— இந்தியாவின் கடைசி சுல்தான் …. !!!

………………………………………………….

………………………………………………..

……………………………………………

1775ம் ஆண்டு முதல் டெல்லி முகலாய சுல்தான்கள் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டார்கள்.

ஆண்டுக்கு ரூ 95,000 பென்ஷன் வழங்கபட்டது. அது அப்போது பெரும் தொகை. ரூ. 2500 இருந்தால் ஒரு யானையை வாங்கிவிடலாம். படைகள், கோட்டையை மெய்ண்டெய்ன் செய்ய அந்த தொகை வழங்கப்பட்டது.

வயதான கடைசி சுல்தான் பகதூர் ஷா பெயரளவுக்கு ஆட்சியில் இருந்தார்.

1857ம் ஆண்டு சிப்பாய் கலகம் மூண்டது. சிப்பாய்கள் படை டெல்லிக்கு வந்தது. அவரை மன்னராக ஏற்பதாக சொன்னார்கள். அவரும் ஒப்புக்கொண்டார். அதன்பின் டெல்லியில் இருந்த ஐரோப்பியர் அனைவரும் பிடிக்கபட்டார்கள்.

சிப்பாய்கள் நீட்டிய இடத்தில் மன்னர் கையெழுத்து போட்டார். பிடிப்பட்ட ஐரோப்பியர் அனைவரும் படுகொலை செய்யப்பட, அதற்கான ஆவணங்கள் அனைத்திலும் பகதூர்ஷா கையெழுத்து இருந்தது.

ஆனால், மீண்டும் – கொலைவெறியுடன் டெல்லியை முற்றுகையிட்டு பிடித்தார்கள் ப்ரிட்டிஷார்.

தன் முன்னோரான ஹுமாயூன் கல்லறையில் அடைக்கலம் புகுந்தார் பகதூர்ஷா.

அவருக்கு மரணதண்டனை விதிக்கமாட்டோம் என உறுதிமொழி கொடுத்து சரணடைய வைத்தார் மேஜர் ஹட்சன்.

ஆனால் ஐரோப்பியர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க மன்னரின் மூன்று மகன்களையும், பேரன்களையும் சுட்டு கொன்றார் ஹட்சன். எந்த விசாரணையும் இல்லை.

அதன்பின் மாட்டு வண்டியில் ஏற்றி பர்மாவுக்கு – பல்லாயிரம் மைல்கள் கைதியாக கொண்டு செல்லபட்டார் மன்னர் பகதூர் ஷா .

250 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முகலாய சாம்ராஜ்ஜியம் இப்படியாக முடிவுக்கு வந்தது. அவரது கல்லறை இன்றும் பர்மாவில் உள்ளது.

டெல்லி வீழ்ந்த பிறகு, 1858 மார்ச் மாதம் லக்னோவில் இருந்த ‘பேகம் கோதி’ (Begum Kothi) என்ற இடத்தை பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டன.

அப்போது ஹட்சன், அங்கிருந்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காக ஒரு அறைக்குள் நுழைய முயன்றபோது, அங்கு மறைந்திருந்த ஒரு இந்திய சிப்பாயால் மிக நெருக்கத்திலிருந்து சுடப்பட்டார். குண்டு அவரது கல்லீரலைப் பதம் பார்த்தது.

அடுத்த நாள் ஹட்சன் உயிரிழந்தார்…. !!!

உயிரோடு இருந்தவரை பிரிட்டன் நாடாளுமன்றமும், அந்நாட்டு ஊடகங்களும் ஹட்சனை ஒரு “பெரும் வீரன்” (Hero of Delhi) என்று கொண்டாடின.

ஆனால் அவர் இறந்த பிறகு, அவர் முகலாய இளவரசர்களை விசாரணையின்றி கொடூரமாகக் கொன்றதும் (Khooni Darwaza படுகொலை), சக பிரிட்டிஷ் அதிகாரிகளை ஏமாற்றி ஊழல் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹட்சன் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதால், அவர் இறக்கும் போது வெறும் 170 பவுண்டுகள் மட்டுமே மிஞ்சியிருந்தது.

அவரது மனைவி பிரிட்டன் திரும்பக் கூட பணமில்லாமல் தவித்தார். எனினும், அவர் டெல்லியைக் கைப்பற்றிக் கொடுத்தவர் என்பதால், விக்டோரியா மகாராணி (Queen Victoria) அவரது மனைவிக்கு லண்டன் ‘ஹாம்டன் கோர்ட்’ அரண்மனையில் தங்க இடமும், சிறப்பு ஓய்வூதியமும் வழங்கினார்.

முகலாய வம்சத்தின் கடைசி வாரிசுகளான பகதூர் ஷாவின் மூன்று மகன்களையும், பேரன்களையும் எவ்வித விசாரணையுமின்றி சுட்டுக் கொன்று அந்த வம்சத்தை அறுத்த ஹட்சனுக்கு,

தன் பெயரைச் சொல்லக்கூட இன்று உலகில் நேரடி வாரிசு எவரும் இல்லை என்பது வரலாற்றின் மற்றொரு விசித்திரமான நீதி …(Poetic Justice)! ( நன்றி – wiki & நியாண்டர் செல்வன் ….)

……………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக