கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது
குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை
அழைக்காதது குறித்தும்….
யார் என்ன குறை சொன்னாலும்
டாண் டாண் என்று
உடனடியாக பதில் சொல்லும் கலைஞர்
இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும்
வாயே திறக்க மாட்டேன் என்கிறார்.
தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை
குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து
இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல்
மௌனம் சாதிக்கின்றார்.

முதலமைச்சராகவும், காவல் துறை
பொறுப்பிலும் இருக்கும் அவர் இது குறித்து
மௌனம் சாதிப்பது நன்றாகவே இல்லை.
ஏன் இந்த தயக்கம் ? கீழே காணும்
காரணங்களில்
ஏதேனும் ஒன்றை ‘டிக்’ செய்து விட்டால்
தீர்ந்தது பொறுப்பு.
1) பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும்
என்பதற்காக கருப்பையா தன்னைத் தானே
அடித்துக்கொண்டு விட்டார்.
2) தன்னைவிட அதிகமாக கலைஞரைத்
திட்டிப்பேசி புகழ் பெறப்பார்ப்பதால்,
‘அம்மா’வே ஆட்களை
அனுப்பி அடித்து விட்டார்.
3) அரசியலில் இவ்வளவு ஆண்டுகளாக
இருந்தும், அஞ்சு காசு சம்பாதிக்க
வக்கில்லாமல் இருப்பதால்,
அவரது மனைவியே அடித்து விட்டார்.
4) அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை.
இது ‘துக்ளக் சோ’வின் அடுத்த நாடகத்தில்
வரும் ஒரு காட்சி !
இவற்றைத்தவிர வேறு எதுவும்
பொருத்தமான காரணங்கள் உங்கள்
யாருக்காவது தோன்றினால், அதனை
இதன் மறுமொழியாகத் தெரிவித்தால்,
தேர்ந்தெடுக்க கலைஞருக்கு
மிக்க உதவியாக இருக்கும் !
அடுத்த விஷயம் – முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்தும் கலாம் அவர்களை
உ.த.செ. மாநாட்டிற்கு அழைக்காதது பற்றி –

சிறந்த தமிழறிஞரும், உலகப்புகழ் பெற்ற
விஞ்ஞானியும் இஸ்லாமிய சமுதாயத்தை
சேர்ந்தவருமான அப்தும் கலாம் அவர்களை
குடியரசுத்தலைவர் தேர்தலின்போது
அன்னை சோனியாவின் அறிவுருத்தலின்படி
தோற்கடிக்க நேர்ந்த அவலத்தை காலத்தின்
கட்டாயம் என்றெண்ணி அவரே இந்நேரம்
மறந்திருந்தாலும் –
அவரையும், தன்னையும், தற்போதைய
குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல்
அவர்களையும் ஒரே மேடையில்
ஒன்று சேரப்பார்க்கும்
தமிழக மக்களுக்கு –
மறந்து போன, வேண்டாத
விஷயங்களை எல்லாம் அந்தக் காட்சி
அநாவசியமாக நினைவுறுத்துமே என்கிற
உண்மைக் காரணத்தை சொல்ல முடியாது
தான் என்றாலும்,
யோசித்தால் – காரணமா கிடைக்காது ?
பதிலே கூறாமல் இருப்பது கலைஞருக்கு
பொருந்தவில்லையே !



நிஜமான சாமியாரா இல்லை ….