கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும்,
நானும் தான் திமுக – தயாநிதி மாறன் !
ஸ்பெக்ட்ரம் விவகாரம் வந்தாலும் வந்தது.
ஏகப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள்
புகழ்பெற்று விட்டன.பல்வேறு வலைத்தளங்கள்
போட்டி போட்டுக்கொண்டு உரையாடல்களைத்
தருகின்றன.
இந்த உரையாடல்கள், டெல்லியில்
(power broker ) பதவித் தரகராகச்
செயல்படும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி
நீரா ராடியா என்பவருக்கும் அரசியல் மற்றும்
தொழில் துறையில் முக்கியத்துவம்
பெற்ற பல்வேறு நபர்களுக்கும் இடையே நிகழ்ந்தவை.
டெல்லி அரசியல் புரிந்தவர்களுக்கு
இதன் நம்பகத்தன்மையைப் பற்றி எந்த வித
சந்தேகமும் இல்லை.
இன்னுமொரு முக்கியமான விஷயம்,
இதில் முக்கியமாக சம்பந்தப்பட்ட நீரா ராடியா
இதுவரை இவற்றை மறுக்கவில்லை !
இவை எப்படி வெளியே வந்தன என்றால் –
நீரா ராடியாவின் வருமானம் குறித்த சில
சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள,
வருமான வரி – அமுலாக்கப்பிரிவு,
2009 ஆம் ஆண்டு மே மாதம் அவரது
தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து
வேவு பார்த்திருக்கிறது.
எங்கேயோ, எப்படியோ, தெரிந்தோ -தெரியாமலோ
இந்த உரையாடல்களின் பதிவு நகல்கள் வெளியாகி
விட்டன.
இதில் சம்பந்தப்பட்ட செய்திகள்
முக்கியமாகத் தமிழ் நாட்டு அரசியலை அடிப்படையாகக்
கொண்டிருப்பதால், வட இந்திய தொலைக்காட்சிகள்
இதில் அதிகம் அக்கரை காட்டவில்லை.
தமிழ் நாட்டில் பத்திரிகைகள்(ஒன்றிரண்டைத் தவிர)
மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள்
தொடை நடுங்கிகளாக இருக்கின்றன.
இவற்றைப் பற்றிப் பேசவே நடுங்குகின்றன.
தமிழ் வலைத்தளங்களைப் படிப்பவர்களுக்கு,
உரையாடல்கள் ஆங்கிலத்திலும் – இந்தியிலும்
இருப்பதாலும்,
சுவாரஸ்யமான விஷயங்களைத் தேட
மிக நீளமான
முழு உரையாடல்களையும் படிக்க வேண்டி
இருப்பதாலும் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே, அத்தகைய நண்பர்களின் நலம் கருதி –
முக்கியமான விஷயங்களை மட்டும் சுருக்கமாகக்
கொடுக்க முயற்சிக்கிறேன்.
இதில் என் கைவண்ணம் ஒன்றுமே இல்லை –
எல்லாம் வலையில் வந்திருப்பதன் சுருக்கம் தான் !
பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், திமுக தனக்கு
வேண்டிய அமைச்சகங்களை காங்கிரசிடம் பேரம் பேசி
பெற முயன்ற போது நடைபெற்ற முந்தல்கள், பேரங்கள்,
முட்டல்கள், மோதல்கள்
எல்லாம் இதில் அடங்கி இருக்கின்றன.
தமிழ் நாட்டின் முதல் குடும்பம் – கலைஞரின்
குடும்பம். அதன் உறுப்பினர்கள் எப்படியாவது மத்திய
மந்திரி பதவியைப் பெற்று விட வேண்டும் என்பதற்காக –
ஒருவரைப் பற்றி ஒருவர் எவ்வளவு கேவலமாகப்
பேசுகிறார்கள் என்பதை இந்த உரையாடல்கள்
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
3 அமைச்சகங்களை கொடுக்க காங்கிரஸ்
ஒப்புக் கொள்கிறது. டிஆர் பாலு, தயாநிதி மாறன்,
ராஜா, கனிமொழி, அழகிரி ஆகிய 5 பேர்கள்
களத்தில் இருக்கிறார்கள். கனிமொழி விலகிக்கொள்ளும்
சூழ்நிலை உருவாகிறது. மீதி 4 பேர் –
தேவை 3 பேர் மட்டுமே.
பாலுவை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.
எனவே இறுதியாக அழகிரி,தயாநிதி மாறன், ராஜா,
தேறுகிறார்கள்.அதன் பின்னர் தகவல் தொடர்பு
(ஸ்பெக்ட்ரம் புகழ் ) அமைச்சகத்தைப் பெற
தயாநிதிக்கும் ராஜாவுக்கும் போட்டி ஏற்படுகிறது.
எப்படியாவது தகவல் தொடர்பு அமைச்சகத்தை
ராஜாவிற்கு பெற்றுக் கொடுக்க
தொழிலதிபர்கள் சார்பில் நீரா ராடியாவும்,
தன் சார்பில் கனிமொழியும் போராடுகிறார்கள்.
