இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா …
சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு
அள்ளிக் கொடுக்க ?
மாலத்தீவு மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர்
மன்மோகன் சிங் வீடு திரும்பும் முன்னரே
பதறுகிறார். பறக்கும் விமானத்திலேயே பேட்டி
கொடுக்கிறார்.”ஏதாவது செய்தாக வேண்டும்” !
விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பதறி
ஓடுகிறார். நிதி அமைச்சரை சந்தித்துச்
சொல்கிறார்”ஏதாவது செய்தே ஆக வேண்டும்”.
நிதியமைச்சர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின்
தலைவர்களிடையே பேசுகிறார்”ஏதாவது செய்ய
வேண்டும்”
இந்த “ஏதாவது செய்ய வேண்டும்” க்கு பின்னர்
இருக்கும் அர்த்தம் என்ன ?
சாராய பீப்பாய் –
(லிக்கர் பேரல் -தமிழில் சரிதானே ?)
விஜய் மால்யாவிற்கு கிங் பிஷர் விமான சர்வீசை
தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை
போக்க பண உதவி செய்ய வேண்டும்.

எவ்வளவு பணம் ?
(மால்) ய்யா 7 ஆண்டுகளாக தொழில் நடத்தி
சேர்த்து வைத்திருக்கும் மொத்தக்
கடன் 7000 கோடி ரூபாய்.
மொத்த நஷ்டம் இது வரை சுமார் 4000
கோடி ரூபாய்.
எண்ணை நிறுவனங்கள் அனைத்துக்கும்
விமான எரிபொருள் வாங்கிய வகையில்
கொடுக்க வேண்டிய பணத்தைத் –
(பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி
இந்துஸ்தான் பெட்ரோலியம்
நிறுவனத்துக்கு 600 கோடி.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 200 கோடி )
கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே போனதாலும்,
கொடுத்த காசோலைகள் திரும்பி விட்டதாலும்,
மேற்கொண்டு எரிபொருள் கொடுக்க முடியாது
என்று மறுத்து விட்டன.
எரிபொருள் வாங்க காசு இல்லாமல் தினமும் பல
விமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் கிங்பிஷர்
விமான நிறுவனத்திற்கு குறைந்த வட்டியில்
கடன் கொடுத்து இந்த சிக்கலில் இருந்து அதை
மீட்க வேண்டும். அதற்குத் தான் இத்தனை
மீட்பர்களும் பதறுகிறார்கள்.
(இப்போதைக்கு அதற்கு “கடன்” என்று
தான் பெயர். பிற்பாடு அது
நஷ்டத்தில் “பங்கு” ஆகி விடும்.)
ஏற்கெனவே இந்த வங்கிகள் நிறைய கடன்
கொடுத்திருந்தன.கொடுத்த கடன் எதுவும்
திரும்ப வரவில்லை. பின்னர் ரிசர்வ் வங்கியின்
ஆலோசனைப்படி –
13 வங்கிகளும் தங்கள் கடனை – பங்குகளாக
மாற்றிக்கொண்டு விட்டன.கிங் பிஷரின்
பங்கு விலை பங்கு மார்க்கெட்டில் 40 ரூபாயாக
இருந்தபோது, இவர்கள் 63 ரூபாய் கொடுத்து
பங்கை வாங்கி கொண்டார்கள்.
(சந்தேகமே வேண்டாம் –எல்லாம் நம் பணம் தான் !)
இன்றைய தினத்தில் கிங் பிஷர் பங்கு அதல
பாதாளத்திற்கு சரிந்து – ரூ.19.65-ல் நிற்கிறது.
கிங் பிஷர் விஜய் மால்யாவின் முழு
கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
கம்பெனி சரியக் காரணம் –
நிர்வாகம் சரி இல்லாததே.
இந்த லட்சணத்தில் புதிதாக,
மிகுந்த பொருட்செலவில்,
சும்மா ‘பந்தா’ விற்காக,
இரண்டு டபுள் டக்கர் விமானங்களுக்கு
வேறு ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
இந்த ஆளுக்கு கன்னா பின்னாவென்று பழக்க
வழக்கங்கள். உலகின் இரண்டாவது மிகப்பெரிய
சாராய உற்பத்தித் தொழிற்சாலை –
(விஸ்கி, பீர் தயாரிக்கும் யுனைடட்
ப்ரூவரீஸ்), ரேஸ் கார்(போர்ஸ்-1),
கிரிக்கெட் கிளப்(ராயல் சேலஞ்சர்ஸ்),
அடிக்கடி சினிமா நடிகைகளுடன் பார்ட்டிகள் –
ஏகப்பட்ட பெண்கள் சகவாசம்.

இந்த நிறுவனத்தில் விஜய் மால்யாவின் பங்கு
58.61 %. வங்கிகள், நிதி -இன்சூரன்ஸ்
நிறுவனங்கள், தனியார் எல்லாரும் சேர்ந்து
மீதி 41.39 % பங்கு.
நான் சொல்ல வருவது –
இந்த ஆளுக்கு பணத்திற்கு
ஒன்றும் குறைவில்லை. உலகப்பணக்காரர்களின்
பட்டியலில் இவரும் வருகிறார். ஆட்டம், பாட்டம்
கொண்டாட்டங்களுக்கு ஒரு குறைச்சலும் இல்லை.
இவர் போட்ட ஆட்டங்களால் கம்பெனி திவால்
ஆனால் – அதை மீட்க நாட்டுடைமை ஆக்கப்பட்ட
வங்கிகள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் ?
அவை அனைத்தும் இந்த நாட்டு
மக்களின் பணம். நம் பணம்.
இந்த ஆளின் நஷ்டத்தை ஈடு கட்ட
அதைத் தூக்கி கொடுப்பதற்கு பிரதமருக்கோ, மற்ற
அமைச்சர்களுக்கோ என்ன அதிகாரம் இருக்கிறது ?
வங்கிகளில் இருப்பது இவர்கள்
அப்பன் வீட்டுப் பணமா என்ன ?
(இவர்களுக்கு ஏன் இத்தனை அக்கரை என்று
தோன்றலாம். அதிசயம் ஏதும் இல்லை இதில்.
அங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கின்றதே நிறைய-
பதிலுக்கு இது கூடச் செய்யா விட்டால் எப்படி ?
நாளை தொடர்ந்து வர வேண்டாமா ?)
மக்கள் தட்டிக் கேட்பார்களே என்கிற பயம்
கொஞ்சமாவது இருந்தால் இவர்கள்
இதைச்செய்யத் துணிவார்களா ?





