…………………………………

…………………………………
சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும்
ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
Article 17 விதியின்படி, அரசியல் சட்டம்
ஏற்கெனவே தீண்டாமையை ஒழித்து விட்டது…..
நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.
அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில்
மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.
ஆனால், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,
தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும்.
இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா?
குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா?
நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா?
பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?
……………..
நேற்று அளிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் விவரம் –
சனாதனம் என்பது பல்வேறு கடமைகளை உள்ளடக்கிய தொகுப்பு:
ஐகோர்ட்டு நீதிபதி கருத்து – 16 செப்டம்பர் 2023
……………….
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில்
சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு
விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப்
பெறப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி
சேஷசாயி கூறியதாவது:-
சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,
தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை
உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும்.
இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா?
குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா?
நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா?
பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?
சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக
ஒரு கருத்து நிலவுகிறது.
நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.
அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.
மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல்
புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களை எடுக்க வேண்டுமே தவிர,
அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்.
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை
கல்லூரி ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின்
அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள
வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே செய்தி ஆங்கிலத்திலும் இந்தியா டுடே தளத்தில்
இன்னும் விவரமாக வெளியாகி உள்ளது … கீழே –
……
The Madras High Court on Friday took note of
the Sanatana Dharma controversy raked up by
DMK ministers recently.
The Madras High Court has issued significant
remarks amid the ongoing debate over Sanatana Dharma.
The court emphasised that Sanatana Dharma is
a set of eternal duties, including –
duty to the nation,
to the King,
to one’s parents and gurus,
and care for the poor, among others.
Justice N Seshasayee, who was hearing a petition
filed by one Elangovan, challenging a circular
issued by a local government Arts College asking
students to share their thoughts on the topic
‘Opposition to Sanathana’, expressed concern over
the vociferous and at times noisy debates
surrounding Sanatana Dharma.
He noted that an idea seems to have gained ground
that Sanatana Dharma is solely about promoting
casteism and untouchability,
- a notion he firmly rejected.
“Untouchability in a country of equal citizens
cannot be tolerated,” Justice Seshasayee stated.
“Even if it is seen as permitted somewhere within
the principles of ‘Sanatana Dharma’, it still
cannot have a space to stay, since Article 17
of the Constitution has declared that
untouchability has been abolished.”
The judge further stressed that
- while free speech is a fundamental right,
it should not devolve into hate speech,
particularly when it pertains to matters
of religion.
He underscored the need
for ensuring that no one is
injured by such a speech.
…………
…………………………………………………



Sir, sharing this post with your permission
Sridhar,
OK…Fine…
Please Give widest publicity / circulation
to this Message….
This request is for all friends
who have facebook, instagram, twitter etc. accounts…
People should understand the truth.
-with all Best Wishes,
Kavirimainthan
உயர்நீதி மன்றத்தின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையே. என்றாலும், பிற மதத்தினரை, அவற்றின் கருத்துக்களைப் பற்றிப் பேச இந்த ஆ.ராசா, உதயநிதி, அப்பாவு போன்ற கிறித்துவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?
அவர்கள் செய்யவேண்டியது, அவர்களின் மதத்தில் உள்ள தீண்டாமைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசி, ஜாதிக்கொரு கிறித்துவப் பிரிவு, பட்டியலினத்தினவருக்குக் கொடுக்காத உரிமைகள் பற்றிப் பேசி அவற்றைச் சரிசெய்வதுதான்.
என்ன சார் அவங்க என்ன அவ்வளவு முட்டாளா என்ன. ஆவணப்படி அவங்க எல்லாம் இன்னும் இந்துக்கள் தான்