கலைஞர் காட்டிய வழி –
முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்
(அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !)

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி
ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு
தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய
விளம்பரங்கள் கொடுத்துள்ளது.
அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில –
1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள
குடும்பங்களின் எண்ணிக்கை (கவனிக்கவும் –
நபர்கள் அல்ல – குடும்பங்கள் ) – 1.44 கோடி
அதாவது 144 லட்சம் குடும்பங்கள்.
2) கடந்த ஒரு வருடத்தில் பயன் பெற்ற
நோயாளிகளின் (பயனாளிகளின்)
மொத்த எண்ணிக்கை – 1.53 லட்சம் பேர்
3)இதற்காக தமிழ் நாடு அரசு மேற்படி தனியார்
காப்பீட்டு நிறுவனத்திற்கு கடந்த
ஒரு வருடத்திற்கு
செலுத்தியுள்ள
தொகை – ரூபாய் 569.54 கோடி
4) காப்பீட்டு நிறுவனம் இந்த மருத்துவ
சிகித்சைக்காக கடந்த ஒரு ஆண்டில் செலவழித்துள்ள
தொகை மொத்தம் ரூபாய் 415.43 கோடி.
இந்த விவரங்களில் என் தலையீடு
எதுவுமே இல்லை –
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் அரசால்
வெளியிடப்பட்டுள்ளன.
அவர்கள் சாதனை என்று காட்ட வெளியிட்ட
புள்ளி விவரங்கள் தாம் நமக்கு வேதனையைத்
தருகின்றன.
மேற்படி விவரங்களிலிருந்து கூட்டி –
கழித்து பார்த்தால்(மன்னிக்கவும் கூட்ட வேண்டாம் –
கழித்தால் மட்டுமே போதுமானது !)
அரசாங்கம் சொல்லாமலே – நமக்கு
கிடைக்கும் மற்ற தகவல்கள் –
1) எந்தவித முதலும் போடாமல் காப்பீட்டு
நிறுவனம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும்
சம்பாதித்திருப்பது
(569.54 – 415.43 = )
154.11 கோடிகள் !!!!!!!
இதில் நிர்வாகச்செலவுகள் – மாதம் ஒரு கோடி
ரூபாய் என்றாலும் 12 மாதங்களுக்கு 12 கோடி
வேண்டுமானால் கழித்துக்கொள்ளலாம்.
அப்போதும் நிகர லாபம் 142.11 கோடிகள் !
2) உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டவர்களில்
(சுமார் ஒரு சதவீதம் பேர் ) சரியாகச்
சொன்னால் 1.16 % பேர் மட்டுமே பலன்
அடைந்திருக்கிறார்கள் !
3) இந்த காப்பீட்டு நிறுவனம் (வெளிநாட்டில்)
துபாயில் பதிவு செய்யப்பட்டு அதன் வியாபாரம்
தமிழ் நாட்டில் நடைபெறுகிறது.
4) வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்
இதனை நடத்துபவர்கள் திருச்சியைச் சேர்ந்த –
அந்தக்கால (மேகலா பிக்சர்ஸ்,க்ரெஸண்ட் மூவீஸ்
காலத்திய ) நண்பர்களின் குடும்பம் என்று
சொல்லப்படுகிறது.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை
ஊழல் திட்டம் என்று குறை
கூறுபவர்கள் நாசமாகப் போவார்கள் என்று
கலைஞர் நேற்று தான் கூறி இருக்கிறார்.
எனவே –
நமக்கேன் கலைஞரின் சாபம் ?
நான் குறை ஒன்றுமே சொல்லவில்லை –
அந்த விளம்பரத்திலேயே சொல்லாமல்
சொல்லப்பட்டு இருக்கும் சில
விவரங்களைக் வெளிப்படுத்திக் காட்டினேன் –
அவ்வளவு தான் !
யார் என்ன குறை சொன்னாலும்
இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள்
பலவற்றை கொண்டு வந்தே தீருவேன்
என்று கலைஞர் கூறுகிறார்.
இவை நல்வாழ்வுத்திட்டங்கள் தான்
என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை !
யாருடைய நல்வாழ்வு என்பது தான் கேள்வி !!



நிஜமான சாமியாரா இல்லை ….