” அத்தான்- தயவுசெஞ்சு ஊழல் பண்ணாதீங்க …அப்புறம் என்னையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவாங்க ….” ஓவ்வொரு மந்திரி மனைவியும் கெஞ்ச வேண்டிய நிலை….!!!

…………………………………………….

…………………………………………………

  • ஒரு சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே,
    இன்னுமொரு சொத்து குவிப்பு வழக்கு போடும் அளவுக்கா
    கொள்ளை அடிப்பீங்க …? எதுக்கும் ஒரு அளவே இல்லையா…???
  • நீதிபதியை மாற்றி, நீதிமன்றத்தை மாற்றி – எத்தனை முறை
    தப்பிக்க முடியும் …?
  • சனாதனம், மதவெறி என்றெல்லாம் சொல்லி எத்தனை நாட்கள்
    மக்களை திசை திருப்புவீர்கள்….???
  • உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் –
    தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சேயாகணும்….

கடுங்கோபம் …. “இந்த திருடர்களைப் போய் இத்தனை நாட்களாக
ஆதரித்தோமே” – என்கிற எரிச்சலில், கோபத்தில் – கொட்டுகிறார்
வார்த்தைகளை ஜர்னலிஸ்ட் மணி.

அவசியம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி –

……………………………….

.

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ” அத்தான்- தயவுசெஞ்சு ஊழல் பண்ணாதீங்க …அப்புறம் என்னையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவாங்க ….” ஓவ்வொரு மந்திரி மனைவியும் கெஞ்ச வேண்டிய நிலை….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மணி என்பவர் யார்? ஒன்றும் அறியாத, எதுவுமே தெரியாத, கண் இல்லாத குழந்தையா? திமுக மற்றும் அதனை தலைமை+அமைச்சர்கள் மீதான ஊழல் கறை விஞ்ஞான முறை ஊழல் காலத்திலிருந்தே இருக்கிறது என்பது தெரியாதா? இந்த வழக்கில் பொன்முடிக்குத் தண்டனை தரும்போதுதான் தெரியுமா? முன்னாள் திமுக மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தபிறகும் (2ஜி, பிஎஸ்.என்.எல், நெடுஞ்சாலை, சேதுசமுத்திர மணல் அள்ளியது…. ஏன் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கே இவர் சொல்லும் அந்தப் பத்தாண்டில் நடந்ததுதான்) இவர் திமுகவை ஆதரித்தது எதற்காக? அண்ணாமலை, இப்போதுள்ளவர்கள் மீது சொத்துக்குவியல் பட்டியலை வாசித்தபோது மணி அதனை எள்ளிநகையாடினாரா இல்லையா?

    இப்போது அதுவும் அவர் வீட்டில் வெள்ளம் வந்த பிறகுதான், திமுகவின் மீது கோபம் லேசாக எட்டிப்பார்க்கிறதா?

    இப்படி தங்களிஷ்டப்படி செய்திகளைத் திரித்துக் கருத்துக் கூறுவது, தங்கள் சுயநலனுக்காக மக்களை ஏமாற்றுவதுதான் ‘பத்திரிகையாளர்’ என்று சொல்லிக்கொள்பவருடைய குணநலனா? அவர்கள் அரசியலில் இருந்து ஊழல் செய்கிறார்கள்/செய்தார்கள். இவர் பத்திரிகைத் துறையில் இருந்துகொண்டு ஊழல் செய்கிறார். அவ்ளோதான் விஷயம்.

    நாளைக்கே, வரவேண்டியது வந்துவிட்டால், பாசிசம், பாஜக தமிழகத்தில் வந்துவிடும், சிறுபான்மையினருக்கு ஆபத்து என்று அடுத்த பிடிலை இவர் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்.

    இந்தக் காணொளி சொல்லும் செய்தி, ‘தலை உடையும் அளவு முட்டுக் கொடுத்த இவரைப் போன்ற ஜால்ராக்களே’ திமுக மீது வெளிப்படையாகக் குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், இவர்கள் சொல்வதைவிடப் பல மடங்கு உண்மை நிலவரம் இருக்கும் என்பதுதான்.

  2. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    இதுவும் மறந்து போகும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.