வொனக்கும் எனக்கும் தெரிஞ்ச விசயமான இத்த, நம்ம அன்ன ஹாசாரே அண்ணாத்தேக்கு தெரியாமபூட்ச்சாபா? வாரத்லே 7 தபா பெட்ரோல் ரேட் ஏத்றாங்க! கேட்டா, கம்பேனி லாஸ்லே போகுதுங்க்றான்! இந்த 7000 கோடி கடனுள்ள, பிச்சைக்காரங்கிட்டே வசூல் செய்ங்கப்பா. ஒரு கிரிக்கெட் டீம் வேற நடுத்துறான்!
ஒன்னுமே பிரியமாட்டேங்குதுபா
ரொம்ப பேஜாராகீது வாத்யாரே
ஏழை விவசாயிகள் எத்தனையோ லட்சம் பேர் அரசின் கவனிப்பாரற்று செத்து வீழும் இந்த நாட்டில்தான் விஜய் மல்லையா போன்ற ஊதாரி நாதாரிகளுக்கு நம் பணத்தை அள்ளிக் கொடுத்தால்தான் காங்கிரஸ் களவாணிக் கூட்டங்களுக்கு திருப்தியே!
நம் பணத்தை நம் கண் முன்னே இப்படிக் களவாடுவது நம்மை நம் அனுமதியின்றி அவர்கள் வெளிப்படையாக வன்புணர்தலுக்குச் சமம். எத்தனை காலம் வலி தாங்காமல் பொறுத்துக்கொண்டிருக்கப் போகிறோம்?!!!
புரட்சி,
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மட்டும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றல்ல.
“மௌன’அதிகார ஆட்சிக்கு (மன்மோகன் சிங் ஆட்சி) எதிராகவும் நிகழ்த்த வேண்டிய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
கருப்புப்பண முதலைகளுக்கும்,
கள்ள மார்க்கெட் பணக்காரர்களுக்கும்,
பொறுக்கி அரசியல்வாதிகளுக்கும்,
திருட்டு மந்திரிகளுக்கும் வசதி செய்து
தரும் கேடு கெட்ட நிர்வாகம் –
இத்தனைக்கும் உலகப் புகழ் பெற்றது
இத்தாலி. நாம் இத்தாலிய பண்பைத்தானே
விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறோம் !
-பட வேண்டியது தான்.நம்மில் சிலர் செய்த
தவறு இவர்களைத் தேர்ந்தெடுத்தது.
அந்த தவற்றிற்கு எல்லாரும் சேர்ந்து
படுகிறோம்.
nainaaa padaa bejarana aalaa irukkiriyappaa …………………….
நைனா படா பேஜாரான ஆளா இருக்கிறியப்பா……
இந்த நாட்டில் நடை பெறும் கொள்ளைகளில் முக்கிய பங்கு இந்த மாதிரி கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு உண்டு. இவர்களுக்கு துனை போக வங்கிகள் மற்றும் அரசியல்வாதிகள். இதில் காங்கிரசு கயவாளிகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள் காவி பா.ஜ.க வினர். பதிவர் கா.மை குரல் கொடுக்கும் போது எதிர் கட்சியினர் என்ன சொல்கிறார்கள். ஆயில் நிறுவனங்கள் எப்படி 1,000 கோடி வரை கடண் கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. மண்ணெண்னையிலும், பெட்ரோல் விலையிலும் ஏற்றிக் கொள்ளலாம் என்ற நினைப்போ. இந்த 7000 கோடி கடண் முதலாளி தற்சமயம் பெங்களூரில் 1,500 கோடிகளில் வீடு கட்டிக்கொன்டிருக்கிறார். http://jaipur.co/mallayas-white-house-is-heaven-in-the-air/
Post arumai Sago.
ஹிந்து நாளிதழை முந்தியதற்கு நண்பர் காவிரிமைந்தனுக்கு வாழ்த்துக்கள்.
சுருக்கமாக சொல்கிறேன்.சோனியா காங்கிரஸ் அழியும்வரை நம் நாட்டிற்கு நல்லகாலம் இல்லை.
நண்பர் சத்திரியன் புரட்சி வேண்டுகிறார.
மே 2014 வரை காத்திருந்து தவறாமல் வாக்குசாவடிக்கு சென்று ஓட்டளிக்கவும்.அதுதான் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய புரட்சி.ஒரு நாள் வீட்டில் தூங்கி விட்டு மீதி 1824 நாட்களும் குறைசொல்வதில் பயனில்லை.
Nam Naade ivargal ponra pana muthalaikal kaiyil than irukkirathu. Ellaam nam thalai vithi.
என்ன கொடுமைடா இது
S. i agree but did we opposed when airlines and other public sectors privatised?