“ராஜபக்சே ஒரு இன வெறியன்”
லீ குவான் யூ விற்கு தெரிந்தது
நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ
தெரியவில்லையே !!

“லீ குவான் யுடனான உரையாடல்கள்”
-என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள
ஒரு புத்தகத்தில் சிங்கப்பூரின்
முதல் பிரதமரும், தற்போதைய
பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு
அவர்கள் தெரிவித்துள்ள சில
கருத்துக்கள் –
“இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு
சிங்களத் தீவிரவாதி. அவரது மனதை
மாற்றவோ அவரை
திருத்தவோ முடியாது”.
” இலங்கை மகிழ்ச்சியான நாடாக
இருக்க முடியாது. இலங்கையில்
சிங்களர்கள் எப்போது முதல்
இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே
தமிழர்களும் இருக்கின்றனர்.”
“தமிழர்களும் சிங்களர்களும்
இணைந்து வாழ்வதற்கான சூழல்
இலங்கையில்இல்லை”.
“இலங்கை ஒரே நாடாக இருக்கும்
வரை மகிழ்ச்சியான நாடாக
இருக்க முடியாது”.
“இலங்கையில் தமிழர்களுக்காகப்
போராடி வந்த விடு தலைப் புலிகள்
வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம்
இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு
காணப்பட்டுவிட்டது என்று இலங்கை
அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார்.
இதை மற்றவர்களும் நம்ப வேண்டும்
என்று எதிர்பார்க்கிறார். ஆனால்,
தமிழர்கள் அடங்கிக் கிடக்கமாட்டார்கள்
சிங்களர்களுக்குப் பயந்து
ஓடிவிடவும் மாட்டார்கள்.”
தமிழீழம் அமைவது ஒன்றே
இந்தப் பிரச்சினை தீர்வதற்கு
ஒரே வழி என்று தெள்ளத்தெளிவாக
புரிந்து வைத்திருக்கும், வெளிப்படையாக
சொல்லியும் இருக்கும் –
சிஙப்பூரின் மூத்த தலைவரின்
நுண்ணறிவோ, துணிச்சலோ,
கொலைகார ராஜபட்சேவிற்கு
சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க
காத்திருக்கும் மத்திய அரசுக்கோ,
அதைத் தாங்கிப் பிடித்துக்
கொண்டிருக்கும் கலைஞருக்கோ
இல்லையே !



lee pool oru thalaivar tamil nadu ikku thavai
vetti manadu ippothu thevai illai pure air , good work, full current , ellorukkum veedu . kandippa ethaiyum thamilarukku viddu kodukkum manathu vandum