அந்த போராட்டத்தின் ஊடே, கனிமொழி தயாநிதியை
பின்னுக்குத் தள்ளிவிட்டு ராஜாவை முன்னுக்குக் கொண்டு
வரும் முயற்சியில், தயாநிதிக்கு கட்சியிலேயே செல்வாக்கு
இல்லை. ஆனால் அவர் தானாகவே எல்லா இடத்திலும்
முந்திக்கொள்கிறார் என்கிறார்.
அப்போது வெளிவரும் செய்திகள் –
தயாநிதி காங்கிரஸ் தலைமையிடம்,
“பெரியவருக்கு(கலைஞருக்கு)
ரொம்ப வயதாகி விட்டது.
முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு
விட்டது.அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை.
ஆகையால் எதிர்காலத்தில்,ஸ்டாலினும் நானும்
(தயாநிதி மாறனும்) தான் கட்சியை (திமுக வை)
நடத்துவோம். (தமிழ் நாட்டில் ஸ்டாலினும்,
டெல்லியில் தயாநிதியும்)
எனவே காங்கிரஸ் என்னுடன் (தயாநிதி மாறனுடன்)
தொடர்பு வைத்துக்கொள்வதே சரியாக இருக்கும்”
–
என்றெல்லாம் கூறி இருக்கிறார்.
மேலும் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது.
5ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறார் என்றும்
அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கொடுப்பது
சரி வராது என்று கூறி இருக்கிறார்.
கனிமொழி தனக்கு மத்திய அமைச்சர் பதவி
கிடைக்கவும் முயற்சி செய்திருக்கிறார். விமான
போக்குவரத்து, சுகாதாரம் அல்லது சுற்றுலாத்
துறையைப் பெற முயற்சித்திருக்கிறார்.
நீரா ராடியாவிடம் பேசும்போது, தன் அன்னையிடம்
(ராஜாத்தி அம்மாளிடம்) இது பற்றி எல்லாம்
எதையும் பேச வேண்டாம் என்றும் அவர் குட்டையை
குழப்பி விடுவார் என்றும் கூறி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் போட்டியிலிருந்து
வெளியேற நேர்கிறது.
ராஜாவிற்கு எப்படியாவது தகவல் தொடர்பு
அமைச்சரவை கிடைத்தே ஆக வேண்டும் என்று
கனிமொழி மிகவும் முயற்சித்திருக்கிறார்.
ராஜா கனிமொழிக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைப்
பற்றி அவரே மற்றவர்களிடம்(டெல்லியில்)
கூறி இருக்கிறார்.
தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது
கலைஞருக்கு விருப்பமே. ஆனால் இதில்
மிகவும் ஈடுபாட்டோடு முயற்சி செய்தவர்கள்
ஸ்டாலினும், அவரது சகோதரி
செல்வியும் தான். இதற்கு முக்கிய காரணம்
தயாநிதி மாறன் தயாளு அம்மாளுக்கு
600 கோடி ரூபாய் கொடுத்தது தான்.
—————————-
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா ?
– தகவல் தொடர்பு துறையில் காணப்படும் நுணுக்கங்கள்
பிரமிக்க வைக்கின்றன. எப்போதோ, யாரோ பேசியதை-
அவர்களுக்கு எந்தவித சந்தேகமும் எழாதபடி பதிவு செய்து,
இப்போது இத்தனை பிரதிகள் எடுத்து,ஏகப்பட்ட கைமாறிய
பின்னரும் -இப்போது தான் பேசுவது போலவும், நாம்
அருகிலேயே அமர்ந்து கேட்பது போலவும் இருக்கிறது.
இந்த உரையாடல்களின் நம்பகத்தன்மையை
பற்றி எந்தவித சந்தேகமும் எழுவதில்லை.



வணக்கம்..
நம் மக்களில் 90 சதவிகிதத்தினர் கோடி என்பது என்ன என்று தெரியாதவர்கள்.எனவே 600 கோடி என்றால் ஓஹோ என்று சொல்லி மறந்துவிடுவார்.எனவே இதை புரியவைக்க இப்படி சொல்லவேண்டும்:
தயாளு அம்மாள் 600 கோடியை என்ன செய்யலாம்?
ஒரு நாளைக்கு ரூபா ஒரு லட்சம் செலவழிக்கலாம்.
ஐயோ அப்போ எல்லா ப் பணமும் சீக்கிரம் கரைந்து விடுமே!
ஆமாம் சுமார் 164 வருஷங்கள் இவ்வாறு செலவழித்தால் அவர் போண்டியாகி விடுவார்..
இப்போ எல்லாருக்கும் ஓரளவு புரியும்
இவ்வளவு பெரிய ஊழல் வெளிவரக்காரணமே நிதி-மொழி-தயா-கிரி-பாலு-ராசா என அனைவருமே மு.க.விற்கு பிறகு திமுக-வின், ஆட்சி,அதிகாரம்,கட்சி ஆகியவற்றை யார் கைபற்றுவது என்ற அதிகாரபோட்டிக்கான செயலாகவே உள்ளதை இந்த உரையாடல் தெள்ளதெளிவாக விளக்குகிறது