மோகன்லாலின் “நகுமோமு “….

……………………………………………

……………………………………………..

திரைப்படங்களில் வரும், ராகங்களை அடிப்படையாகக் கொண்ட
கிளாஸிகல் பாடல்கள் என்றால்
என்றைக்குமே எனக்கு பிடிக்கும்….. தமிழில் அந்தக்கால
திரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய பாடல்கள் உண்டு….

ஆனால், இன்று ரசனையெல்லாம் முற்றிலுமாக மாறி விட்டது…
(படம் பார்ப்பவர்களைத்தான் சொல்கிறேன் … !!!)

இன்று அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வந்தால் படம் படுத்து விடும்.ரொம்ப ஸ்லோ என்று விமரிசனம் வந்து விடும். படம் எடுத்தவர் அடுத்த படம் எடுக்க இருக்க மாட்டார்….

இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது, சில பழைய
மலையாளப் படங்களின் நினைவு வந்தது…. முக்கியமாக சில
மோகன்லால் படங்கள்…. மோகன்லால் இத்தகைய படங்களை நிறையவே ஊக்குவித்திருக்கிறார்…… முதலில் என் நினைவிற்கு வந்தது இந்தப்பாடல் தான்…….

கேட்டு – பாருங்களேன்…. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்….

……………………………………………..

பின் குறிப்பு- இதில் தோன்றுபவர்கள், மோகன் லாலுடன், பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர்….படம் ‘சித்திரம்’

தியாகராஜரின் கீர்த்தனைகளில் புகழ்பெற்ற ஒன்றான இதற்கு திரையிசை அமைத்தவர் கண்ணூர் ராஜன்.

பாடியவர்களின் பெயரைக் கேட்டால் திகைப்பீர்கள்…. காரணம் நீங்கள் எதிர்பார்த்த பெயராக இருக்காது….. இதற்கு முன் நாம் கேள்விப்படாத பெயர்கள் – நெய்யாத்தின் கரா -வாசுதேவன் மற்றும் ஜி.ஸ்ரீகுமார் ….!!!

………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மோகன்லாலின் “நகுமோமு “….

  1. Ganapathi Subramanian's avatar Ganapathi Subramanian சொல்கிறார்:

    நெய்யாற்றின் கரை‌ வாசுதேவன் ஓரளவு பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான். G. ஸ்ரீ குமாரும் கூட பிரபலமான பாடகர். குறிப்பாக, கர்நாடக சங்கீத/ classical music based songs பாடுவதில் வல்லவர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Ganapathi Subramanian,

      நன்றி கணபதி சுப்ரமணியன்….இரண்டு பேருமே மிக நன்றாக பாடி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை……

      நான் ” திகைத்து போவீர்கள் ” என்று எழுதியதன் காரணம் தமிழ் ரசிகர்களுக்கு அவர்கள் பரிச்சயம் இல்லாதவர்கள் என்பதால் தான்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.