டாக்டர் கமல் – நீங்கள் இதற்கு அனுமதி
தந்தீர்களா ?
“டாக்டர் கமல ஹாசன் ஹைவே சிடி” என்கிற பெயரில்
திண்டிவனம்-புதுச்சேரி தேசீய நெடுஞ்சாலையில் ஒரு
நகர் நிர்மாணிக்கப்படுவதாகவும், அங்கு நிலங்கள்
வாங்க தங்களை அணுகும்படியும் ஒரு நிறுவனம்
விளம்பரம் செய்துள்ளது.
கமல் அவர்களே, இவர்கள் உங்களின் அனுமதியைப்
பெற்றுத் தான் இதைச் செய்கிறார்களா ?
அந்த விளம்பரத்தின் பொருளடக்கமும்,
அதில் நிகழ்த்தப்பட்டுள்ள தமிழ்க் கொலையும்
உங்கள் பார்வைக்கு வந்ததா இல்லையா ?
அந்த விளம்பரத்திலிருந்து சில பகுதிகள் –
———————
Madras City Properties.com
presents Dr. Kamal Haasan Highway City
Madras City Properties.com உங்கள்
முதலீட்டின்சிறந்த நண்பன்
நம்ம Madras City Properties.com
பெருமையுடன்வழங்கும் Dr. Kamal Haasan Highway City,
திண்டிவனம்.
நம்ம கமல் ஹாசன் Sir க்கு உலகம் முழுவதும் fans
இருப்பதால்தான்
அவருக்கு உலக நாயகன் என்கிற பட்டத்தை
குடுத்திருகாங்க , உலகம் முழுக்க போற்றபடும்
கமல் sir க்கு Madras City Properties.com
கோடிகணக்கான Fans சார்பாக இவங்களோட அடுத்த landmark
project எ dedicate
பண்ணிருக்காங்க. …..
…..Dr . Kamal Haasan Highway City,
அவருக்காக அவருடைய 50 வருட திரைவாழ்க்கைக்கும், சமுக
சேவைக்கும்
நம்ம MCP.com ஓட tribute. இது மட்டும்
இல்லைங்க இந்த Kamal Haasan Highway City ல
இருக்கிற streets எல்லாம் நம்ம kamal sirஅவரோட success
க்கு காரணமாக இருந்தவங்களுகும்.இப்போ இருக்கிறவர்களுக்கும்
dedicate பண்ணி இருக்காரு.
திர. கமல் Sir dedicate பன்னிர்க்ரவங்க்ள சில பெர்யர்கள்
1. சிவாஜி கணேசன்
2. கே.பாலசந்தர்
3. பாலமுரளிக்ருஷ்ணா
4. ஸ்ருதி ஹாசன்
5. crazy மோகன்
6. எ.வி மெய்யப்பன்
7. கௌதமி
8. அக்ஷரா ஹாசன்
9. ஆர். சி. ஷக்தி
10. எல். வி பிரசாத்
11. சுப்பலக்ஷ்மி ஹாசன்
12. கே தங்கப்பன்
13. D. ஸ்ரீனிவாசன்
14. ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன்
15. சாரு ஹாசன்
16. சந்திர ஹாசன்
17. நளினி ரகு
18. தஞ்சை நடராஜன்
19. அனந்து
20. K தங்கப்பன்
Dr. kamal Haasan Highway City
இது சென்னையிலிருந்து Pondicherryசெல்லும் National
Highway இல்
அமைந்து உள்ளது .இங்க ஒரு Sq. Ft. ஓட
விலை வெறும் Rs. 175/ -மட்டுமே.
நம்ம site க்கு பக்கதில உள்ள ஊர்கள் நு பார்த்தால்
Pondycherry, Thiruvannamalai, Kanchipuram,
VIllupuram, Marakanam மற்றும் Cuddalore. இங்கிருந்து
pondycherryபக்கத்திலேயே இருப்பதால்
basic facilities, அதாவதுschools, colleges,
hospitals,banks, supermarkets, transport
facilities,
வேலை வாய்ப்புகள் எதையுமே நினைச்சுகவலை பட வேண்டியது
இல்லை.
