எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள்  தான்
துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !

அப்பப்பா –  காங்கிரஸ் கட்சி  எப்படித்தான்
கண்டெடுக்கிறதோ  தெரியவில்லை !
பொறுக்கிகள்,
மொள்ளைமாறிகள்,  திருடர்கள்,
மக்கள்  சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக
வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை !

லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது  புதுச்சேரி
கவர்னராக காங்கிரஸ்  அன்னையால் அமர்த்தப்பட்டு
அழகு பார்க்கப்படும் இக்பால் சிங் !

தினம் ஒரு ஊழல்  வெளிப்பட்டாலும் –
அசராமல் இன்றைக்கு  கூட
அன்னா ஹஜாரேக்கு கடிதம் எழுதி இருக்கிறார் அன்னை –
“ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற என் முனைப்பில்
எள்ளளவும் தொய்வில்லை. தொடர்ந்து  இதே லட்சிய
தாகத்துடன்  பணி புரிவேன்”  என்று.

எந்த மாநிலத்திலாவது ஒன்றுக்கு மேற்பட்ட
(தலைமைக்கு  வேண்டிய) தறுதலைகள்
ஆட்டம் போடும்போது, யாராவது ஒருவரை  
வெகு தூரத்தில் உள்ள மாநிலத்தில்   கவர்னராக
கொண்டு போய் விட்டு – அங்கே கடைவிரிக்க வழிசெய்வது
தானே  காங்கிரஸ்  கடைபிடிக்கும்  ஃபார்முலா ?

புதுச்சேரியில்  போட்டியாக  இருந்த  மரக்காயரை
மேகாலயாவில் கவர்னராகக் கொண்டு போய் விட்டனர்.
பீகாரில் வம்பாக இருந்த  இக்பால் சிங்கை புதுச்சேரியில்
கொண்டு வந்து விட்டு   இங்கே வைத்துக் கொள்
உன் ஆட்டத்தை என்று அவிழ்த்து   விட்டனர்.

ஏற்கெனவே 7  மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் புதுச்சேரி
மாநிலத்தில் 8 வதாக  ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி !
தனக்குத் தானே  அனுமதி கொடுத்துக்கொண்டு –
வேலையைத் துவக்கி விட்டான்!
( அசன் அலியின் பங்காளிக்கு மரியாதை என்ன
வேண்டிக் கிடக்கிறது ?)

(மந்திரிகள்  கொள்ளை அடித்தாலாவது அதில் ஒரு
நியாயம் இருக்கும் !  தேர்தலில் நின்றிருப்பார்கள் –
பாவம் – நிறைய   பணம் செலவழித்திருப்பார்கள் !
இவன் முதல் கூடப் போடாமலே   லாபம் சம்பாதிக்க
நினைப்பது எந்த விதத்தில்  நியாயம் ?)

இவனுடைய  மகன் களும்,  செகரட்டரியும் சேர்ந்து ஆரம்பித்த
ட்ரஸ்டுக்கு –  சொந்தமாக  நிலமே இன்னும் உறுதியாகவில்லை.
சொந்தமாக மருத்துவ மனை  இருக்க வேண்டும் என்கிற
நிபந்தனையும் நிறைவேறவில்லை.
கேபினட்  அனுமதியும் பெறப்படவில்லை –
ஆனால் அப்ளிகேஷன் போட்ட அன்றே  தடை இல்லா
சான்றிதழ் –  இவன்  கூறி –
புதுச்சேரி அரசால்   கொடுக்கப்பட்டு விட்டது !
டிரஸ்ட்  நடத்தினால்   என்ன தவறு என்று
எதிர்க்  கேள்வி  வேறு !

இந்த பொறுக்கியை  உடனடியாக பதவியை விட்டு
டிஸ்மிஸ் செய்வதை விட்டு விட்டு  –  சட்டமேதையான
மத்திய அரசின்  உள்துறை அமைச்சர்  –
பதவியில் இருக்கும் போதே  கவர்னரை
சிபி ஐ விசாரிக்க – புதுப்புது  வகையில்  விதிகளை
உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் !

