சூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி !
சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு
வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த
ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி
வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை !
விஷயம் இது தான்.
தன் அலுவலகத்தில் ஏதோ உளவு வேலை
நடப்பதாக, மத்திய நிதி அமைச்சர் பிரனாப்
முகர்ஜிக்கு திடீரென்று சந்தேகம் வந்திருக்கிறது.
உடனடியாக, தன் கட்டுப்பாட்டில் இருக்கும்
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம்
(Central Board for Direct Taxes)
மூலமாக ஒரு ரகசிய விசாரணைக்கு உத்திரவு
இட்டிருக்கிறார். வாரியமும் ஒரு தனியார்
துப்பறியும் நிறுவனம் (private detective
agency) மூலமாக ரகசிய விசாரணை
நடத்தி இருக்கிறது.
விளைவு – 13 இடங்களில் – மேஜைக்கு
அடியில், மறைவான இடங்களில்
சூயிங் கம் ஒட்டப்பட்டிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டிருக்கிறது !
இந்த சூயிங் கம் ஒட்டப்பட்டிருக்கும் விதம் –
ஏதோ ஒற்று அறியும் விதத்தில் நுண்மையான
மைக் அல்லது காமிரா போன்ற பொருட்கள்
வேவு பார்ப்பதற்காக அங்கே ஒட்டப்பட்டு
இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி
இருக்கிறது.
ஆனால் தேடும்போது, அத்தகைய
சாதனங்கள் எவையும் அங்கே காணோம்.
முன்னர் அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
என்கிற சந்தேகம் தோன்றி இருக்கிறது.
இந்த சூயிங் கம் அங்கேயே விடப்பட்டிருந்ததன்
நோக்கம் அவ்வப்போது – தேவைப்படும்போது
அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாக
இருக்கலாம்.
கடுப்பான பிரனாப் உடனடியாக பிரதமர்
சிங்கிற்கு இதைப்பற்றி எழுத்து மூலம் புகார்
செய்து, உடனடி ரகசிய விசாரணை கோரி
இருக்கிறார்.
அரசாங்க தர்ப்பில் இது வரை இவை
அனைத்தையும் ரகசியமாகவே வைத்துக்
கொண்டிருந்திருக்கிறார்கள்
இந்த தகவல்கள் எப்படியோ வெளியில்
கசிந்தவுடன் – நேற்று தொலைக்காட்சி
நிருபர்கள் பிரனாபை சூழ்ந்து கொண்டு இது
பற்றி கேட்டபோது – சூயிங் கம் இருந்ததையோ,
பிரதமருக்கு புகார் அனுப்பியதையோ
மறுக்காதவர் –
“விசாரணையில் தவறு ஏதும்
நடக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது.
போய் வேலையைப் பாருங்கள்.
உங்கள் நேரத்தை அநாவசியமாக இதில்
செலவழிக்காதீர்கள் “
-என்று கடு கடுத்த முகத்துடன்
சொல்லிக் கொண்டே போனார் !
எதிர்க்கட்சிகள் இதை பிரச்சினை செய்ய
ஆரம்பித்தவுடன் –
இன்றைய தினம் தகவல் தொடர்பு அமைச்சர்
அம்பிகா சோனி கூறுகிறார் –
“பிரனாப் அலுவலகத்தில் காணப்பட்ட
பசை போன்ற பொருள் ஒட்டப்பட்டிருந்தது
வெறும் சூயிங் கம் தான். உளவு பார்க்க
முயற்சிகள் நடந்ததாக வெளியான தகவல்களில்
உண்மை இல்லை என்று பிரனாப் முகர்ஜியே
கூறி உள்ளதால், இந்த விவகாரத்தை இத்துடன்
நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இது போன்ற தேவையற்ற விஷயங்களில்,
நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க
வேண்டாம்”
அம்பிகா சோனியின் பேச்சு சந்தேகத்தை
ஊர்ஜிதப்படுத்துவதாகவே இருக்கிறது.
சூயிங் கம் ஒட்டப்பட்டிருந்ததும்,
ரகசிய விசாரணை நடந்ததும் உண்மை
என்பதை அமைச்சரே ஒப்புக் கொள்கிறார்.
அமைச்சர் எவ்வளவு தான் முயற்சி செய்து,
விளக்கங்கள் கூறி –
விஷயத்தை மூடி முடிவிற்கு கொண்டு வர
முயற்சி செய்தாலும் –
நம் மர மண்டைக்கு சில விஷயங்கள்
இன்னமும் புரியமாட்டேன் என்கிறது –
அவை என்ன ?
1) பிர்னாப் முகர்ஜி நிறைய
சூயிங் கம் சாப்பிடுவாரா?
2) சாப்பிட்ட பின் அதை மேஜைக்கடியில்
ஒட்டி வைக்கும் விளையாட்டு பழக்கம்
அவருக்கு உண்டா ?
3) அதெப்படி 13 இடங்களில் சூயிங் கம் ?
ஒவ்வொரு இடமாக போய் மேஜைக்கடியில்
உட்கார்ந்து ஒட்டுவாரா ?அலுவலகத்தில்
அவர் கூட வேறு யாருமே
இருக்க மாட்டார்களா ?
4) நம் வீட்டில் எதாவது திருட்டு என்றால்,
நாம் போலீசிடம் தானே போய் புகார்
கொடுப்போம் ?
5) அதை விட்டு விட்டு தனியார் துப்பறியும்
நிறுவனத்தை அணுகினால் என்ன அர்த்தம் ?
6) ஒன்று – போலீசின் மீது நம்பிக்கை இல்லை
அல்லது விவகாரம் எசகு பிசகானதாக இருக்கும்.
போலீசுக்கு போனால் நமக்கே பிரச்சினை
வரக்கூடியதாக இருக்கும் – அப்படித் தானே ?
7) அப்படியானால் – உடனடியாக உள்துறை
அமைச்சரிடம் தானே ரகசிய விசாரணை
நடத்தும்படி கேட்டிருக்க வேண்டும் ?
அதை விட்டு விட்டு –
ரகசியமாக தனியார் துப்பறியும்
ஏஜென்சியை அணுகினால் என்ன அர்த்தம் ?
8) உள் துறையே நிதி அமைச்சரை
வேவு பார்க்கிறது என்றா ?
யார் உத்திரவில் ?
உள்துறை அமைச்சர் உத்திரவிலா ?
9) அல்லது “அன்னை”யின் ஆணையா ?
யார் விளக்கப் போகின்றார்கள் ?இவர்கள்
மறைக்க மறைக்க சந்தேகம் இன்னும்
அதிகமாகிக் கொண்டே போவது தான் உண்மை !



superb
சூ……………………….
யிங்…………………………………
கம்……………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சூ……………………….
யின்…………………………………
கம்………………….???????????????????
OM NAMO NARAYANA
thanks and blessings all of u
rajasekhar.p
அந்தரங்கத்திலிருப்பது கொஞ்சம் கொஞ்சம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. தங்க நாற்காலி, தங்கத்தட்டு, கோடிகளின் கொடி கொடிகட்டிப் பறக்குமூழலென. காந்திய நெறியின் தேவை இன்று வேறுவிதங்களில்.