………………………………….

……………………………………
மணல் குவாரி- 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை
சம்மன் அனுப்புவதா…? தமிழ்நாடு அரசு அதிரடி வழக்கு…!
……………………….
November 24, 2023, சென்னை: மணல் குவாரி விவகாரங்களில்
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
மணல் எடுப்பது என்பது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எனும் அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் வராது; அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது என சென்னை உயர்நீதி
மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு அரசு குற்றம்
சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும்,
மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி ஒரே
நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த
தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின்
உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர்
திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா
ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள
நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அதிரடி
சோதனை நடத்தினர்.
இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி
அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும்
நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத
பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி
அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர்
முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்
சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்த பின்னணியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை
எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகார
வரம்பு இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும்
நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
…………………………………………………………………….………..
கீழே – தமிழ் இணைய பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் ஒரு
பாட திட்டத்தின் கதை –
……………………………………….
” எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை… “
‘எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’ இந்தப்
பழமொழியின் நேர் பொருள் தெளிவாக உள்ளது. தேவையில்லாமல்
ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும். இப்பழமொழிக்குப் பின்னால்
உள்ள கதை வருமாறு.
“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை
தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர
ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து கொள்வார்.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை – நெல் கொட்டப் பயன்படும் அமைப்பு)
உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால்
‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.
கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான்.
வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டார்.

உடனே மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான்.
வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல்
குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே
என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
.
…………………………………………………………………………………………….……………………



காவிரி மைந்தன் சார்…உங்களுக்கென்ன… உங்கள் கழுத்துக்கா கத்தி வந்திருக்கிறது? அதனால் கவலை இல்லாமல் எழுதிடறீங்க.
கட்சியின் பொதுச்செயலாளரே காராக்கிருஹத்துக்குப் போகப்போகிறார் என்று யூடியூபில் ஏகப்பட்டபேர் ஆருடம் சொல்லிக்கிட்டிருக்காங்க.
வாங்கின லஞ்சத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டாயா? ஆஹா நல்ல மனுசன்யா நீர். உங்கமேல ஒரு குற்றமும் கிடையாது. நீங்க நல்ல குடிமகன். போய்ட்டு வாங்க. போய் அமைச்சரா பதவியேத்துக்கோங்க.. என்று ஒரு நீதி அரசர் தீர்ப்பு சொன்னாரே.
தன்னுடைய நீதிமன்றத்துக்கு பொன்முடி மற்றும் அவர் மனைவியின் வழக்கு வந்தவுடன். இரண்டொரு நாட்களில் நூற்றுக்கணக்கான சாட்சிகளை நிதானமாக முழுமையாக விசாரித்து, பொன்முடி வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக எனக்குத் தெரியவில்லை, அவர் உத்தமர் (Buy 1 Get 1 என்று இன்னொரு அமைச்சரையும் விடுதலை செய்து) என்றுதான் நான் கருதுகிறேன். நாட்டுல பொறாமை பிடித்தவங்க ஜாஸ்தியாகிவிட்டது. நல்லவங்களையெல்லாம் கோர்ட்டுக்கு இழுத்துவிடுகிறார்கள் (என்றெல்லாம் நல்லவேளை தீர்ப்புல எழுதலை) என்று சொல்லும்படியாக அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஓய்வெடுக்கப் போன நீதிபதி தமிழகத்துலதான் இருந்தாங்க.
இப்படி யாராவது கிடைக்கமாட்டாங்களா? அதனால்தான் புதுமையான வழக்கை போட்டிருக்காங்க. ஒருவேளை ‘ஆனந்த் வெங்கடேஷ்’ போன்றவர்களின் கையில் இந்த மாதிரி வழக்கு போச்சுன்னா, பிறகு இந்த வழக்கையே உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வாங்க. உச்சநீதிமன்றமே, நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் போன்றவர்கள் அபூர்வம் கடவுளுக்குச் சமானம் என்று கருத்துத் தெரிவித்திருப்பதால், கடவுள்களே அபூர்வம் என்பது இவர்களின் அனுமானம் போலத் தெரிகிறதே.