புதுச்சேரியில்  கவர்னர் பதவியில்  இன்னும்
தொற்றிக்கொண்டிருக்கும் திருட்டு முழி  ஆசாமிக்கோ,
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கோ-
தலையாட்டி   பிரதமருக்கோ –
காங்கிரஸ்  தலைமைக்கோ –
இதில் யாருக்கும் வெட்கமில்லை !

புதுச்சேரி  சிறிய  ஊர்.
எனக்கு பரிச்சயமான இடம்.
மிகவும் பிடித்த ஊர்.
ஊரின்   நடுவே  தான்  ராஜ்பவன்  இருக்கிறது.
எதிரே மக்கள்  திரள வசதியாக பெரிய பூங்காவும்
திறந்த வெளியும்  இருக்கின்றன.
இங்கு  மக்கள் கூடுவதும், கூட்டப்படுவதும்  மிக மிக  எளிது.

இதற்கு தீர்வு காண்பது  புதுச்சேரி மக்களின்  கைகளில் தான்
இருக்கிறது !  அப்படி  புதுச்சேரி  என்ன  சாணி பக்கெட்டோ –  
துடைப்பங்களோ கிடைக்காத  இடமா  என்ன ?  
இப்போது  தக்காளியும் மலிவாகக் கிடைக்கிறது –
கிலோ  மூன்று  ரூபாய் தான் !
அழுகிய தக்காளி  இன்னும் மலிவாகக் கிடைக்கும் !!

இந்தியா முழுவதும்  பெரிய அளவில் நடக்க வேண்டிய
ஒரு கர சேவையை  துவக்கி வைத்த பெருமை  புதுச்சேரி
மக்களுக்கே  கிடைக்குமா ? !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !

  1. viswamitra's avatar viswamitra சொல்கிறார்:

    ஐயோ புதுச்சேரியாவது சின்ன ஊர் சின்ன மாநிலம் ஆகவே ஒரு கல்லூரி ஒரு ஊழல் என்று சின்ன அளவில் நடத்துகிறான். தமிழ் நாட்டில் இருக்கும் தாடிக்காரனோ ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் விலைக்கு வாங்கும் அளவுக்கு கரை வேட்டிகளுக்குப் போட்டியாக பிஸினெஸ் நடத்துகிறான். யார் யாரைக் கேட்ப்பது? ரெண்டு தாடிகளும் சேர்ந்து கொண்டு டெல்லித் தாடியின் அனுமதியுடன் முடிந்த அளவு கொள்ளை அடிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிப்போம் என்று ஊழலின் அன்னையும் தியாகத் திருவுருவும் சொக்கத் தங்கமும் அவளது பிள்ளையும் அறிக்கை விடுவதும் அதை நம்ப ஒரு கூட்டம் இருப்பதும் கேவலமாக உள்ளது

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    நீதிபதி:உன் மனைவியை வேறொரு ஆடவனுடன், படுக்கை அறையில் பார்த்தபோது,நீ ஏன், அவனை சுடாமல், அவளை சுட்டுக்கொன்றாய்?

    குற்றவாளி:ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கொலை செய்வதை காட்டிலும்,ஒரே கொலையோடு முடிச்சுடறது நல்லது என எண்ணித்தான்,எஜமான்!
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
    என்ன,உங்க பதிவுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா?யோசித்துப்பாருங்க!

  3. ♠புதுவை சிவா♠'s avatar ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

    இங்கு ஆளும் கட்சி அடிக்கும் கொள்ளைக்கு மாதம் மாதம் எதிர் கட்சிகளுக்கு கப்பம் கட்டி விடுவதால் இந்த விஷயத்தில் இவர்கள் ஒரே ஒரு எதிர்ப்பு அறிக்கை மட்டும் மீடியாவிற்கு தறுவார்கள் அதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டது. சமூக அமைப்பும் பெரிதாக எந்த போரட்டமும் நடத்தாது.

    சரியான எதிர்கட்சி | வலுவான சமூக அமைப்புகள் | பொது நலனின் அக்கரை கொண்ட வக்கீல் அமைப்புகள் இல்லாதது இவர்களுக்கு கொண்டாட்டம்.

