வைரமுத்து அவர்களுக்கு ஒரு கேள்வி ...
வைரமுத்து அவர்களைக் கவிஞர் என்று கூறி
அவர் பெருமையைக் குறுக்க நான்
விரும்பவில்லை.
அவர் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர்.
நல்ல எழுத்தாளர். நல்ல பேச்சாளர்.
அற்புதமான
சொல்லாற்றல் உடையவர்.
திரைப்பட பாடல்கள் மட்டுமன்றி – மிகச்சிறந்த
இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புக்களை
உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்.
அரசாங்கம் அளிக்கும்
இலவசங்களைப் பற்றியும்,
டாஸ்மாக் சாராயக்கடைகளைப் பற்றியும்
வைரமுத்து அவர்கள் அண்மையில்
எழுதி இருக்கிறார் –
“இலவசத்தில் வாழப் பழகியவர்கள்
மதுரசத்தில் மூழ்கிப் போனார்கள்.
உழைத்த தலைமுறை உளுத்த தலைமுறை
ஆக்கப் பட்டு விட்டது.
துய்ப்புக் கலாசாரம் உழைக்கும் நேரத்தை
உறிஞ்சி விட்டது.
உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக்கும்,
கைவிடப்பட்ட முதியவர்களுக்கும்,
அநாதைக் குழந்தைகளுக்கும்,
ஆதரவற்ற நோயாளிகளுக்கும் தானே
இலவசம் பொருந்தும் ?
உற்பத்தி பெருக்காத இலவசம்
உற்பாதம் தானே விளைக்கும் ?
மதுக்கடை வாசல்களில் –
தவணை முறையில் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்
நம் விவசாயத் தொழிலாளிகள்.
மது என்பது உலகக் கலாசாரம் தான்.
ஒழிக்க முடியாது தான்;
மனித சமுதாயத்தின் பழம் பானம் தான்.
ஆனால் –
அருந்துபவனுக்கும் –
அருந்தப்படுவதற்குமான இடைவெளியில்
இருக்கிறது மதுவின் நன்மை – தீமை.
பெரும்பாலும் –
மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள்.
ஆனால் உழைக்கும் மக்களை – மது அருந்துகிறது.
மேல் தட்டு மக்களின் உபரிப் பணத்தில்
கை வைக்கும் மது –
அடித்தட்டு மக்களின் –
உணவுப் பழக்கத்திலேயே கை வைக்கிறது.
தங்களுக்கு எதிராய் இந்தியர்கள்
கத்தி ஏந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான்
கள்ளுக்கடை திறந்தார்கள் வெள்ளையர்கள்.
புட்டிக்குள் அடக்கி வைத்திருந்தார்கள் –
தங்களுக்கு எதிரான பூதத்தை.
ஜனநாயக நாட்டில் –
பூதம் மட்டும் இன்னும் புட்டிக்குள்ளேயே
இருக்கிறது.”
அரசாங்கம் இலவசங்களை அளித்து –
மக்களை சோம்பேறிகளாக்குவதையும்,
சாராயக்கடைகளைத் திறந்து
சமுதாயத்தையே சீரழிப்பதையும் –
இதை விட அழகாகச் சொல்வது கடினம்.
இந்த வார்த்தைகளுக்காக வைரமுத்து அவர்களைப்
பாராட்ட விரும்பும் என் மனம் –
ஒரே ஒரு கேள்வியையும் கூடச் சேர்த்தே
கேட்க விரும்புகிறது.
“அய்யா வைரமுத்து அவர்களே –
இப்போது இப்படி மாய்ந்து மாய்ந்து
எழுதுகிறீர்களே –
ஆறு மாதம் முன்பு வரை, உங்கள் “பாசக்காரத்
தலைவர்” ஆட்சியில் இருந்தாரே,
நீங்களும் அவர் அருகிலேயே இருந்தீர்களே –
அப்போது எழுதி இருக்கக் கூடாதா இதை-
கேட்டிருக்கக் கூடாதா அவரிடமே இது பற்றி ? –
இலவசங்களையும்,
மதுரசங்களையும் –
தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி
அவர்களை நாசப்படுத்தியவரே உங்கள்
அருகில் தானே இருந்தார் !
அப்போது ஏன் சும்மா இருந்தீர் ?”