இது chennai to pondy செல்லும்
national highway ல இருப்பது மட்டும்இல்லாம tourist
spot ஆன,
pondicherryum மற்றும் கோவில் நகரமான திருவண்ணாமலையும்
அருகில்இருப்பதால் இங்க land ஓட
appreciation valueஉயர்ந்துகிட்டு இருப்பதை
கண்கூடாக பார்க்கலாம்.
……. இந்த Madras Recreation Club,
RCI என்கிற ஒரு organisation ஓட
tie-up பண்ணியிருக்காங்க . இதனால இவங்க 4500 resorts
ல 100 countries ல
30 years க்கு holiday facilities பண்ணி தராங்க.
இந்த offer அ நீங்க foreign trips இல்ல domestic
holidays
plan பண்றப்ப ரொம்ப useful ஆ இருக்கும்.
உங்கள் முதலீட்டின் சிறந்த நண்பன் Madras
City Properties.Com உங்களோட
investment safe & Secure எஇருக்கணும் நா Madras City
Properties.com ஓட இந்தlandmark project ல
invest பண்ணுங்க.





//திர. கமல் Sir dedicate பன்னிர்க்ரவங்க்ள சில பெர்யர்கள் ……//
விட்டுப் போன சில பெயர்கள் –
வாணி கணபதி
சரிகா கமலஹாசன்
சிம்ரன் ………..
இந்தாபா,
இந்த அடோடஸ்க்கும் (விளம்பரத்துக்கும்) என்க்கும் தம்மாதூண்டு சம்பந்தமும் கிடையாது நைனா.
பிரிஞ்சுதா?
நான் கிளியர் பண்ணிடேம்பா.
(ஓ… இது டாக்டர் கமலுக்கு அனுப்புன லெட்டரா?
நா என்னமோ நம்மலதான் எந்த கஸமாலமோ கலாய்க்குதோனு நெனைச்சுக்கிட்டேன்பா)
சரிதான். அவருக்குத் தெரியாமயா இவ்வளவும் நடக்குதுன்னு நினைக்குறீங்க. சமீபத்துல டாக்டர் கு. ஞானசம்பந்தனின் புத்தக வெளியீட்டில் கமல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களில் இந்த madrascityproperties.com முக்கியமானவங்க. இதைப் பத்தி அந்த மேடையிலேயே கூடப் பேசினாங்களே சார்!
மேலும் விவரங்களுக்கு இதைப் பாருங்க…
http://madrascityproperties.com/KamalHaasan-Highway-City/New_project.htm
அப்புறம் இதையும்
வருக நண்பர் ரமணன்,
தகவல்களுக்கு நன்றி.
நீங்கள் கொடுத்திருக்கும் தளத்தை
இப்போது தான் பார்த்தேன்.
இப்போது பார்த்தால் இடுகையில் உள்ள
என் கேள்விக்கே அவசியமில்லை
என்று தெரிகிறது !
கமல் ரியல் எஸ்டேட் தொழிலிலும்
இறங்கி விட்டார் போல் இருக்கிறது !!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை சார். மிதமிஞ்சிய பணம் தன்னைத் தானே விதவிதமான வழிகளில் பெருக்கிக் கொள்ளும். இது அதன் யதார்த்தம்!
//கமல் ரியல் எஸ்டேட் தொழிலிலும்
இறங்கி விட்டார் போல் இருக்கிறது !!//
சார் அப்படி அல்ல. அவரது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அவ்வளவே!
அன்பின் ரமணன்,
தனது பெயரை மட்டும் அனுமதிக்கவில்லை. பட்டியலில் காணப்படும் அத்தனை பெயரையும் அனுமதித்திருக்கிறார். வணிக நோக்கமின்றி இது நிகழ முடியாது. நேரடியாக இல்லாவிட்டாலும் – மறைமுகமாகவேனும்!
விசாரித்து விட்டுச் சொல்கிறேன்.
இந்த திட்டத்தின் உரிமையாளர்கள்
யார் என்பதை ஏன் வெளிப்படையாக
அறிவிக்க மாட்டேன் என்கிறார்கள் ?
கமலுக்கு இவ்வளவு பெரிய ஜால்ரா
யார் என்று தெரிந்து கொள்ளலாமே !
aadayam illamal yarum aathoda pogamattarkal