    இதற்கு ஒரு சான்று நடந்து முடிந்த புதுவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெண்களுக்கு குழந்தையை தவிர மற்ற அனைத்து பொருள்களும் இலவசமாக அளித்திருப்பதாக கூறி இருக்கிறார். இது பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது.
    http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Chennai&artid=404449&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF

    video link

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கண்பத்,

      நான் அர்த்தம் சொல்லப்போய்
      அனர்த்தமாகி விடப்போகிறதே
      என்று தயக்கமாக இருக்கிறது !
      நீங்களே சொல்லி விடுங்களேன் –
      சுவையாக இருக்கும்.

      நண்பர் புதுவை சிவா,

      இங்கும் ஒன்றும் வாழவில்லை.
      எல்லாரும் ஒரு துவக்கத்துக்காகத் தான்
      காத்திருக்கிறோம். யாராவது துவக்கினால் –
      தர்ம அடி போட நிறைய பேர்
      கூட்டமாக காத்துக்கொண்டிருக்(கிறார்கள்)
      (கிறோம் !)
      இங்கே ராஜ்பவனில் ஹாஸ்பிடலே
      கட்டும் கனவெல்லாம் உண்டே !

      நண்பர் விஸ்வாமித்ரா,

      இருக்கட்டும் –
      இவை எல்லாம் இன்னும் எத்தனை நாள் ?
      எல்லாவற்றிற்கும்
      ஒரு முடிவு விரைவில் வரும்
      என்றே நம்புவோம் !
      அதில் நம்முடைய பங்கு பணியை ஆற்ற
      நாமும் ஆயத்தமாவோம் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    இது உண்மையிலேயே நண்பர் Ganpatஇன் மறுமொழிதானா? சந்தேகமாக உள்ளது.

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நண்பர் ramanans அவர்களுக்கு வணக்கம்;

    இது Ganpat என்கிற அடியேன் எழுதியதுதான்.
    இதில் உங்களுக்கு ஏதேனும் ஆபாசம் தொனித்திருந்தால்
    மன்னிக்கவும்.
    ஒவ்வொரு நாளும் ஒரு கவர்னர் ,ஒரு முதல் மந்திரி ,ஒரு MP
    என்று தண்டிப்பதை விட ,ஒரே முறை, நிஜ பிரதமர்,மற்றும் நிழல் பிரதமரை தண்டித்தால் பிரச்சினையை சுலபமாக தீர்த்துவிடலாம் என்ற அடிப்படையில்,எழுதப்பட்ட பின்னூட்டம் அது.
    1970 ஆண்டு “கண்ணே பாப்பா” என்ற திரைப்படம் வெளிவந்தது.அதில்,கவியரசர் எழுதிய “தென்றலில் ஆடை பின்ன” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.அதை விமரிசித்து அன்றைய “பேசும் படம்” மாத இதழில் ஒரு வாசகர் கீழ்கண்ட கடிதம் எழுதியிருந்தார்….
    இந்தப்பாடலில்,
    “அன்று நான் குற்றாலத்தில்
    ஆசையாய் குளித்திருந்தேன்
    அங்கங்கள் நனைத்திருந்தேன்”
    என்று கவிஞர் எழுதியுள்ள வரிகளை பார்த்து
    அதிர்ச்சி அடைந்தேன்.
    குளிக்கும் போது அங்கங்கள்
    நனையாமல் என்ன செய்யும்?
    எதற்கு இந்த ஆபாச வர்ணனை?” என்று!!
    அந்த வாசகர் வாரிசுகளில் ஒருவரை(அல்லது
    அந்த வாசகரேயேதானோ என்னமோ),இன்று உங்கள் வடிவில் நான் காண்கிறேன்!

    நீங்கள் என் மேல் வைத்திருக்கும்,
    அன்பிற்கும்,மதிப்பிற்கும்,
    என் மனமார்ந்த நன்றி

    பி.கு:
    காவிரிமைந்தன் வலைதளத்தில்
    எதோ இரண்டொரு ஆபாச பின்னூட்டங்களாம்
    என்று கேள்விப்பட்டு “ஆவலு”டன் இங்கு வந்து,
    பின் ஏமாற்றத்துடன் திரும்பப்போகும் பல வாசகர்களுக்கும் என் ADVANCE APOLOGIES
    (for their disappointment)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.