இலவசங்களையும்,
மதுரசங்களையும் –
தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி
அவர்களை நாசப்படுத்தியவரே உங்கள்
அருகில் தானே இருந்தார் !
அப்போது ஏன் சும்மா இருந்தீர் ?”
அப்போ இவர் சும்மா இருந்தார் என வீண் பழி சுமத்த வேண்டாம். கவிஞர் உங்கள் மேல் மறம் பாடி விடுவார்.
அவர் அப்போ வாலை ஆட்டிக் கொண்டிருந்தார்.இவரெல்லாம்
‘ வெறும் வாய்ச் சொல் வீரர்’- சிறந்த வியாபாரி.
அருமையான கேள்வி!
கோடம்பாக்கத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் கல்யாண மண்டபம் கட்ட அனுமதி கொடுத்த தலைவரா எதிர்த்து பாட சொல்கிறீர்கள்? – வைரமுத்து.
அரசவைக் கவிஞருக்கு மன்னனின் தாழ் போற்றி புகழ் பாடுவது மட்டும்தானே ஒரு பணி? அதை சென்ற ஆட்சியில் செவ்வனே செய்து கொண்டிருந்தார்!! இவர் நல்ல சிந்தனையாளர்தான். ஆனால் இதுபோன்ற பிறழ்வுகள், பாலில் கலந்த துளி நஞ்சு போல் ஆகிவிடுகிறது.
ரஜினியையும் குஷ்புவையும் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கவிஞரல்லவா… அரசவைக் கவிஞர் தன் மன்னனை எப்படிக் கேள்வி கேட்பார்..? அதனால்தான் சரஸ்வதிதேவி குடியிருக்கும் அவரது நாவிலிருந்து இப்போது கேள்விக்கணை புறப்பட்டிருக்கிறது…
அரசன் அயோக்கியன்!
அரசியோ அகம்பாவி!!
மந்திரிகள் தந்திரிகள்!!
காவலன்கள் காலன்கள் !
நீதிபதிகள் ஆமைகள்
குடிமக்கள் ஆடுகள்!!!
இந்நிலையில்
புலவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!
அரசன் ஆளும்போது
பிழைப்புக்காக பாடி, ;
அரசி ஆளும்போது
பிழையாக பேசுகிறார்கள்
கண்பத் ……….
நீங்கள் எந்தவகை …….????!!!
தன் 90 சதவீத நேரத்தை மேய்வதில் செலவ்ழித்தாலும்,
எஞ்சிய கிஞ்சித்து நேரத்தையாவது,
மேய்ப்பதற்கும் செலவழிக்க முயலும்,
ஒரு வலை விரும்பும் ஆடு!
ayyo ayyo……………………….
நீங்களும் அம்மா புகழ் பாடி தானே ………அரியணை ஏற்றினீர்கள்……………..நீங்கள் என்ன சொல்லபோகிறீர்கள் ……..!!!!!!!!
பெட்டர் லேட் தென் நெவர் நைனா
அப்போ ராஜா கேக்குற மூட்லே இல்லேபா!
இப்போ ராணி காதுலே ஊதி வெப்போம்…
சட்டசபே பில்டிங்க் மாரி
லைப்ரேரி பில்டிங்க் மாரி
டாஸ்மாக்கும் திடீர்னு மாராதாபா?
ஒரு நப்பாசதான் வாத்யாரே, பாட்டுக்காரனுக்கு.
உடலை விற்கும் விபச்சாரி ……………..
இதயத்தை விற்கும் துரோகி ……………
நம்பிக்கையை விற்கும் அரசியல்வாதி ……
மனசை விற்கும் கொலைகாரன் …..
நம்பிகெட்ட ஆனதை பெற்றோர் ………..
அறிவை விற்கும் அறிவாழி …………….
இவர்களை விடவும் –
கற்பனையை விற்கும் கவிஞன் ………
-மேல் !!!!!!!
கவிஞன் கற்பனை விற்க்கிறான்
-மற்றவர்கள்
உண்மையை விற்க்கிறார்கள்……!!!!????!!!!!!!!!!!!!!!!
சைதை………உன்னை நெனச்சா….
எனக்கு புல்லடிச்சா மாரி இர்ர்க்கு நைனா ………..
