விக்கி லீக்ஸில் அப்சல் குரு-
அப்துல் கலாமுக்கு பயந்த சோனியா காந்தி !
2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தைத் தாக்கி,
அரசியல் தலைவர்களை கொலை செய்ய
முயற்சித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு
கொண்டிருந்த வகையில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட கைதி அப்சல் குரு என்பது
நினைவிருக்கலாம்.
பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ்
செய்திகளில் ஒன்று கூறுகிறது –
2006-லேயே சுப்ரீம் கோர்ட்டால் மரண தண்டனை
உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையிலும் –
அப்சல் குருவைத் தூக்கில் போட
மத்திய காங்கிரஸ் அரசு இன்னமும் அனுமதி
கொடுக்கவில்லை. விக்கி லீக்ஸில் இதற்கான
காரணங்களாக சொல்லப்படுபவை –
போட்டால் காஷ்மீரில் காங்கிரஸ் அரசுக்கு
பல தொந்திரவுகள் ஏற்படும் – எனவே அவனுக்கு
மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று
சோனியா காந்திக்கு பரிந்துரை செய்தாராம்
அப்போதைய காஷ்மீர்
முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்.
அதே போல், அடுத்து உத்திரப் பிரதேசத்தில்
தேர்தல் வரவிருப்பதால், தூக்கு தண்டனை
நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சி
முஸ்லிம்களின் கணிசமான ஓட்டுக்களை
இழக்க நேரிடும் என்றும்
சோனியா காந்தி எண்ணினாராம.
தூக்கு தண்டனையை ரத்து செய்து,
மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட
கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்றால் –
அப்போதைய ஜனாதிபதியான அப்துல் கலாம்
பரிந்துரையை நிராகரித்து, தண்டனையை
நிறைவேற்ற உத்திரவிட்டு விட்டால்
என்ன செய்வது என்கிற பயமும்
சோனியா காந்திக்கு இருந்ததாம்.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாகக்
கண்டு பிடிக்கப்பட்ட பார்முலா தானாம்
“கிடப்பில் போடுவது”.
அப்போது தூக்கிப் போட்டது தான் –
இன்னும் “கிடப்பில்” இருக்கிறதாம் !
“ஓட்டு அரசியல்” நம் நாட்டில் என்னவெல்லாம்
செய்ய வைக்கிறது என்பது நமக்கு தெரிகிறதோ
இல்லையோ – அமெரிக்கர்களுக்கு
நன்கு தெரிந்திருக்கிறது !



I am waiting for the news & related comments & the truth behind saddique baasha’s, the so called suicide
அன்பிற்குரிய கா.மை அவர்களுக்கு..
மொத்தத்தில்
அப்துல் கலாம்
ஒரு சிறந்த
முதல்- குடிமகன்
என்ற பெருமையை
சோனியா காந்தியே ஒத்துகொள்கிறார்..
அப்படியானால்?
ஏன் …..
இரண்டாவது முறையாக
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபடவில்லை..
இதற்கு- ஏன்?
தமிழினத்தலைவர்
குரல் கொடுக்கவில்லை..
இவர் என்ன தமிழின தலைவரா?
துரோகியா ?
THANK U
RAJASEKHAR.P
//இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாகக்
கண்டு பிடிக்கப்பட்ட பார்முலா தானாம்
“கிடப்பில் போடுவது”.
அப்போது தூக்கிப் போட்டது தான் –
இன்னும் “கிடப்பில்” இருக்கிறதாம் !//
அடப்பாவீகளா……..!!
//“ஓட்டு அரசியல்” நம் நாட்டில் என்னவெல்லாம்
செய்ய வைக்கிறது என்பது நமக்கு தெரிகிறதோ
இல்லையோ – அமெரிக்கர்களுக்கு
நன்கு தெரிந்திருக்கிறது ! //
கஷ்டகாலம்…..! ஒன்னும் சொல்றதுக்கில்ல…..!!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com