அடுத்த பிரதமர் …….
தலைநகரில் வலம் வரும் செய்திகளைப்
பார்த்தால் பிரதமர் மாறும் நேரம்
வந்து விட்டதாகத் தோன்றுகிறது !
மன்மோகன் சிங் எந்த நேரமும்
தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக்
கூறுகிறார்கள் !
சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை
பற்றியதே !
மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே
அவருக்கு தெரியும் – தான் தற்காலிக
பிரதமர் தான் என்று.
தற்காலிக பதவி 7 ஆண்டுகள் வரை
நீடித்தது (அவரையும் சேர்த்து) –
அனைவருக்கும் ஆச்சரியமே !
ஆதியிலேயே –
ராகுல் காந்தி தயாராகும் வரை –
மன்னிக்கவும் –
தயார்படுத்தப்படும் வரை தான் –
ம.மோ.சிங் இருக்க ஏற்பாடு.
ராகுலுக்கு தகுந்த சூழ்நிலையை
உருவாக்கவும், ராகுலை
பிரதமர் பொறுப்பிற்கு பக்குவப்படுத்தவும் –
திக் விஜய் சிங்
சோனியா காந்தியால் பணிக்கப்பட்டார்.
ஆனால் பக்குவம் போதிக்க
பணிக்கப்பட்டவருக்கே
பக்குவம் போதாத காரணத்தால் –
இந்த பணி பரிதாபகரமாக
இன்னும் துவக்க நிலையிலேயே இருக்கிறது.
திக் விஜய் சிங்,
தன்னை நிலை நிறுத்திக் கொள்வதிலும்,
பட்டத்து இளவரசருக்கு
ராஜகுரு தான் தான் என்று
காட்டிக்கொள்வதிலுமே பெரும்பாலான
நேரத்தை செலவழித்து வருவதாலும் –
என்ன தான் தயார்படுத்தினாலும்,
இயற்கையிலேயே இருக்க வேண்டிய சில
முக்கியமான தலைமைப் பண்புகள்
ராகுலிடத்தில்
இல்லாத காரணத்தாலும் –
இது வரை இந்த நோக்கில்
செய்யப்பட்டவை எதுவும்
பலன் அளிக்காத நிலையிலேயே
இருக்கின்றன.
சில மாதங்களாகவே “அன்னை”க்கும்
ம.மோ.சி.க்கும் இடைவெளி சிறிது சிறிதாக
அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பல்வேறு புரட்சித் திட்டங்களுக்கும்(?),
சாதனைகளுக்கும்(!) –
“ஆளும் கூட்டணியின் தலைவர்”
(chairman, NAC )
என்கிற பெயரில் சோனியா காந்திக்கு
பாராட்டுதலும்,
மத்திய அரசின் பல்வேறு குழப்பங்களுக்கும்,
தோல்விகளுக்கும்,
அடுக்கடுக்காக வெளிப்படும் ஊழல்களுக்கும்,
செயல்படாத தன்மைக்கும் –
அரசாங்கத்தின் தலைவர்
என்கிற வகையில் ம.மோ.சி.க்கு
கண்டனங்களும் – சேரும் வண்ணம்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளர்கள்
செயல்பட்டு வருவது
வெளிப்படையாகவே தெரிகிறது.
ஒன்று பதவியை விட்டு தானாகவே
வெளியேற வேண்டும் அல்லது
எதிர்ப்பு தெரிவித்து
தன் அதிகாரத்தை உறுதி செய்து கொள்ள
வேண்டும் என்கிற நிலைமைக்கு
ம.மோ.சி. தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலை !
தைரியம் இல்லாத –ஆனால்,
படு சாமர்த்தியமான ம.மோ.சி –
ராகுல் காந்தி இப்போதைக்கு தயார்
ஆக வாய்ப்பு இல்லை
என்பது தெளிவாகத் தெரிவதால்,
பதவியை விட்டு
தானாக வெளியேறுவதில்லை என்கிற
உறுதியில் இருப்பதாகத் தெரிகிறது.
