ராகுல் காந்தி –
இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் !
என்ன தான் சொல்லுங்கள் –
நம் தமிழ் செய்தித்தாள்களானாலும் சரி,
தொலைக்காட்சிகளானாலும் சரி,
ஒரு அகில இந்திய கண்ணோட்டமே சுத்தமாக இல்லை.
வடக்கே நடப்பதை கவனித்து,
முக்கியமான நிகழ்வுகளை விவரித்துக் கொடுப்போமே
என்கிற எண்ணமே சற்றும் இல்லை.
எவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் உத்திரப் பிரதேசத்தில்
நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவரும் இது பற்றி
செய்தியே கொடுக்க மாட்டேனென்கிறார்களே !
சரி – நானாவது கொடுக்க முயற்சிக்கிறேன் !!!
நவம்பர் 14 – ஜவஹர்லால் நேருவின்
பிறந்த நாள்.
அதை முன்னிட்டும்,
அடுத்த வருடத் துவக்கத்தில்
நடக்கவிருக்கும் உ.பி.சட்ட மன்ற தேர்தல்
பிரச்சாரத்தை துவக்கி வைப்பது போலவும் –
நேருவின் கொள்ளுப்பேரன்
ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பல நிகழ்வுகள்
அலகாபாத்தில் நடந்தன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பலரும்
கூடி இருந்த அந்த நிகழ்ச்சியில் –
ஒரே ஒரு நிரல் (?)தான் !(agenda ?)
அதாவது யாரால் ராகுல் காந்தியை
உச்சபட்சத்திற்கு புகழ முடிகிறது
என்று ஒரு போட்டி…
ஆரம்பித்தார்கள் வரிசையாக ..
முதலில் அலகாபாத் முழுவதும் பெரிய அளவுகளில்
வண்ண வண்ண போஸ்டர்கள் –
ஒரு பக்கம் ஜவஹர்லால் நேரு – இன்னொரு பக்கம்
ராகுல் காந்தி (சோனியா கூட – மிஸ்ஸிங் ! )
“நேருவின் நினைவுகள் – ராகுலின் நனவுகள்”
என்கிற கவர்ச்சியான வாசகங்களுடன் !
ராகுல் காந்தி வந்திறங்கிய ஹெலிகாப்டர் தளத்தில்
கருப்புக் கொடி காட்ட முயன்ற மாயாவதி கட்சியைச்
சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர
ப்ரசாதா தானே களத்தில் இறங்கி உதைக்கிற
வரைக்கும் விசுவாசத்தைக் காட்ட முந்தினர் !
பொதுக்கூட்டத்தில் உ.பி.காங்கிரஸ் தலைவி
ரீட்டா பஹுகுணா குரல் எழுப்புகிறார் –
“வந்து விட்டார் ராகுல் – தேசத்தின்
தலைவிதியை மாற்றி எழுதிட “
“மகாத்மா காந்தியைப் போலவே – ஏழைகளின்
கண்களில் கண்ணீர இருக்கும் வரை
ராகுல் ஓய மாட்டார் !”
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் –
“ராகுல் உதயமாகி விட்டார் – ஒவ்வொரு
வீட்டிலும் வெளிச்சம் பரவுகிறது”
“ராகுல், தாழ்த்தப்பட்ட மக்கள் யாருடைய
குடிசையிலாவது இரவில் தங்கும்போது, அவரது
பிரகாசத்தால், அங்கு இரவு போய் -உதயகாலம்
வந்து விடுகிறது”
உ.பி. முக்கிய காங்கிரஸ் தலைவர்
பிரமோத் திவாரி –
“கங்கையும் யமுனையும் அலகாபாத்தில்
ஒன்று சேருவதைப்போல், பல ஜாதி
மக்களும் ராகுல் முன்னிலையில் ஒன்றாகச்
சங்கமிக்கின்றனர்”
“ராகுலிடம் –நேருஜியின் மகத்தான
ஆளுமையையும்,
இந்திரா காந்தியின் தைரியத்தையும்,
ராஜீவ் காந்தியின்
காருண்யத்தையும் – ஒன்று சேரக்
காண்கிறோம்”
கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு ஒன்று
நன்றாகப் புரிகிறது – “ராகுல் காந்தி ஒரு
மகத்தான தலைவர் – அவர்களை வாழ்விக்க
வந்திருக்கும் தெய்வம்”.
ஆனால் ஒன்று தான் புரியவில்லை –
“ராகுல் பிரதம மந்திரி ஆகப்போகின்றார்
என்று தானே சொன்னார்கள்.
இப்போது மாறி விட்டதா – உத்திரப் பிரதேச
முதல் மந்திரி ஆகப்போகிறாரா ?”





முதல்ல இவர் தனக்கு காந்தினு எப்படி பேர் வந்துச்சுன்றத விளக்கமா சொல்லணும்.
//இரவில் ஜொலிக்கும் உதயசூரியன் !//
என்ன ஒரு அருமையான தலைப்பு. இதுவே விஷயத்தைச் சொல்லி விடுகிறதே! இது கோமாளிகள் கோலோச்சும் காலம் சார். புத்திமான்கள் பொங்கி எழும் வரை அவர்களது ஆட்டம்தான் நடந்து கொண்டிருக்கும். நாம் எல்லாவற்றையும் ‘மூடி’க் கொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதான்.
எந்திரம் மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டு
கையை ஆட்டும் ராகுலின் ஸ்டைலே
ஒரு தனி அழகு -பார்த்துக்கொண்டே இருக்கலாம் !
மன்மோகன் சிங்கின் நம்பிக்கை நட்சத்திரமே
ராகுல் தான் !
எவ்வளவு தான் தயார் படுத்தினாலும் –
ராகுல் தேறவே மாட்டார் – எனவே தன் பதவிக்கு
அவரால் என்றுமே ஆபத்தில்லை என்பதை
சிங் நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால் தான்
டென்ஷனே இல்லாமல் இருக்கிறார் !
இந்திரா காந்தி + பெரோஸ்கான் = ராஜீவ் கான்
50 % சுத்த இந்தியன் !
ராஜீவ் கான் +சோனியா = ராகுல் கான்
25 % சுத்த இந்தியன் !
ராகுல் கான் +??????????= 0%சுத்த இந்தியன் !
இதெல்லாம் அற்பனுக்கு வாழ்வு வந்த கதைதான். இவனுங்க குடும்பமே வன்முறையை வளர்த்து விட்டுட்டு அதிலேயே அழியும் குடும்பம். இவனும் சீக்கிரம் ஏதாவது பதவிக்கு வரட்டும். ஆசை யாரை விட்டது. நடப்பதுதான் நடக்கும்…நாம சொல்றதை சொல்லிட்டோம்….
உண்மையை சொல்வதானால் காங்கிரஸின் கடைசி துரும்பு சீட்டு (trump card) இவர் தான். ஆதலால் காங்கிரசை வைத்து வயிறு வளர்பவர்கள் எல்லாம் சற்று அதிகமாகவே கூவுகிறார்கள்.