//இலவசங்களையும்,
மதுரசங்களையும் –
தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி
அவர்களை நாசப்படுத்தியவரே உங்கள்
அருகில் தானே இருந்தார் !
அப்போது ஏன் சும்மா இருந்தீர் ?”//
அப்போதெல்லாம் “கட்டிங்” வந்து கொண்டிருந்தது. இப்போது ‘கல்லா’ கட்டவே வழியில்லை. அதனால்தான் சும்மா சங்கை ஊதி வப்போமேன்னு இதைச் சொல்லியிருக்கிறார்.
நா.பா. ஒருமுறை சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ”படைப்பாளியின் பேனா வளையலாம். ஆனால் அவன் முதுகெலும்பு வளையக்கூடாது”
இவர்களெல்லாம் பிழைப்புக்காக….. வேண்டாம் என் வாயிலும் ஏதாவது ‘அறமாக’ வந்து விடப் போகிறது.
கவிஞரின் தமிழுக்காக அவர் கூறியதை வரவேற்போம்.
இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார் ..
நல்ல கேள்வி ஆனால் பதில் ?????
நிறைய மறுமொழிகள் !
புதிய நண்பர்களை வரவேற்கிறேன்.
வைரமுத்து அவர்களின் சுற்றுவட்டத்தில்
தமிழ் வலைத்தளங்கள்
பார்ப்பவர்கள் நிறைய பேர் உண்டு. எப்படியாவது
நம் கருத்துக்கள் அவருக்குப் போய்ச்சேரும்.
நமக்கு பதில் கிடைக்காவிட்டாலும்
பரவாயில்லை.
கவிஞருக்கும் மனசாட்சி என்று ஒன்று
இருக்கும் அல்லவா ? அதற்காவது அவர்
பதில் சொல்லித்தானே ஆக வேண்டும் ?
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
நன்றாக சிந்தித்து எழுதும் இவர் நீங்கள் கடைசியில் கேட்ட கேள்வியை பற்றி சிந்திக்காமலா இருந்திருப்பார். எல்லாம் பணம் பணம் தான்
Nalla kelvi.
சரியான.. நெத்தியடி கேள்வி..!
திமுக (திருடர்கள் முன்னேற்றக் கழகம்) வின்,
அரசவைக் கவிஞர் அவர்.
அவர்களைப் பற்றியே அவதூறாய் எப்படி எழுதுவார் அவர்.
கவிஞரிடம் தமிழ் இருக்கிறது. ஆனால் தமிழ் கவிஞர்களுக்கு இருக்க வேண்டிய நெஞ்சுரம் தான் இல்லை. மேலே கா மை அவர்கள் கூறியிருப்பதோடு மேலும் ஒரு விஷயத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஈழ தமிழரை மனதில் வைத்து பாட்டு எழுதி தேசிய விருது பெற்றவருக்கு, ஈழ தமிழர் கொத்து கொத்தாய் மடியும் பொது எதுக்கு ‘மன்னரிடம்’ வம்பு என்று பேனாவையும் பேப்பரையும் தூக்கி பரணில் போட்டு விட்டார். ஆனால் ஒன்று, விமானம் ஏறி கடல் கடந்தவுடன் கவிஞருக்கு ஈழ தமிழர் உணர்வு பீரிட்டு கிழம்பி விடும். இல்லையெனில் எப்படி புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழரிடம் கல்லா கட்டுவது! என்ன தான் கவிஞரிடம் போற்றுதற்குரிய தமிழும், சிந்தனையும் இருந்தாலும் இறுதியில் அவர் பரிசில்களுக்கு கவி பாடும் வானபத்திர ஓணாண்டி!
கருணாநிதிக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடந்தது, அவற்றில் எல்லாம் தவறாமல் கலந்து கொண்டு எத்தனையோ கவிதைகளை வாசித்த வைரமுத்து, இந்தக் கவிதையையும் வாசித்திருக்கலாம்.
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான போதை தேவை படுகிறது.
கலைங்கருக்கு பாராட்டு விழா போதை.
வைரமுத்துவுக்கும், வாலிக்கும் கலைஞரை பாராட்டுவது போதை.
இப்போது தான் வைரமுத்து போதை தெளிந்திருக்கிறார்.
அதனால் தான் வேறு வகையான ‘போதை’ பற்றி எழுதி இருக்கிறார். விட்டு விடுங்கள் பாவம்.