தினமலரின் பிதற்றல்….

தினமலரின் பிதற்றல்….

“தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு”
என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது
இன்றைய இதழிலேயே  இரண்டு இடங்களில்
பெரிய அளவில் அதன் முதலாளிகள்
பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை
பிரசுரித்திருக்கிறது.

புகைப்படங்கள்  உங்கள்  பார்வைக்கு –

“உனக்கென்ன கோபம் இதிலே ?”
என்று நீங்கள் கேட்கலாம்.

என் கோபத்திற்கான காரணங்களில் சில –

1) பரிசு கொடுக்கப்பட்டது அவர்கள் தலைப்பில்
கூறி இருப்பது போல் -இந்த கீழ்த்தரமான
பத்திரிக்கையின் – தேசபக்தி,
நேர்மை, …… மை
போன்றவற்றிற்காக அல்ல.
………..

2) மிக அதிக அளவு வருமான வரி செலுத்திய
குடும்ப நிறுவனம் என்பதற்காக மட்டுமே.

3) வருமான வரியை ஒழுங்காகக் கட்டுவது
மட்டும் தேசபக்திக்கும், நேர்மைக்கும்
அத்தாட்சியாகி விடாது.

4)இந்த அளவு வருமானம் இருந்தால்,
இன்ன அளவிற்கு வரி கட்ட வேண்டும் என்பது
நாட்டில் பொதுவாக அனைவருக்கும் உள்ள சட்டம்.

5)சட்டத்தை மீறுவோர்க்கு அபராதமோ,
சிறைத்தண்டனையோ – அல்லது இரண்டுமோ
விதிக்கப்படும். இதையும் அதே வருமான வரி
சட்டம் கூறுகின்றது.

6)வரி செலுத்துவோர் அனைவரும் சட்டத்திற்கு
பயந்து தான்,
அதுவும் திட்டிக்கொண்டே தான்
விதிக்கப்பட்டுள்ள  வரியைச் செலுத்துகின்றனர்.
தேசபக்தி மற்றும்  நேர்மையின்
உந்துதலால் அல்ல.(
இது எனக்கும் பொருந்தும்)

7)ஒழுங்காக வரி கட்டுவோர் அனைவருக்கும்
பரிசு கொடுக்க வேண்டும் என்றால் முதலில்
மாதச் சம்பளம் பெரும் அனவருக்கும்
பரிசு கொடுக்க வேண்டும். ஏனென்றால்
அவர்கள் அந்தந்த மாதத்திய சம்பளத்தை
பெரும் முன்னரே
அவர்களிடமிருந்து வரியைப் பிடித்தம் செய்துக்
கொண்டு மீதியைத் தான் சம்பளமாகக்
கொடுக்கிறார்கள்.

8)தமிழ் நாட்டில் வருமான வரி கட்டும்

36 லட்சம் பேரில், மாதச் சம்பளம் பெருவோர்
மட்டுமே 11 லட்சம் பேர்.

9) எனவே தினமலருக்கு கொடுக்கப்பட்டது
நேர்மைக்காகவோ, தேசப்பற்றிற்காகவோ
அல்ல – தமிழ் நாட்டிலேயே மிக அதிகமாக
வருமான வரி கட்டியதற்காகத் தான்.

10)  தினமலர் முதலாளிகள்  இந்தச்செய்தியை
போட்டதற்கு பதிலாக,  தமிழ் நாட்டிலேயே
(பத்திரிக்கை மூலம்)
அதிகம் சம்பாதிக்கும் குடும்ப நிறுவனம்
தங்களது தான் என்பதைச் சொல்லி விட்டு –

தங்களது கடந்த வருடத்திய
“மொத்த  வருமானம்” எவ்வளவு
என்பதையும், தாங்கள் கட்டிய
மொத்த வருட வருமான வரி
எவ்வளவு என்பதையும் வெளியிட்டால்-

தமிழ் மக்கள்  அவர்களை சரியாக “எடை”
போட முடியும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to தினமலரின் பிதற்றல்….

  1. ஒருவன்'s avatar ஒருவன் சொல்கிறார்:

    //வருமான வரியை ஒழுங்காகக் கட்டுவது
    மட்டும் தேசபக்திக்கும், நேர்மைக்கும்
    அத்தாட்சியாகி விடாது.

    4)இந்த அளவு வருமானம் இருந்தால்,
    இன்ன அளவிற்கு வரி கட்ட வேண்டும் என்பது
    நாட்டில் பொதுவாக அனைவருக்கும் உள்ள சட்டம்.//

    மிகச் சரியான கருத்து. கடமையை செய்வதே இங்கே பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு விஷயமாக மாறி விட்டிருப்பது கவலைக்குரியது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுபவர்களை தவிர, மற்ற எந்த தொழில்துறையினரும் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டுவதில்லை என்பதே அனைவரும் அறிந்த உண்மை.

  2. க. சுரேந்திரன்'s avatar Surendran சொல்கிறார்:

    நடிகர்கள்தான் இப்படி சுயதம்பட்டம் அடிச்சுப்பாங்க.. இப்ப பத்திரிக்காரங்களும் கூட சேந்துகிட்டாங்க..

    நாடு உருப்பட்டாப்போலத்தான்…

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.சரியான வரியை சரியான நேரத்தில் செலுத்துவது இப்பொழுது நாடு உள்ள நிலைமையில் ஒரு நேர்மையும்,தேசபக்தியும், இணைந்த செயல் என்பதில் ஐயம இல்லை.எனக்கு உள்ள வியப்பு,தினமலரை விட அதிகம் விற்பனையாகும் ஹிந்து,தந்தி போன்ற நிறுவனகள் இதை விட குறைவாக எப்படி வரி செலுத்துகின்றனர் என்பதே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.