்டு ஓட வேண்டியது தானே ?
இறுதி வரை மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்
என்று தீராத தாகமோ ?

ஒரு வேளை தான் உடல்நிலை காரணமாக
ரிடையராக வேண்டி இருக்குமோ என்று
முன் ஜாக்கிரதையாக மகளையும்
எம்.பி. ஆக்கி விட்டார். கட்சிக்கு
இவருக்கு அடுத்த தலைவரும் மகளே !

அன்னா ஹஜாரே கேட்டது –
அவர் மனதிலிருந்தது அப்படியே வந்தது.
எதேச்சையாக யாரோ தகவல் சொன்னதும் –
காமிரா முன் இருக்கிறோம் என்கிற
எச்சரிக்கை உணர்வு கூட இன்றி
“ஒரு அறை தானா”
என்று கேட்டு விட்டார்.

அவருக்கு மட்டும் அல்ல.அனைவரின் மனதிலும்
உடனடியாகத் தோன்றிய ரீ-ஆக் ஷன் அது தான் !

இத்தகைய அரசியல்வாதிகள்  உடனடியாக
பொது வாழ்க்கையிலிருந்து விலக வேண்டும்.
இல்லையேல் – மக்களால் அவமானப்படுத்தப்பட்டு
விலக நேரிடும்.

(இந்த வார்த்தை  –
பவாருக்கு மட்டும் தான்  என்று இல்லை !
தமிழ்நாட்டில் பவார்கள் இல்லையா என்ன ?)

——————————————
இந்த சமயத்தில் நான் முன்னதாக சென்ற வருடம்
இதே வலைத்தளத்தில் எழுதிய ஒரு இடுகையை
வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று
நினைக்கிறேன். இதோ அந்த இடுகை –

இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் !
-தூக்கிலே போடுங்கள் ..
Posted on பெப்ரவரி 28, 2010 by vimarisanam –

kavirimainthan |

இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் !
தூக்கிலே போடுங்கள்  ..

மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளைப் பார்த்து நான்
பல தடவை பொறாமைப் பட்டது உண்டு. அவர்களிடமிருந்து
நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை –
கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது.

முக்கியமாக –சமுதாய ஒழுக்கம்.ஒழுங்கீனங்களுக்கு –
குற்றங்களுக்கு, உடனடியான
கடுமையான தண்டனை.

திருட்டுக் குற்றங்களுக்கு கையை வெட்டுவது கொடுமை
இல்லையா  என்பார்கள்  சிலர்.  இல்லவே இல்லை.

அந்த தண்டனையின் பயம் தான் குற்றம் செய்வதிலிருந்து
மனிதனைத் தடுக்கிறது நிச்சயம் தண்டனை கிடைக்கும்
என்றால் – நம் ஊரின் மானங்கெட்ட  ஊழல் அமைச்சர்கள்
இப்படி  இருப்பார்களா ?

இங்கே கொள்ளை அடிக்காத அதிசய அமைச்சர் யார் ?
இது வரை தண்டிக்கக்ப்பட்ட ஊழல் அரசியல்வாதிகள்
எத்தனை பேர் ?

கிலோ 13 ரூபாய்க்கு விற்ற சர்க்கரைக்கு இன்று
40 ரூபாய்  கொடுக்கிறோமே – யாரால், எதனால் ?

எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில்
பேசியதன் கருத்தென்ன ?

நம்மிடம் தேவைக்கு அதிகமாக இருந்தால் –
வெளிநாடுகளுக்கு
விற்கலாம். ஆனால் நமக்கே தேவை என்கிறபோது ?

நமக்கே பற்றாக்குறை – உற்பத்தி குறைவு – விலை
ஏறிக்கொண்டே போகிறது என்கிற நிலையில் –

ஒரு பக்கம் கிலோ 12.50 ரூபாய் என்கிற விலைக்கு
வெளிநாடுகளுக்கு  சர்க்கரையை விற்று விட்டு, அதே
சர்க்கரையை கிலோ 36 ரூபாய்க்கு வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு 40 ரூபாய்க்கு
விற்றால்  என்ன அர்த்தம் ?

டிசம்பர் 2008-ல்  30 கோடியாக இருந்த 33 சர்க்கரை
ஆலைகளின் லாபக் கணக்கு டிசம்பர் 2009-ல்
901 கோடியாக எகிறியது எப்படி ?
(இது அதிகாரபூர்வமான  தகவல் )

கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயி, உற்பத்திச்
செலவு கூட கிடைக்காமல்  திண்டாடுகிறான்.
உபயோகிக்கும் பொது மக்களோ விலையேற்றம் தாங்க
முடியாமல் தவிக்கின்றனர்.

இடையிலுள்ள ஆலை முதலாளிகளும்,தரகர்களும் இப்படி
கொள்ளை அடிக்க முடிவது யாரால் ? எப்படி ?

இதைச் செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர் யார் ?
சர்க்கரை ராஜா என்று சரத் பவாரை – சுஷ்மா
வேண்டுமானால்
செல்லமாகச் சொல்லலாம்.

மானங்கெட்ட அந்த மனிதரும் தொலைக்காட்சியில்
நேரடியாக ஒளிபரப்பாவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல்
சிரித்துக்கொண்டே ரசிக்கலாம்.

நாம் அப்படி எல்லாம் சொல்லத் தயாரில்லை.
நாம் அரசியலவாதியும் அல்ல.

நமக்குத் தெரிந்தது வெளிப்படையான பேச்சு தான்.
நாம் சொல்வது இவ்வளவு தான் –
” தூக்கிலே போடுங்கள் இந்தக் கொள்ளைக் காரர்களை .
அப்போது தான் பயம் வரும். இந்தக் கொள்ளைகளுக்கு
எல்லாம் ஒரு முடிவும் வரும் “

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கிள்ளு,குட்டு, தட்டு, -சீச்சீ வன்முறைக்கே அவமானம் !

  1. pidithavan's avatar pidithavan சொல்கிறார்:

    மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
    இவர் ஒரு சரியான சுரண்டல் பேர்வழி.
    கிரிக்கெட், சர்க்கரை ஆலைகள்,
    ஏற்றுமதி -இறக்குமதி, எல்லாவற்றிலும்
    40 வருடங்களாக ஏகக் கொள்ளை.
    7 தலைமுறைக்கு சம்பாதித்து
    வைத்துக்கொண்டிருக்கிறார்.
    இவரைப் போன்றவர்களை எல்லாம்
    அரசியலிலிருந்து துரத்தினால் தான்
    நம் நாடு உருப்படும்.

  2. உன் மனசாட்சி ......'s avatar உன் மனசாட்சி ...... சொல்கிறார்:

    ஊழல்வாதிகளை
    துரத்த ஆரம்பித்தால்
    நாட்டில் –
    ஒரு
    அரசியல்வாதி கூட
    இருக்கமாட்டார்கள்……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.