10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர்
இன்று …..
பொது வாழ்வில் இருக்கும் சில பேர்களைத்
தொடர்ந்து சில வருடங்களாகப்
பார்த்து வருகிறேன்.
10 வருடம், 15 வருடம் முன்பு கைலி கட்டிக் கொண்டு,
தெருவில் சாதாரணமாக நடந்து
போய்க் கொண்டிருந்தவர்கள் இன்று சென்னைக்கும்
மதுரைக்கும் கூட விமானத்தில் பறந்து
கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ வாடகைக்கு கொடுக்கும் கடை,
சைக்கிள் பஞ்ச்சர் ஒட்டும் கடை வைத்திருந்தவர்கள்,
டீக்கடை வைத்திருந்தவர்கள்,
பால் வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்தவர்கள்,
பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர்கள் – எல்லாம்
இன்று மதுரையிலும், திருவண்ணாமலையிலும்,
விழுப்புரத்திலும்,
கோடீஸ்வரர்களாகி விட்டார்கள்.
சொந்தப்படம் எடுக்கிறார்கள் –
எஞ்சினீரிங்க் காலேஜ் வைத்திருக்கிறார்கள்,
ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார்கள் –
டூரிஸ்ட் பஸ் ஓட்டுகிறார்கள் –
வீடியோ பஸ் மேல் சர்வசகஜமாக 5 கோடி பணம்
போட்டு வைத்திருக்கிறார்கள் !
பார்க்கவே அதிசயமாக இருக்கிறது –
இவ்வளவு குறுகிய காலத்தில்
இவர்கள் எப்படித்தான் முன்னுக்கு
வந்து விட்டார்கள் என்று !
ஏன் அய்யா – உனக்கு ஏன் பொறாமை ?
நாடு பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது.
மக்கள் வளம் பெற்று வருகிறார்கள் ! இதில் என்ன தவறு –
என்று நீங்கள் கேட்கலாம் !
நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் –
இவ்வாறு முன்னுக்கு வந்தவர்கள் அத்தனை பேரும்
சொல்லிவைத்தாற்போல் பொதுவாக ஒரு தொழிலை
செய்கிறார்களே – அதான் ” அரசியல் ”
அது தான் அதிசமாக இருக்கிறது.
அரசியலில் இருப்பவர்கள் மட்டும் இப்படி
குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆவது எப்படி ?
“ஜன் லோக்பால்” சட்டம் தொடர்பாக வலைத்தளம்
ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது –
http://www.janlokpalbillconsultation.org
அதற்கு ஒரு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறேன்.
எங்களுக்கு தெரிந்து – தமிழ்நாட்டில்
குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கும்
அரசியல்வாதிகளைப் பற்றிய பட்டியல் ஒன்றைத்
தயாரித்து தருகிறோம். இப்படிப் பட்டவர்கள்
மற்ற மாநிலங்களிலும் இருப்பார்கள்.
இத்தகையோர் சொத்துக்கள் எந்த முறையில்,
எப்போது, எப்படி – வாங்கப்பட்டன என்றும்
அவர்களின் வெளியே தெரிந்த வருமானத்துக்கும்
வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களுக்கும் உள்ள
விகிதாச்சாரம் எப்படி இருக்கிறது என்றும் விசாரணை
செய்ய இந்த சட்ட மசோதாவில் வழி ஒன்று
செய்ய வேண்டும் என்று !



முன்னுக்கு வந்தவர்கள் அத்தனை பேரும்
சொல்லிவைத்தாற்போல் பொதுவாக ஒரு தொழிலை
செய்கிறார்களே – அதான் ” அரசியல் “ //
அப்புரம் உள்ளேயும் போவார்கள் ராசா போல..
WELCOME YOUR VALUABLE EFFORT
இந்த சீர்கேட்டிற்கு ஒரே காரணம் களில் உருவான தாரளமயமாக்கல் கொள்கை .சிற்பி:இப்பொழுது உதவாக்கரையாக இருக்கும் சிங்’.இந்த கொள்கை சரியான கட்டுப்பாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டதால் அத்தனை (அ)சிங்கங்களும் கூண்டை விட்டு வெளியே வந்து விட்டன.பணம் ஒன்றுதான் பிரதானமாகி அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் ஊழல் கோரத்தாண்டவம் ஆடுகிறது.செய்வதறியாது அரசு முழிக்கிறது.பேரழிவை நோக்கி நாடு செல்கிறது.
இந்த சீர்கேட்டிற்கு ஒரே காரணம் 1990 களில்…