பெட்ரோல் விலை – மறைக்கப்படும்
உண்மைகள் -ஏமாற்றப்படும் மக்கள் !
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை
ஏற்றுவதற்காக மத்திய மற்றும் மாநில
அரசுகள் பல உண்மைகளை மக்களிடமிருந்து
மறைக்கின்றன.
ஏதோ சரவதேச சந்தையில் ஏற்பட்ட விலை
ஏற்றத்தை ஈடுகட்டுவதற்காகவே விலை
ஏற்றப்படுவதாக நாடகமாடுகிறது அரசு.
நம் நாட்டின் தேவையில் சுமார் 70 சதவீதம்
இறக்குமதி செய்வதாகவே வைத்துக்கொள்வோம்.
மீதி 30 சதவீதம் உள்நாட்டிலேயே தான்
உற்பத்தியாகிறது. இறக்குமதி செய்யப்படும்
70 சதவீத பொருளுக்கு விலையேற்றம்
செய்யும்போது
செயற்கையாக
உள்நாட்டு உற்பத்தியான
30 சதவீதத்திற்கும் அதிக விலை
கிடைக்கிறது. இது வெளியே தெரியாத உபரி
வருமானம்.(இதில் ஒரு பகுதி ரிலயன்ஸ்
போன்ற தனியார் எண்ணை நிறுவனங்களுக்கும்
போகிறது – அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு
வெளியே தெரியாத வருமானப் பங்கு
எவ்வளவு என்பது நம்மால் அறிய முடியாத
விஷயம் )
தவிர பெட்ரோலின் விலை ஒரு ரூபாய்
என்று வைத்துக்கொண்டால் –
அதில் சுமார் 51 பைசா தான்
இறக்குமதி செய்யப்படும் எண்ணையின் விலை.
மீதி 49 பைசா மத்திய மற்றும் மாநில
அரசுகளின் எக்சைஸ்,சுங்க, விற்பனை
வரிகள்.
எனவே ஒவ்வொரு முறை பெட்ரோல்
விலை ஏற்றத்தின்போதும்,
வரிகளின் சதவீதமும் கூடுகிறது.
– உதாரணமாக பெட்ரோலின் விலை
ஒரு ரூபாய் ஏறினால் – அதில் அரசுக்கு
கூடுதல் வரியாக கிடைக்கும்
வருமானம் 49 பைசா.
இப்படி ஒவ்வொரு ரூபாய்க்கும்
இதே சதவீதத்தில் கணக்குப் போட்டுக்
கொண்டால் –
அரசின் வரி விகிதம் மட்டுமே எவ்வளவு
கூடும் என்பது தெரியும்.
பெட்ரோலிய பொருட்களின் விலை
தொடர்பான சில அதிகாரபூர்வமான
தகவல்களையும், கிராபிக்ஸ் களையும்
கீழே தந்திருக்கிறேன். இவைகளை
ஆழ்ந்து படித்தால் – பல உண்மைகள்
தெரிய வரும் !
1) contribution by oil companies( graphics)
எண்ணை நிறுவனங்களிடமிருந்து நடப்பு ஆண்டில்
மட்டும் அரசுக்கு கிடைக்கும் வருமானம் –
சுமார் 1,86,000 கோடி ரூபாய் !
2) retail price comparison with neighbouring countries(graphics)
பக்கத்து நாடுகளில் பெட்ரோலின் விலை
ஒப்பீட்டுக்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்ற எல்லா நாடுகளின் விலையும்
ரூபாய் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. (டாலர் கணக்கில்
கொடுத்தால் தான் ஒப்பீடு செய்ய முடியும் )
நான் டாலர் மதிப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.
(04.06.2010 அன்றைய மதிப்பின்படி )
அதை வைத்து ஒப்பீடு செய்து பார்க்கவும்.
மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவில்
விலை அதிகம் என்பது அப்போது புரியும்.
இந்தியா -ரூ.51.43 – டாலர் மதிப்பு -46.72
பாகிஸ்தான் – ரூ.36.41 —– 85.38
பங்களா தேசம் – ரூ.49.72 —–69.53
இலங்கை – ரூ.47.24 ————113.74
நேபாளம் – ரூ.51.36 ————-74.59
3) petrol price components at delhi(graphics)
வரிக்கு முந்திய எண்ணையின் விலை – 51.23 %
மத்திய அரசின் வரிகள் – 32.10%
மாநில அரசின் வரிகள் -16.67 %
இப்படி முனைந்து முனைந்து மக்களை ஏமாற்றும்
அரசிடமிருந்து நாம் எந்த நல்லெண்ண நடவடிக்கைகளை
எதிர்பார்க்க முடியும் ?



முதற்கண் நன்றி!
ஆனால் மன்னிக்கவும்.நாம் இருப்பது ஜனநாயக நாடு.இதில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கும் உரிமையை தவிர நமக்கு வேறு எந்த உரிமையும் கிடையாது.
ஒரு கொள்ளைக்காரனிடமிருந்து ஆட்சியை பிடுங்கி இன்னொரு கொள்ளைக்காரனிடம் ஒப்படைக்கலாம்.
அதைத்தான் 40 ஆண்டுகளாக செவ்வனே செய்து வருகிறோம்.இன்னும்பல ஆண்டுகளுக்கு தொடருவோம்.
நமக்குத்தேவையான தலைவன் இன்னும் பிறக்கவேயில்லை
வீணாக நேரத்தை செலவழிக்காமல் தலைவிதியை நொந்துகொண்டு பயணத்தை தொடர்வோம்
நாட்டிற்குத் தேவையான படைப்பு.
பொருப்புமிக்கவரின் மிக நல்ல படைப்பு.
ஆனால் இந்த பொருப்பு நாம் ஆட்காட்டி விரலால் தேர்ந்து எடுக்கப்டும் ஆட்கள் நமக்கு ஏதாவது நல்லது செய்வார்களா என்று பார்த்து வாக்களித்துடும் நாள் வருமா?
என்னமோ நம் தலையெழுத்தை நாம் தானே தீர்மானிக்கின்றோம்???
எங்கு சென்று முறையிட?