இன்னுமோர் அட்டாக் பாண்டி ?
கலைஞருக்கே மிரட்டலா ?
கீழ்க்காணும் – தினமலரில் வெளிவந்துள்ள
விளம்பரத்தைப் பாருங்கள் –

ஜூனியர் விகடனில் வெளிவந்த -மதுரை
VIP க்களைப் பற்றிய – சில திரைமறைவு
நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுரையை கண்டித்து,
பயமுறுத்தி, வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்
தான் இது.
அந்த கட்டுரையை படிக்காதவர்களுக்கு
ஆவலாக இருக்கும் -அப்படி என்ன தான் எழுதி
இருந்தது அதில் – என்று.
கலைஞர் “ஆசியுடன்”
சில திருந்தாத தென் மாவட்டத்து
பிரமுகர்களுக்கு “கவனிப்பு”
நடந்ததாக செய்தி வெளியாகி இருந்தது !!
இப்போது சில கேள்விகள் –
1) “சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில்
பெரும் போராட்டம்” என்றால் என்ன அர்த்தம் ?
சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போம் என்று தானே ?
காவல் துறைக்கு பொறுப்பான கலைஞருக்கே
சவால் என்று தானே அர்த்தம் ?
2) உண்மையில் இந்த விளம்பரத்தின் நோக்கம்
யாரை பயமுறுத்துவது ? ஜுனியர் விகடனையா –
இல்லை கலைஞரையா ?
3) “தமிழ்நாடு இல்லத்துப் பிள்ளைமார் மாநில
சங்கம்” – இப்படி ஒரு சங்கத்தைப் பற்றி
இதற்கு முன்னால் யாராவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
4) ஜாதி சங்கம் என்று சொல்லிவிட்டு
அதென்ன “பெரியார் வழியில் ”
5)அதென்ன “நேதாஜியை நினைத்து”
6) கால் பக்க அளவிற்கு தினமலரின் எல்லா
பதிப்புகளிலும் பெரிய விளம்பரம்
அளிக்கவல்ல பெரிய பணவசதி உள்ள
சங்கமா இது ?
7) நேற்று காலை வந்த விளம்பரம் இது.
இன்று இரவு வரை கலைஞர் அலுவலகத்தில்
இருந்து எந்தவித ரீ-ஆக் ஷனையும் காணோம்.
என்ன காரணமோ ?
8)உடனுக்குடன் அதிரடி பதில் கொடுக்கும்
கலைஞர் ஏன் மௌனம் சாதிக்கிறார் ?
9) தினமலர் பத்திரிகைக்கு மானம், வெட்கம்,
சூடு, சொரணை,கொள்கை, கோட்பாடு –
என்று எதாவது ஒன்றாவது
இருந்தால் தன் சக பத்திரிகையை பயமுறுத்தும்
இத்தகைய விளம்பரத்தை வெளியிட
ஒப்புக்கொள்ளுமா ?
10) தமிழ் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?



நிஜமான சாமியாரா இல்லை ….