தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட
கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!
தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி,
கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி
ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில்
இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல்.
கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி
தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
வேறு வழிகளிலும் அவருக்கு வருமானம் வர
வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை !
எனவே அநேகமாக இது கலைஞர் தன் மகளின்
எதிர்கால பாதுகாப்பிற்காக செய்த ஏற்பாடாக
இருக்கலாம் !
அண்மையில் செம்மொழி உலகத் தமிழ் மாநாட்டில்,
திமுக தலைவர் ஒருவர் பேசும்போது தனக்கென்று
இருந்த ஒரே வீட்டைக்கூட தானம் செய்த – இருக்க
இடம் இல்லாத ஒரே தலைவர் -முதலமைச்சர்
கலைஞர் தான் என்று மிகக் கவலையுடன் சொன்னார்.
இப்போது வந்துள்ள தகவலின்படி, இந்த மகளுக்கு
செய்துள்ள ஏற்பாடு பற்றி தெரியவருகிறது.
எவ்வளவு பெரிய குடும்பம் ! குடும்பத்தில் உள்ள
மற்ற உறுப்பினர்களுக்கும் தகுந்த ஏற்பாடு –
பாதுகாப்பு செய்யாமலா இருந்திருப்பார் ?
பாவம் – தான் ஒருவர் திரைக்கதை வசனம் எழுதி
சம்பாதித்த பணத்தில் தான் அவருக்கு
எத்தனை எத்தனை பொறுப்புகளை
நிறைவேற்ற வேண்டி இருக்கிறது !




நிஜமான சாமியாரா இல்லை ….