நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள
முகரையைப் பாருங்கள் !
கீழே உள்ள படத்தில் கையெழுத்து போட்டுக்
கொண்டிருக்கும் முகரையைப் பாருங்கள்.
எதாவது தோன்றுகிறதா ?
முந்தாநாள் வரை –
அரசு நிறுவனம் ஒன்றில்
(steel authority of india ltd.)
அதிகாரியாக சேவை செய்து கொண்டிருந்தவர்-
நேற்று –
இளைஞர் திலகம் ராகுல் காந்தியின்
அறைகூவலைக்கேட்டு (அத்தாட்சியாக
பின்னால் ராகுல் காந்தி படமாகத்
தொங்குகிறார் பாருங்கள்!)
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
இந்த நபர்.
இன்று –
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில்
போட்டியிட மனு கொடுக்கிறார் !
அது எப்படி முடியும். கட்சியில் ஏற்கெனவே
நிறைய சீனியர்கள் இருப்பார்களே என்கிறீர்களா ?
தகுதியும், திறமையும் உள்ளவர்களை
எப்போதுமே ஊக்குவிக்கத் தவறாது
காங்கிரஸ் தலைமை !
அது என்ன தகுதி என்கிறீர்களா ?
அப்பன் ஏற்கெனவே மந்திரியாக இருக்க வேண்டும்.
அது என்ன திறமை என்கிறீர்களா ?
ஊரை ஏமாற்றத் தெரிய வேண்டும்.
நேரம் தெரிந்து காரியம் ஆற்ற வேண்டும்.
போன தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி விலாசமே
இல்லாமல் இருந்தது மேற்கு வங்காளத்தில்.
இந்த தேர்தல் – மம்தா பானர்ஜியுடன் கூட்டு
காரணமாக நம்பிக்கை அளிக்கிறது. ஜெயித்தால்
கூட்டணி மந்திரிசபை அமையக்கூடும்.
அப்பன் செல்வாக்கில் மந்திரியும் ஆகலாம்.
மேற்கு வங்கத்தில் –
40 வருடங்களாக கம்யூனிஸ்டுகளிடம்
அடி உதை வாங்கி அரசியல் நடத்திய காங்கிரஸ்
தொண்டர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
இருந்தும் என்ன பிரயோஜனம்.
அவர்கள் பெயர் அபிஜித் முகர்ஜி இல்லையே !
அவர்கள் அப்பன் பெயர் –
பிரனாப் முகர்ஜி இல்லையே !
(பி.கு. -முகரை, அப்பன் என்கிற வார்த்தைகள்
எல்லாம் திட்டல் தான் -ஆபாசம் அல்ல !
என்ன செய்வது – வர வர எரிச்சல் தாங்க
முடியவில்லை. அதனால் தான் கடுமையான
வார்த்தைகள்.)




கூட இருப்பது யாருங்னா? 10 விரல்லயும் மோதிரத்த போட்டுக்டு