லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் வாங்கிய 1,368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் … யார், யாருக்கு போனதோ …???

………………………………………………

…………………………………………………

புதுடெல்லி: கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின்
ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில்
ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019
முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இந்த சூழலில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அவர்
நிர்வாக இயக்குனராக உள்ளார்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று
பணம் ஈட்டியதாக மார்ட்டின் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர்
அவருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் சோதனை மேற்கொண்டு கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட அசையும் மற்றும்
அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது.

கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் அவருக்கு தொடர்புடைய இடங்களில்
அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு ரூ.456.86 கோடி சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

.

source –
https://www.hindutamil.in/news/india/1215318-lottery-martin-s-firm-purchased-electoral-bonds-worth-rs-1368-crore-1.html

.
…………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.