பாராளுமன்றத்தில், குறைந்த பட்ச
மெஜாரிடி 272 என்கிற நிலையில்,
காங்கிரசுக்கு 206 எம்.பி.க்களே இருப்பதால் –
காங்கிரசுக்கு என்று தனிப்பட்ட
மெஜாரிடி இல்லாத வரை
ராகுலை பிரதமராக களம் இறக்குவது
அரசியல் தற்கொலைக்கு சமம் என்று
நினைக்கும் “அன்னை”
மத்திய அரசின் இமேஜை உயர்த்த –
அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரை
ம.மோ.சி.க்கு பதிலாக
பிரதமராக பதவி வகிக்க நம்பிக்கையான
ஒருவரை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்.
இந்த நிலைக்கு போட்டி போடுகிறவர்கள்
இருவர் -பிரனாப் முகர்ஜியும், ப.சி.யும்.
பிரனாப் முகர்ஜி சீனியர்.
பல வருடங்களாக –
ராஜீவ் காந்தி காலத்திலிருந்தே – மத்திய
அரசில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்.
ஆனால் முகர்ஜியை விட ப.சி.
“அன்னை”க்கு அதிகம் பழக்கமானவர்,
குடும்ப நண்பர்,
நம்பிக்கையானவர்.
என்றாலும் தகுந்த காரணம் இல்லாமல் –
சரியான சூழ்நிலை உருவாகாமல் –
சீனியரான பிரனாப் முகர்ஜியை
ஒதுக்கி விட்டு
ப.சி.யை பிரதமர் ஆக்க முயல்வது
காங்கிரஸ் அரசுக்கே ஆபத்தை
உண்டாக்கலாம்.
(முகர்ஜிக்கு அப்படி ஒன்றும்
ஆதரவாளர் கூட்டம் என்றெல்லாம் பெரிதாக
எதுவும் இல்லை என்றாலும் – குறைந்த பட்சம்
30 எம்.பி.க்களையாவது அவரால் திரட்ட
இயலும். மத்திய அரசை நிலைகுலையச்
செய்ய அதுவே போதும் !)
எனவே –முகர்ஜியை போட்டியிலிருந்து
ஒதுக்குவது “மகனே – உன் சமர்த்து”என்று
“அன்னை” கூறியதன் விளைவு தான்
அண்மையில் வெளிவந்த
“சூயிங்கம் மர்மம்”.இருந்தாலும்
முகர்ஜி இதுவரை எதிலும் மாட்டவில்லை.
மிகவும் எச்சரிக்கையுடனே உள்ளார்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
பிரதமர் நாற்காலியின் வெகு அருகே
ப.சி. இருப்பது உண்மை.
பிரனாப் முகர்ஜியை எவ்வளவு சீக்கிரம்
பிரச்சினை இல்லாமல் ஒதுக்க முடிகிறது
என்பதைப் பொறுத்து –
சிவகங்கைக்காரர் பிரதமர்
நாற்காலியில் அமர்வது உறுதி ஆகலாம் !





நம் எதிர்கால இந்தியாவின் நிலைமை ???
ஒரு நல்ல பதிவு; வாழ்த்துக்கள்.
அ(ட)ப்பாவி சிங் கூடிய விரைவில் கல்தா.பிரகாசமான வாய்ப்புக்கள்..
ஆனால் அடுத்த பிரதமர் ப.சி யாக இருக்க வாய்ப்புக்கள் குறைவு.
பிரணாபிற்கு அதிகம்.
அதே போல இன்னும் ஆறுமாதம் சிங்கை வைத்திருந்து பிறகு ராகுலையும் கொணரலாம்.
Hallo,
There is apossiblity, and it is also a good move to put so many problems to back burner
a-nagarasan
கிட்ட தட்ட ஒரு முடிவை நோக்கி இன்னும் நாலு நாளே நகர்ந்துடும் பாருங்க..புரியுதில்லே..